ஸ்மார்ட்போனில் ஹை ரெசலூசன் புகைப்படங்கள் எடுக்க 7 சிறந்த டிப்ஸ்கள்

By Lekhaka
|

ஒரு ஸ்மார்ட்போன் என்பது போன் பேச மட்டும் பயன்படுவதில்லை. நமது வாழ்க்கைக்கு தேவையான பல பொருட்கள் அதில் அடங்கியுள்ளது. அதில் ஒன்றுதான் கேமிரா.

ஸ்மார்ட்போனில் ஹை ரெசலூசன் புகைப்படங்கள் எடுக்க 7 சிறந்த டிப்ஸ்கள்

முன்பெல்லாம் புகைப்படம் எடுக்க அதற்கெனெ ஒரு தொகை செலவு செய்து அதன் டெக்னிக் எல்லாம் பழக வேண்டும். ஆனால் தற்போது நல்ல தரமான ஸ்மர்ட்போனில் அதிக எம்பி பவரில் சூப்பரான ஹை ரெசலூசன் புகைப்படங்களை எடுக்கலாம்.

தண்ணீரில் மிதக்கும் உலகின் முதல் ஸ்மார்ட்போன்!!

மேலும் புகைப்படங்கஆள் எடுப்பது மட்டுமின்றி ஒருசில ஆப்ஸ்களின் உதவியால் போட்டோ எடிட்டிங் மற்றும் டிசைன்களும் செய்து தூள் கிளப்பலாம். ஆனால் அதே நேரத்தில் ஸ்,மார்ட்போன் மூலம் ஹைரெசலூசன் புகைப்படங்கள் எடுப்பது எப்படி என்கிற டெக்னிக்களை நீங்கள் தெரிந்து வைத்து கொள்ள வேண்டும். இந்த டெக்னிக்குகள் குறித்து தற்போது பார்ப்போம்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமிராவில் கிரிட்லைன்ஸ்களை பயன்படுத்துங்கள்

கேமிராவில் கிரிட்லைன்ஸ்களை பயன்படுத்துங்கள்

கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போனிலும் கிரிட்லைன்ஸ் என்ற ஆப்சன் கண்டிப்பாக இருக்கும். நீங்கள் புகைப்படம் எடுப்பதற்கு முன்னர் இந்த ஆப்சனை ஆன் செய்து கொள்ளுங்கள். இதனால் நீங்கள் எடுக்கும் புகைப்படம் தெளிவாகவும், ஹைரெசலூசனிலும் இருக்கும். பார்ப்பவர்கள் மிக உயரந்த கேமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்று நினைப்பதற்கு வழிவகுக்கும்.

நெகட்டிவ் ஸ்பேஸ் இருக்க வேண்டும்

நெகட்டிவ் ஸ்பேஸ் இருக்க வேண்டும்

நெகட்டிவ் ஸ்பேஸ் என்பது நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை சுற்றியுள்ள இடங்களை எம்ப்ட்டி ஆக்குவதுதான். இந்த நெகட்டிவ் ஸ்பேஸ் ஆப்சனை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்தால் புகைப்படம் மிகச்சிறந்ததாக இருக்கும்.

பிரதிபலிப்புடன் விளையாடுங்கள்

பிரதிபலிப்புடன் விளையாடுங்கள்

நீங்கள் ஆற்றிலோ குளத்திலோ வானமும் நிலவும் தண்ணீருக்குள் பிரதிபலிப்பதை பார்த்திருப்பீர்கள். இந்த அழகான காட்சியை காண கோடி கண்கள் தேவைப்படும். இப்படிப்பட்ட அழகான பிரதிபலிப்பை வானமும் நிலவும் மட்டும்தான் இருக்க வேண்டுமா? ஏன் நீங்கள் இருக்கக்கூடாதா?

புகைப்படம் எடுக்கும்போது ரிபெளக்ஷன் என்ற ஆப்சனை பயன்படுத்தினால் படம் சூப்பரான அவுட்புட்டை தரும். ஸ்மார்ட்போனில் பலவிதமான ரிப்ளக்ஷன்கள் இருக்கும். தண்ணீர், கண்ணாடி, சன்கிளாஸ், ஆகிய பல வித்தியாசமான ரிப்ளக்ஷன்களை பயன்படுத்தி மகிழுங்கள்

லீடிங் லைன்கள் என்றால் என்ன தெரியுமா?

லீடிங் லைன்கள் என்றால் என்ன தெரியுமா?

ஸ்மார்ட்போன் கேமிராவில் லீடிங் லைன்கள் என்ற ஆப்சனை பயன்படுத்தி புகைப்படங்கள் எடுத்தால் புதுவித அனுபவங்களை பெறலாம். நேரான, வட்டமான, குறுக்கான என பலவித லைன்களை பயன்படுத்தி உங்கள் புகைப்படங்களை வித்தியாசம் ஆக்குங்கள்

தொடர்பை சேமிக்காமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி..?தொடர்பை சேமிக்காமலேயே வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி..?

பேட்டர்ன்களையும் பயன்படுத்தலாமே...

பேட்டர்ன்களையும் பயன்படுத்தலாமே...

ஸ்மார்ட்போன் கேமிராவில் லைன், கலர், பேட்டர் மற்றும் ஜியாமெட்ரிக் ஷேப் ஆகிய பலவகை வசதிகள் உள்ளன. இவை நாம் எடுக்கும் புகைப்படங்களை மேலும் மெருகேற்ற உதவும். பேட்டர்ன்களின் உதவியால் வித்தியாசமான புகைப்படங்களை எடுத்தால் நீங்கள் ஒரு தொழில்முறை போட்டோகிராபராக மாறிவிடலாம்.

ஜூம் செய்வதை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள்

ஜூம் செய்வதை முடிந்த அளவு தவிர்த்துவிடுங்கள்

ஜூம் செய்து புகைப்படம் எடுத்தால் புகைப்படத்தின் ஒரு பகுதியை மட்டும் நாம் கவர் செய்யலாம் என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில் ஒரு தரமான புகைப்படத்திற்கு ஜூம் தேவையில்லை என்பதுதான் புகைப்பட கலைஞர்களின் கருத்தாக உள்ளது. ஜூம் செய்தால் புகைப்படத்தின் தரம் குறையும் என்பதுதான் நிதர்சனமான உண்மை

எடிட்டராக மாறுங்கள் பயப்படாமல்!!

எடிட்டராக மாறுங்கள் பயப்படாமல்!!

ஒரு புகைப்படத்தை அழகுபடுத்துவது என்பது புகைப்படம் எடுப்பது மட்டுமல்ல. புகைப்படம் எடுத்த பின்னர் நீங்கள் ஒரு தேர்ந்த எடிட்டராக மாற வேண்டும். பயப்படாமல் அடுத்த ஸ்டெப் ஆன எடிட்டிங்கை தொடருங்கள். எடிட்டிங் செய்ய செய்ய நீங்கள் புகைப்படங்களை ஒரு ஓவியமாக கூட மாற்றலாம்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Learn helpful tips for taking your smartphone photography game from good to great.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X