Home
How to

இதெல்லாம் அலெக்சா செய்யும் ஆனால் கூகுள் ஹோம் செய்யாது.!

அலெக்சா பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும் என்பதால் அமேசானில் ஆர்டர் செய்த பொருட்களை அலெக்சா மூலம் டிராக் செய்ய முடியும்.

By Meganathan S

அமேசான் எக்கோ செய்யாத பலவற்றஐ கூகுள் ஹோம் செய்யும் என்ற வகையில், இதற்கு முரணாகவும் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. கான்டெக்ஸ்ச்சுவல் கான்வெர்சேஷன்கள் முதல் புகைப்படம் அல்லது வீடியோக்களை தொலைகாட்சிகளில் செலுத்த முடியும். அமேசான் எக்கோ அலெக்சாவுடன் பார்க்கும் போது பல்வேறு வசதிகளை கொண்டுள்ளது.

இதெல்லாம் அலெக்சா செய்யும் ஆனால் கூகுள் ஹோம் செய்யாது.!

கூகுளும் தன் பங்கிற்கு பல்வேறு புதிய வசதிகளை தனது ஹோம் ஸ்பீக்கரில் சேர்த்து வருகிறது. இந்த பட்டியில் குறைந்து வந்தாலும் கூகுள் ஹோம் மேலும் செய்யக்கூடிய ஏழு அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

குறிப்பு: இந்த தொகுப்பில் கூகுள் அசிஸ்டண்ட் பெரும்பாலும் அமேசான் அலெக்சாவுடன் ஒப்பிடப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் இரு சாதனங்களும் வாய்ஸ் அசிஸ்டண்ஸ் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதே ஆகும். மொபைல் போன்களில் இருப்பதை விட கூகுள் ஹோம் சாதனங்களில் கூகுள் அசிஸ்டண்ட் முற்றிலும் வேறு விதமாக வேலை செய்யும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

டிராக் பேக்கேஜ்

டிராக் பேக்கேஜ்

அலெக்சா பயன்படுத்தி பொருட்களை வாங்க முடியும் என்பதால் அமேசானில் ஆர்டர் செய்த பொருட்களை அலெக்சா மூலம் டிராக் செய்ய முடியும். அலெக்சாவிடம் "Alexa, where's my stuff?" என கேட்டால் போதும், கேட்ட கேள்விக்கு ஏற்ற பதில்களை மிகவும் கச்சிதமாக அலெக்சா வழங்கும். அதாவது நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது, எந்த தேதியில் உங்களுக்கு கிடைக்கும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை வழங்கும்.

இந்த அம்சம் கூகுள் அசிஸ்டண்ட் மொபைல் போன்களில் ஏற்கனவே சேர்க்கப்பட்டு விட்ட நிலையில் கூகுள் ஹோம் சாதனத்தில் இதுவரை சேர்க்கப்படாமல் உள்ளது. கூகுள் ஹோம் சாதனத்திலும் ஆன்லைனில் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்களை டிராக் செய்யும் வசதி உள்ளது, ஆனால் பேக்கேஜகளை டிராக் செய்வது குறுத்து எவ்வித தகவலும் இடம்பெறவில்லை.

கூகுளிடம் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் எங்கிருக்கிறது என கேட்டால், இந்த தகவல் இப்போதைக்கு என்னிடம் இல்லை என்ற பதிலை வழங்கும்.

டெலிவரி நோட்டிபிகேஷன்கள்

டெலிவரி நோட்டிபிகேஷன்கள்

ரிமைன்டர்கள் மற்றும் அழைப்புகளுக்கு கூகுள் ஹோம் தற்சமயம் நோட்டிபிகேஷன்களை சப்போர்ட் செய்கிறது, எனினும் நீங்கள் ஆர்டர் செய்த பொருட்கள் குறித்த நோட்டிபிகேஷன்களை கூகுள் ஹோம் வழங்காது. அலெக்சா இது போன்ற தகவல்களையும் நோட்டிபிகேஷன்களாக வழங்கும்.

