இந்த விஷயம் தெரிஞ்ச பிறகு.. அடிக்கடி Phone-க்கு சார்ஜ் போட வேண்டிய வேலையே இருக்காது! என்னது அது?

|

உங்களில் சிலர் கவனித்து இருக்கலாம். சிலர் எப்போதுமே மொபைல் போனை (Mobile Phone) நோண்டிக்கொண்டே இருப்பார்கள் ஆனால் அவர்கள் எப்போதாவது தான் தங்கள் ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்வார்கள்.. அது ஏன் என்று தெரியுமா?

அது ஏன் என்றால்.. அவர்களுக்கு தங்கள் மொபைல் போனின் பேட்டரி லைஃப்-ஐ எப்படி சீராக வைக்க வேண்டும்? எப்படி மெயின்டெய்ன் செய்ய வேண்டும்? என்று தெரியும். அதை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால்.. தொடர்ந்து படிக்கவும்.

நீங்கள் நினைத்து கூட பார்க்காத ஒரு காரணம்!

நீங்கள் நினைத்து கூட பார்க்காத ஒரு காரணம்!

ஒரு ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது மிகவும் வேகமாக காலி ஆவதற்கு பின்னால் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமான, மற்றும் நம்மில் பலரும் யூகித்து கூட பார்க்க முடியாத ஒரு காரணம் உள்ளது.

அதுதான் - கல்பிங் ஆப்ஸ் (Gulping Apps). அதாவது, உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைல் போனின் பேட்டரியை உறிஞ்சி குடிக்கும் ஆப்கள். நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியானது ட்ரெயின் (Drain) ஆவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று - ஆப்கள் தான்!

விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!விஷயம் ரொம்ப சீரியஸ்! உடனே இந்த Settings-ஐ மாத்துங்க.. இல்லனா உங்க WhatsApp அக்கவுண்ட் - கோயிந்தா தான்!

4ஜி போன்களுக்கு தர்ம அடி.. 5ஜி போன்களுக்கு மரண அடி!

4ஜி போன்களுக்கு தர்ம அடி.. 5ஜி போன்களுக்கு மரண அடி!

"அடிக்கடி லோ பேட்டரி" (Low Battery) தொடர்பான இன்னொரு கசப்பான உண்மை என்னவென்றால், 4ஜி ஸ்மார்ட்போன்களை விட 5G ஸ்மார்ட்போன்கள் தான் மிகவும் மோசமாக பாதிக்கப்பட உள்ளது!

அதாவது இப்போது (4ஜி போன்கள் வழியாக) நீங்கள் சந்திக்கும் லோ பேட்டரி பிரச்சனைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை.

5ஜி நெட்வொர்க்கின் கீழ் இயங்கும் ஸ்மார்ட்போன்களின் பேட்டரி ஆனது "ஒப்பீட்டளவில்" மிகவும் வேகமாக காலி ஆவதை வல்லுநர்களே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

7 விஷயங்களில் ஒன்றை செய்தால் கூட போதும்!

7 விஷயங்களில் ஒன்றை செய்தால் கூட போதும்!

ஆகமொத்தம், இனிமேல் தான் உண்மையான பிரச்சனைகளே காத்திருக்கிறது. இருந்தாலும் கவலைப்பட வேண்டாம்!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்க உதவும் 7 எளிமையான டிப்ஸ்கள் (Simple Tips) உள்ளன. அவைகளில் ஏதேனும் சிலவற்றை செய்தாலும் கூட போதும். உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

ஒருவேளை கீழ் வரும் 7 டிப்ஸ்களையும் முயற்சி செய்யலாமா என்று கேட்டால்.. தாராளமாக செய்யலாம்! அதில் எந்த தவறும் இல்லை. சரி வாருங்கள் அதென்ன டிப்ஸ்? என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்!

100-க்கு 95 பேருக்கு தெரியாது.. மெசேஜ் அனுப்புவது தொடர்பாக இப்படி ஒரு சீக்ரெட் Setting இருக்குன்னு!100-க்கு 95 பேருக்கு தெரியாது.. மெசேஜ் அனுப்புவது தொடர்பாக இப்படி ஒரு சீக்ரெட் Setting இருக்குன்னு!

01.

01. "இந்த" ஆப்பிள் தான் - முக்கிய குற்றவாளிகள்!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை உறிஞ்சும் ஆப்களில் - சோஷியல் மீடியா ஆப்கள் (Social Media Apps) தான் "முக்கிய குற்றவாளிகள்" ஆகும்!

ஏதாவது அப்டேட்ஸ் இருக்கிறதா? ஏதேனும் நோட்டிஃபிக்கேஷன்களை காட்சிப்படுத்த வேண்டுமா? என எப்போதுமே பேக்கிரவுண்டில் இயங்கி கொண்டே இருக்கும் ஆப்கள் என்றால் - அது சோஷியல் மீடியா ஆப்கள் தான்!

எனவே, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், ட்விட்டர், டிண்டர் போன்ற சோஷியல் மீடியா ஆப்களில் - எது தேவை இல்லையோ, அதன் - நோட்டிஃபிக்கேஷன்களை நிறுத்தி வைக்கவும்!

இது ஒரு சின்ன காரியம் தான் ஆனால் பேட்டரி லைஃப்பில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்!

02. சூட்டோடு சூடாக...

02. சூட்டோடு சூடாக... "இதையும்" செய்து விடுங்கள்!

தேவை இல்லாத நோட்டிஃபிக்கேஷன்களை டிசேபிள் செய்த கையோடு சோஷியல் மீடியா ஆப்களின் பேக்கிரவுண்ட் டேட்டா பயன்பாட்டையும் (Background data usage) கட்டுப்படுத்துங்கள்.

