Home
How to

டிஜிட்டல் கேமிராவை ஓரங்கட்டும் 'சூப்பர் 8' மொபைல் போட்டோகிராஃபி டிப்ஸ்..!

உங்கள் புகைப்படம் மட்டும் கொஞ்சம் அதிக ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென்றால் மொபைல் போட்டோகிராஃபியில் கொஞ்சம் முன்னோடியாக இருக்க வேண்டும்..!

எல்லோரும் தான் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி செல்பீ மற்றும் புகைப்படங்கள் எடுக்கிறாரக்ள். அதில் உங்கள் புகைப்படம் மட்டும் கொஞ்சம் அதிக ஸ்பெஷலாக இருக்க வேண்டுமென்றால் மொபைல் போட்டோகிராஃபியில் கொஞ்சம் முன்னோடியாக இருக்க வேண்டும்..!

உங்கள் மொபைலை மட்டுமே பயன்படுத்தி கொஞ்சம் அதிக தனித்துவம் மிக்க புகைப்பங்களை எடுப்பது அசாதாரணமான காரியம் என்று நினைக்க வேண்டாம். எளிமைதான். அதிலும் சில முக்கியமான மொபைல் போட்டோகிராஃபி டிப்ஸ்களை கைவசம் வைத்திருந்தால் மிக எளிமை தான்..!!

அப்படியாக இதோ உங்களுக்காக டிஜிட்டல் கேமிராவை ஓரங்கட்டும் அளவிலான எட்டு மொபைல் போட்டோகிராஃபி டிப்ஸ்..!

டிப்ஸ் #01

டிப்ஸ் #01

லென்ஸ் சுத்தம்.!

அவசியம் :

அவசியம் :

பெரும்பாலும் உங்கள் பாக்கெட்களிலேயே இருக்கும் ஸ்மார்ட்போன்களின் கேமிரா லென்ஸ்கள் நிச்சயமாக அழுக்காகத்தான் இருக்கும். ஆக அவைகள் நிச்சயமாக உங்கள் அழகான புகைப்படத்தை அழுக்காக்க கூடும். அதனால் லென்ஸ் சுத்தம் மிக அவசியம்..!

டிப்ஸ் #02

டிப்ஸ் #02

ஷார்ப் போக்கஸ்..!

அழகான புகைப்படம் :

அழகான புகைப்படம் :

புகைப்படத்தில் போக்கஸ் மிக அவசியம். ஃப்ரேம் மட்டும் அழகாக செட் செய்துவிட்டு சும்மா ஸ்க்ரீனில் ஒரு டாப் செய்தால் மட்டும் அழகான புகைப்படம் கிடைத்து விடாது. உங்கள் சப்ஜக்ட் மீது மிக அதிக போக்கஸ் இருக்க வேண்டும்.

டிப்ஸ் #03

டிப்ஸ் #03

எக்ஸ்ப்போஷரை (வெளிப்பாடு) சரி செய்தல்..!

கையாளுங்கள் :

கையாளுங்கள் :

பொதுவாகவே ஆட்டோ எக்ஸ்ப்போஷர் பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருந்தால் அதை மறந்து விடவும். வெளிப்பாடு செட்டிங்கை கையாளுங்கள், அப்போது தான் உங்கள் விருப்ப புகைப்படம் வெளிவரும்..!

டிப்ஸ் #04

டிப்ஸ் #04

ஸூம் வேண்டாம் மற்றும் க்ராப் நல்லது..!

புத்திசாலித்தனம் :

புத்திசாலித்தனம் :

ஸூம் செய்து புகைப்படம் எடுப்பதை விட நார்மல் ரேன்ஞ்சில் புகைப்படம் எடுத்துவிட்டு அதை க்ராப் செய்து கொள்வது புத்திசாலித்தனம். புகைப்படத்தின் தரம் குறையாமல் பார்த்துக் கொள்ள முடியும்..!

டிப்ஸ் #05

டிப்ஸ் #05

ரூல் ஆப் தேர்ட் (Rule of Third)

கூட்டமைவு :

கூட்டமைவு :

முப்பிரிவுகள் விதி (rule of thirds) கூட்டமைவு (composition) தொடர்பான ஒரு வழிகாட்டலாகும். குறுக்காகவும், நெடுக்காகவும் இரண்டு கோடுகள் வரைவதன் மூலம் ஒன்பது சமமான பாகங்களாகப் பிரிக்கலாம். அவற்றுள் ஒன்றையொன்று வெட்டும் நான்கு புள்ளிகள் குவியப்புள்ளிகளில் சப்ஜெக்ட் அமைவது போலிருந்தால் புகைப்படத்தின் சிறப்பு கூடும்.

டிப்ஸ் #06

டிப்ஸ் #06

லீடிங் லைன்ஸ் (Leading Lines)

பார்வையாளர்கள் :

பார்வையாளர்கள் :

லீடிங் கோடுகள் மற்றொரு எளிய கம்போஸ் வழிமுறையாகும். லீடிங் லைன்ஸ்களை பயன்படுத்துவதின் மூலம் உங்கள் சப்ஜெக்ட் முக்கிய பொருளாக பார்வையாளர்கள் மத்தியில் காட்சிப்படும், பின்னர் படத்தை ஆழமாக விவரிக்கும்.!

டிப்ஸ் #07

டிப்ஸ் #07

பல்வேறு கோணங்களை பயன்படுத்துதல்..!

கற்றல் மற்றும் முயற்சி :

கற்றல் மற்றும் முயற்சி :

உங்கள் புகைப்படம் வித்தியாசமாக இருக்க வேண்டுமெனில் முதலில் உங்கள் புகைப்படங்களின் கோணங்கள் முற்றிலும் வேறுபட வேண்டும் அதே சமயம் மிக அர்த்தமும் கொண்டிருக்க வேண்டும். இது படிப்படியான கற்றல் மற்றும் முயற்சி மூலமாகவே சாத்தியமாகும்..!

டிப்ஸ் #08

டிப்ஸ் #08

கவனச்சிதறல் பின்னணிகளை கவனிக்கவும்..!

தவிர்த்தல் :

தவிர்த்தல் :

கவனச்சிதறலை உண்டாக்கும் அல்லது ஒழுங்கீனமற்ற பின்னணியை தவிர்த்தல் வேண்டும். இல்லையெனில், நீங்கள் உங்கள் புகைப்படத்தின் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை புரிந்து கொள்வதில் சிரமம் ஏற்படும்..!

Best Mobiles in India

English summary
8 Mobile Photography Tips Every Smartphone Owner Should Know. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X