Home
How to

உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும் என தெரியுமா?

ஸ்மார்ட்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது எனலாம். இந்த தொகுப்பை ஸ்மார்ட்போனிலும் நீங்கள் படிக்கலாம். பேச்சு வழக்கில், - இப்போ எல்லாம் முன்பு போல கிடையாது எல்லாம் மாறிடுச்சி - என சொல்வர். இந்த வாக்கியம் ஸ்மார்ட்போன்களின் சார்ஜர் கேபிள்களுக்கு அதிகம் பொருந்தும்.

உங்க சார்ஜர் கேபிள்களை பாதுகாப்பாக கையாள இவற்றை எல்லாம் செய்ய முடியும்

ஸ்மார்ட் சாதனங்களை பயன்படுத்துவோர் சார்ஜர் கேபிள்கள் அடிக்கடி பழுதாகிவிடுகிறது என்ற குற்றச்சாட்டை நிச்சயம் முன்வைக்கின்றனர். இவை அந்தளவு விரைவில் சேதமடையும் வகையில் உருவாக்கப்படுகிறதா? அல்லது நம் பயன்பாட்டில் மாற்றங்கள் தேவையா? என்பது அவரவர் பயன்பாடு மட்டுமே பதிலாக இருக்க முடியும். எதுவாக இருந்தாலும், சார்ஜர் கேபிள் அடிக்கடி பாழாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பத்திரமாக பார்த்து கொள்வது:

பத்திரமாக பார்த்து கொள்வது:

சார்ஜரை பயன்படுத்தி அதனை கழற்றும் போது பிளக் பகுதியை பிடித்துக் கொள்வது சிறப்பானதாக இருக்கும். பயன்பாடுகளின் போது இருபுறங்களை மடிக்காமல் பார்த்துக் கொள்வதும் அவசியமாகும். பயன்படுத்தாத சமயங்களில் அவற்றை பாதுகாப்பாக கேஸ் ஒன்றில் வைக்கலாம்.

கேபிள் ப்ரோடெக்டர்கள்:

கேபிள் பிளாஸ்டிக் அல்லது மெட்டல் பகுதியில் இணைக்கும் பகுதிகளில் கேபிள் ப்ரோடெக்டர்களை பாதுகாப்பு அணிகலனாக அணிவிக்கலாம். இவை சார்ஜர் கேபிள் எளிதில் பாழாவதை தவிர்க்கும்.

மேக்னெடிக் அடாப்டர்கள்:

மேக்னெடிக் அடாப்டர்கள்:

சார்ஜர் கேபிள் பாழாவதை தவிர்க்க மேக்னெடிக் அடாப்டர்கள் மிகவும் சரியான துணையாக இருக்கும். இவை வழக்கமான கேபிள்களை விட பயன்பாட்டில் வித்தியாசம் கொண்டிருப்பதால் எளிதில் பாழாகாது.

ஸ்ப்ரிங்:

ஸ்ப்ரிங்:

இது சற்று பழைய யோசனை தான் என்றாலும் இது இன்றளவும் சிறப்பாக செயல்படுகிறது. கேபிளினுள் ஸ்ப்ரிங் ஒன்றை செருகிவைத்தால், அது கேபிள் எளிதில் பாழாகாமல் பார்த்துக் கொள்ளும்.

எலெக்ட்ரிக் டேப்:

எலெக்ட்ரிக் டேப்:

சார்ஜர் கேபிள்களை பாதுகாக்கும் மற்றொரு குறைந்த பட்ஜெட் பொருளாக இது இருக்கிறது. எலெக்ட்ரிக் டேப் ஒன்றை சார்ஜர் கேபிள் முனைகளில் ஒட்டி வைக்கலாம்.

ஹீட் ஷ்ரின்கிங்:

ஹீட் ஷ்ரின்கிங்:

ஹீட் ஷ்ரின்க் டியூபிங் செய்தாலும், சார்ஜர் கேபிள்கள் உறுதியாகும்.


பாராகார்டு பிரேஸ்லெட்கள்:
சார்ஜர் கேபிள்களின் பாதுகாப்பை அதிகப்படுத்த பாராகார்டு பிரேஸ்லெட்களை பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
7 Tricks Will Help You Prevent Your Charger Cables From Breaking : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X