இதை செய்வதன் வழியாக, நீங்கள் ஒரு குறிப்பிட்ட சோஷியல் மீடியா ஆப்பில் இருந்து வெளியேறியதுமே, அது ஃப்ரீஸ் (Freeze) ஆகிவிடும் அல்லது முற்றிலும் ஷட் டவுன் (Shut Down) செய்யப்படும்.

எனவே அவைகளால் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரியை சீரழிக்க முடியாது! Background data usage-ஐ கட்டுப்படுத்தும் முறை Android மற்றும் iOS ஆகிய இரண்டிலுமே கிடைக்கிறது.

கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!கதை முடிஞ்சது போங்க! தண்ணீ தெளிச்சு.. துணி வச்சி TV-ஐ துடைப்பீங்களா? அலெர்ட் ஆகிக்கோங்க!

03. யோசிக்கவே வேண்டாம்.. தேவை இல்லாத நேரங்களில் 'ஆஃப்' செஞ்சிடுங்க!

03. யோசிக்கவே வேண்டாம்.. தேவை இல்லாத நேரங்களில் 'ஆஃப்' செஞ்சிடுங்க!

உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆனது தேவை இல்லாமல் வீண் ஆவதை தடுக்க விரும்புபவர்கள் - கொஞ்சம் கூட யோசிக்காமல் ஒரு வேலை செய்ய வேண்டும்.

அது என்னவென்றால், தேவை இல்லாத நேரங்களில் மொபைல் டேட்டா அல்லது வைஃபையை ஆஃப் செய்வதே ஆகும்.

தூங்கும் போது, குளிக்கும் போது, சாலையில் வாகனம் ஓட்டும் போது, முக்கியமான மீட்டிங்கில் இருக்கும் போது, தியேட்டரில் சினிமா பார்க்கும் போது என இப்படி பல இடங்களில் உங்கள் ஸ்மார்ட்போனை உங்களால் பயன்படுத்தவே முடியாது அல்லவா?

அதுபோன்ற நேரங்களில் மொபைல் டேட்டாவை அல்லது வைஃபையை ஆப் செய்து விடவும்; இது நிச்சயம் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்-ஐ அதிகரிக்கும்!

04. 'லைட்' வெர்ஷன்களை புறக்கணிக்க வேண்டாம்!

04. 'லைட்' வெர்ஷன்களை புறக்கணிக்க வேண்டாம்!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற முக்கியமான சோஷியல் மீடியா ஆப்களுக்கு லைட் வெர்ஷன்கள் (Light Versions) உள்ளன.

பொதுவாக லைட் வெர்ஷன்கள் ஆனது குறைந்த அளவிலான ரிசோர்ஸ்களையே எடுத்துக்கொள்ளும். இது டேட்டா நுகர்வை குறைப்பதோடு சேர்த்து மொபைல் பேட்டரியின் பயன்பாட்டையும் குறைக்கும்!

ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?ஓட்டல் ரூம்களில் ஒளிந்திருக்கும் சீக்ரெட் கேமரா.. உங்கள் ஸ்மார்ட்போனை வைத்தே கண்டுபிடிப்பது எப்படி?

05. பேசாமல் வெப்சைட்டிற்கு போயிடுங்க!

05. பேசாமல் வெப்சைட்டிற்கு போயிடுங்க!

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சோஷியல் மீடியாக்களை, ஆப்களின் வழியாக பயன்படுத்துவது போல, அந்தந்த சோஷியல் மீடியாக்களின் வெப்சைட் வெர்ஷன்களையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.

மொபைலில் உள்ள பேஸ்புக் ஆப் ஆனது மிகப்பெரிய பேட்டரியை உறிஞ்சும் மறுகையில் அதன் வெப்சைட் வெர்ஷன் ஆனது மிகவும் குறைவான அளவிலேயே பேட்டரியை பயன்படுத்துகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டருக்கும் கூட இதையே கூறலாம்!

06. லோ பவர் மோட் அல்லது லோ பேட்டரி மோட்!

06. லோ பவர் மோட் அல்லது லோ பேட்டரி மோட்!

எப்போதெல்லாம் முடிகிறதோ, அப்போதெலாம் லோ பவர் மோட் (Low Power Mode) அல்லது லோ பேட்டரி மோட்-ஐ (Low battery mode) இயக்கலாம். இந்த அம்சம் iOS மற்றும் Android ஆகியே இரண்டிலுமே கிடைக்கிறது.

இதை நீங்கள் எனேபிள் செய்யும் பட்சத்தில், பேக்கிரவுண்ட்டில் நடக்கும் ஆப் அப்டேட்கள் நிறுத்தப்படும் மற்றும் அடிப்படை செயல்பாடுகளை மட்டுமே செய்யும்படி மொபைல் போனின் சிஸ்டம் ஆனது கட்டுப்படுத்தப்படும்.

சில ஆண்ட்ராய்டு போன்களில் அல்ட்ரா பேட்டரி சேவர் மோட் (Ultra Battery Saver mode). அது இன்னும் திறம்பட செயல்படும்; முடிந்த அளவில் மொபைல் போன் பேட்டரியை சேமிக்கும்!

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

07. டாஸ்க் ஸ்விட்ச்சர்!

07. டாஸ்க் ஸ்விட்ச்சர்!

கடைசியாக, ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டிலுமே அணுக கிடைக்கும் டாஸ்க் ஸ்விட்ச்சரை (Task Switcher) ஓப்பன் செய்யலாம். இது ஆப்களை போர்ஸ் க்ளோஸ் (Force close) செய்ய உதவும் மறுகையில் உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப்யையும் மேம்படுத்தும்!

Best Mobiles in India

English summary
7 simple tips to stop the mobile apps which draining your phone battery and improve battery life

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X