Home
How to

PF வட்டி பணம் 8.25% ஏறிடுச்சா? EPFஅக்கவுண்ட் வைத்து இருப்பவர்கள் முதலில் இதை பண்ணுங்க.. செக் செய்வது எப்படி?

அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால பாதுகாப்பிற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPF) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும், அதாவது மார்ச் 31ஆம் தேதி, ஊழியர்களின் இபிஎஃப் (EPF) கணக்கில் வட்டி தொகை வரவு வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், நடப்பு 2025-26 நிதியாண்டிற்கான பிஎஃப் கணக்கு வைப்புத்தொகைக்கு 8.25% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இருப்பினும், ஊழியர்கள் ஒரு முக்கிய விஷயத்தை கவனிக்க வேண்டும். உங்களது ஒட்டுமொத்த பங்களிப்பில், இபிஎஸ் (EPS - Employees' Pension Scheme) எனப்படும் ஓய்வூதியத் திட்டப் பகுதிக்கு எவ்வித வட்டியும் கணக்கிடப்பட மாட்டாது.

PF வட்டி பணம் 8.25% ஏறிடுச்சா? EPFஅக்கவுண்ட் இருந்தா இதை பண்ணுங்க!

இபிஎஃப் கணக்கில் இருக்கும் தொகைக்கு மட்டுமே இந்த 8.25% வட்டி கிடைக்கும். பிஎஃப் பங்களிப்பு எவ்வாறு பிரிக்கப்படும் என்றால், முதலில் மத்திய அறங்காவலர் வாரியம் (CBT) ஒரு ஆண்டுக்கான வட்டி விகிதத்தை முடிவு செய்கிறது. இபிஎஃப் விதிகளின்படி, ஊழியரின் அடிப்படைச் சம்பளம் (Basic Salary) மற்றும் அகவிலைப்படியில் (DA) இருந்து 12% தொகை பிஎஃப் கணக்கிற்குப் பிடிக்கப்படுகிறது.

உச்சவரம்பு வரம்பு ரூ.15,000 ஆக இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் (Employer) பங்களிப்பில் 3.67% தொகை ஊழியரின் இபிஎஃப் கணக்கிலும், மீதமுள்ள 8.33% தொகை ஊழியரின் இபிஎஸ் (ஓய்வூதியம்) கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுகிறது. ஆன்லைனில் பிஎஃப் கணக்கில் இருக்கும் தொகையை எப்படி பார்ப்பது என்பதற்கான விவரங்கள் இதோ

இபிஎஃப் பாஸ்புக்கை ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
மார்ச் மாதத்திற்கான பிஎஃப் பங்களிப்பு அப்டேட் செய்யப்பட்ட பிறகு, வட்டி தொகை கணக்கில் சேர்க்கப்படும். உங்கள் கணக்கில் வட்டி ஏறியுள்ளதா என்பதை ஆன்லைனில் எளிதாக சரிபார்க்கலாம். இபிஎஃப்ஓ போர்டல் வழியாக பார்க்கலாம் அல்லது உமாங் ஆப் வழியாகவும் பிஎஃப் பேலன்ஸை சரிபார்த்து கொள்ள முடியும்.

படி 1: முதலில், இபிஎஃப்ஓ அதிகாரப்பூர்வ போர்டலுக்கு செல்லவும். யுஏஎன் நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்.
படி 2: இப்போது, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதை கொடுக்கவும்.
படி 3: இபிஎஃப்ஓ முகப்பு பக்கம் ஓப்பன் செய்யப்பட்டவுடன், அதில் வியூ பாஸ்புக் (View Passbook) விருப்பும் இருக்கும். இதை கிளிக் செய்யவும்.
படி 4: இதில் ஊழியர் பங்கு (Employee Share), நிறுவனப் பங்கு (Employers Share) மற்றும் ஓய்வூதியப் பங்களிப்புகள் (EPS) இடம்பெறும். இதை வைத்து கணக்கிட்டு கொள்ளலாம்.

உமாங் ஆப் மூலம் பார்ப்பது எப்படி?
உமாங் (UMANG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யூனிஃபைட் மொபைல் அப்ளிகேஷன் ஃபர் நியூ ஏஜ் கவர்னஸ் (Unified Mobile Application for New-age Governance) ஆப் வழியாகவும் பிஎஃப் பேலன்ஸை சரிபார்க்க முடியும். இதில் யுஏஎன் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பரை பயன்படுத்த வேண்டும்.

படி 1: உமாங் ஆப்பை ஓப்பன் செயது, சேவைகள் (Services) கீழ் இருக்கும் ஊழியர் மைய சேவைகள் (Employee Centric Services) விருப்பத்துக்கு செல்லவும்.
படி 2: வியூ பாஸ்புக் (View Passbook) விருப்பத்தை கிளிக் செய்யவும். யுஏஎன் (UAN Number) கொடுக்கப்பட வேண்டும்.
படி 3: இப்போது, யுஏஎன் கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும். இதை கொடுக்கவும்.
படி 4: ஓப்பன் செய்தவுடன் நீங்கள் பார்க்க விரும்பும் நிறுவன கணக்கை (employer account) தேர்ந்தெடுக்கவும். இப்போது, பேலன்ஸ் தோன்றும்.

Best Mobiles in India

English summary
8.25 Percent Interest Credited PF Account Holders Need To Know This Process How to Check PF Balance
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X