விண்டோஸ்10 பயனர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 7 டச்பேட் சைகைகள்

|

விண்டோஸ் 7 க்கு பிறகு வெளிவந்த வெர்சன்களிலேயே விண்டோஸ்10 தான் மிகவும் பிரபலமாக உள்ளது. ஸ்டார்கவுண்டர் என்னும் வெப் அனலிடிக்ஸ் நிறுவனத்தின் கணிப்பு படி, விண்டோஸ்10 கணிணி உலகில் 42.78% உள்ள நிலையில் விண்டோஸ்7 வெறும் 41.86% தான் உள்ளது. எனவே தற்போது விண்டோஸ்10 தான் கணிணி உலகின் முடிசூடா மன்னனாக வலம் வருகிறது.

விண்டோஸ்10 பயனர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய 7 டச்பேட் சைகைகள்

600 மில்லியன் சாதனங்களில் விண்டோஸ்10 இயங்கிவருவதாக கடந்த நவம்பர் மாதம் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. கணிணிகள், டேப்லெட், Xbox, ஹோலோலென்ஸ் ஹெட்செட் மற்றும் சர்பேஸ் ஹப் போன்ற சாதனங்களில் இயங்குகிறது. ஏன் உங்களின் பெரும்பாலான கருவிகளில் கூட விண்டோஸ்10 தான் ஆதிக்கம் செலுத்தும்! ஆனாலும் சில அம்சங்களை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

எடுத்துக்காட்டாக, மைக்ரோசாப்ட் விண்டோஸ் 10 ல் பல டச்பேட் சைகைகள் உள்ளன. இங்கு நீங்கள் கண்டிப்பாக அறிந்துகொள்ள வேண்டிய 7 டச்பேட் சைகைகளை தொகுத்துள்ளோம். மிகவும் துல்லியமான டச்பேடில் மட்டுமே இவை செயல்படும் என்பதால், உங்களுக்கு வேலைசெய்யவில்லை எனில் வருத்தப்பட வேண்டாம்.

ஸ்க்ரோல்

ஸ்க்ரோல்

இரண்டு விரல்களையும் டச்பேடில் வைத்து, செங்குத்தாகவோ கிடைமட்டமாகவோ நகர்த்தி ஸ்க்ரோல் செய்யலாம்.

ஜூம் இன் ஜூம் அவுட்

ஜூம் இன் ஜூம் அவுட்

இரண்டு விரல்களையும் டச்பேடில் வைத்து,உள்நோக்கியோ அல்லது வெளிநோக்கியோ இழுத்து ஜூம் இன் அவுட் செய்யலாம்.

கமெண்டுகளை பார்க்க

கமெண்டுகளை பார்க்க

இதற்கு இரண்டு விரல்களை வைத்து டச்பேடில் தட்டலாம் அல்லது டச்பேடின் வலது பக்க கீழ் மூலையை அழுத்தலாம்.

திறந்துள்ள அனைத்து விண்டோஸையும் பார்க்க

திறந்துள்ள அனைத்து விண்டோஸையும் பார்க்க

டச்பேடில் மூன்று விரல்களை வைத்து உங்களுக்கு எதிர் திசையில் தடவுவதன் (Swipe) மூலம்
திறந்துள்ள அனைத்து விண்டோஸையும் பார்க்கலாம்.

கார்டனோ-வை இயக்க

கார்டனோ-வை இயக்க

மைக்ரோசாப்ட் வெர்சுவல் அஸிஸ்டென்ட் கார்டனோ-வை இயக்க, உங்கள் மூன்று விரல்களை வைத்து டச்பேடில் தட்ட வேண்டும்.

8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது!8ஜிபி + 256ஜிபி மாடல் உறுதி; ஒன்ப்ளஸ் 6-ன் அதிகாரப்பூர்வ அம்சங்கள் வெளியானது!

திறந்துள்ள ஒரு விண்டோவில் இருந்து மற்றொன்றுக்கு மாற

திறந்துள்ள ஒரு விண்டோவில் இருந்து மற்றொன்றுக்கு மாற

இதனை செய்ய உங்கள் மூன்று விரல்களை டச்பேடில் வைத்து, வலது அல்லது இடதுபுறமாக தடவ வேண்டும்.

வெர்சுவல் கணிணிகளுக்கு இடையே மாற

வெர்சுவல் கணிணிகளுக்கு இடையே மாற

உங்கள் நான்கு விரல்களை டச்பேடில் வைத்து வலது அல்லது இடதுபுறமாக தடவ வேண்டும்.

Best Mobiles in India

English summary
Microsoft Windows 10 comes with many touchpad gestures. We have listed seven touchpad gestures that you should now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X