அமேசான் மியூசிக் மற்றும் பிரைம் மியூசிக்

அமேசான் மியூசிக் மற்றும் பிரைம் மியூசிக்

கூகுள் ஹோம் அறிமுகம் செய்யப்படும் போது கூகுள் பிளே மியூசிக், யூடியூப் மியூசிக், ஸ்பாட்டிஃபை, பன்டோரா மற்றும் டியூன்இன் உள்ளிட்ட சேவைகளை சப்போர்ட் செய்தது. பின் ஐஹார்ட்ரேடியோ சேவையும் சேர்க்கப்பட்டது.

அமேசான் அலெக்சாவில் இதே சேவைகள் மற்றும் அமேசானின் அமேசான் மியூசிக் மற்றும் பிரைம் மியூசிக் சேவையை பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது.

அமேசான் மியூசிக் மற்றும் பிரைம் மியூசிக் சேவைகளை அதிகாரப்பூர்வமாக சப்போர்ட் செய்யாது என்றாலும் கூகுள் ஹோம் கொண்டு எவ்வித இசையையும் ஸ்மார்ட்போன் அல்லது டேப்ஸெட் மூலம் இயக்க முடியும். அமேசான் மியூசிக் ஆப் க்ரோம்காஸ்ட் சப்போர்ட் வழங்காது என்பதால் ஐஓஎஸ் சாதனத்தில் ஆடியோவை ஸ்ட்ரீம் செய்ய முடியாது.

வாய்ஸ் ரிமோட்

வாய்ஸ் ரிமோட்

அமேசான் எக்கோவை வழக்கத்தை விட கூடுதல் தூரத்தில் இருந்து இயக்க அலெக்சா வாய்ஸ் ரிமோட் சாதனத்தை வெறும் 30 டாலர்கள் கொடுத்து வாங்கிடலாம். (இந்த சாதனம் தற்சமயம் வரை லண்டன் மற்றும் ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்படவில்லை.)

இதே வசதியை பெற கூகுள் ஹோம் சாதனத்துடன் மற்றொரு கூகுள் ஹோம் சாதனத்தை 129 டாலர்கள் கொடுத்து வாங்க வேண்டும்.

மூன்றாம் தரப்பு செயலிகள்

மூன்றாம் தரப்பு செயலிகள்

அமேசான் அலெக்சாவில் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தும் வசதிகள் வழங்கப்படுகின்றன. டெவலப்பர் ஒருவர் உருவாக்கிய எக்கோசிம்.ஐஒ சேவையை கொண்டு டெவலப்பர்கள் தங்களுக்கென பிரத்யேத வன்பொருள் இல்லாமல் சோதனை செய்யும் வசதியை பெற முடியும்.

ஆடியோ ஸ்ட்ரீம் செய்வது மட்டுமின்றி அலெக்சாவின் விர்ச்சுவல் வெர்ஷன்கள் அமேசான் அதிகாரப்பூர்வ சாதனங்கள் போன்றே வேலை செய்யும். இதனால் அமேசான் ஸ்பீக்கர்களுக்கு செலவிடாமல் அலெக்சாவின் முழு திறனையும் பயன்படுத்த முடியும்.

How to Find a domain easily for your business (TAMIL)
தானம் வழங்கலாம்

தானம் வழங்கலாம்

உங்களது நன்கொடை திட்டங்களை அமேசான் ஸ்பீக்கர் மூலம் நிறைவேற்ற முடியும். சமீபத்தில் வழங்கப்பட்ட அப்டேட் மூலம் தொன்டு நிறுவனங்களுக்கு அமேசான் அலெக்சா மூலம் நன்கொடை வழங்க முடியும். இதற்கென அலெக்சா பல்வேறு அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்துள்ளது.

ஷெட்யூல்
கூகுள் ஹோம் மற்றும் அலெக்சா ஸ்பீக்கர்களின் சமீபத்திய அப்டேட்களில் ரொட்டீன்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டது. இந்த அம்சத்தை கொண்டு ஒற்றை கமாண்ட் மூலம் பல்வேறு ஆக்ஷன்களை பெற முடியும். அலெக்சாவின் ரொட்டீன்கள் அம்சம் ஷெட்யூல் மூலம் ஆக்டிவேட் செய்ய முடியும். இதனால் அலெக்சா கொண்டு மின்விளக்குகளை இயக்கவோஸ அல்லது விரும்பும் பாடல்களை கேட்கவோ முடியும்.

Best Mobiles in India

English summary
7 things Amazon Echo can do that Google Home can't; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X