Home
How to

ஐபோன் காலென்டரில் இதெல்லாம் செய்யலாம்னு உங்களுக்கு தெரியுமா?

குடும்பத்துடன் பயன்படுத்த நீங்கள் பிரைமரி ஷெட்யூலராக இருந்தால், டீஃபால்ட் காலென்டரில் ஹோம் ஆப்ஷனில் இருந்து ஃபேமலிக்கு மாற்ற வேண்டும்.

By Meganathan S

புத்தம் புதிய ஐபோனினை செட்டப் செய்யும் போது பல்வேறு அம்சங்களை கவனிக்க வேண்டியதோடு, சில செட்டிங்களை சரியாக டியூன் செய்ய வேண்டும். பல்வேறு செயலிகளுடன் ஸ்டாக் ஐஓஎஸ் காலென்டர் செயலியை சரியாக டியூன் செய்தால் இதனை முற்றிலும் சிறப்பான முறையில் பயன்படுத்தலாம்.

செட்டப் செய்யும் முன் சிலவற்றை செய்தால் காலென்டர் ஆப் உங்களுக்கு பல்வேறு பயன்களை வழங்கும். அந்த வகையில் காலென்டர் வழங்கும் ஏழு தந்திரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபேமிலி காலென்டர்

ஃபேமிலி காலென்டர்

ஃபேமிலி காலென்டர் அம்சத்தை பயன்படுத்த துவங்கினால் குடும்பத்தாருடன் விவாதிக்க பல்வேறு பயன்களை பெற முடியும். மற்ற அம்சங்களுடன் ஃபேமிலி ஷேரிங் அம்சத்தையும் பயன்படுத்தினால் ஃபேமிலி காலென்டர் உங்களுக்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது.

நினைவூட்டல்

நினைவூட்டல்

ஐபோன் பயன்படுத்தும் குடும்பத்தாருடன் நிகழ்வு ஒன்றுக்கு தயாராக ஸ்டார்ட் மற்றும் என்ட் டைம்களிடையே ஸ்கிரால் செய்தால் காலென்டர் ஆப்ஷனை பார்க்க முடியும். காலென்டர் ஆப்ஷனை க்ளிக் செய்து ஃபேமிலி காலென்டரில் நிகழ்வுக்கான திட்டமிடலை துவங்கலாம்.

டீஃபால்ட் காலென்டர்

டீஃபால்ட் காலென்டர்

குடும்பத்துடன் பயன்படுத்த நீங்கள் பிரைமரி ஷெட்யூலராக இருந்தால், டீஃபால்ட் காலென்டரில் ஹோம் ஆப்ஷனில் இருந்து ஃபேமலிக்கு மாற்ற வேண்டும். இதை செய்ய செட்டிங்ஸ் -- காலென்டர் -- டீஃபால்ட் காலென்டர் -- ஃபேமிலி ஆப்ஷன்களை க்ளிக் செய்யலாம்.

உங்களது காலென்டர் செயலி உங்களை முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் மற்றும் பிறந்த நாள் போன்ற சிறப்பு நாட்களை மறக்க வேண்டிய சூழல் ஏற்படாது. இதை செட்டப் செய்ய செட்டிங்ஸ் -- காலென்டர் -- டீஃபால்ட் அலெர்ட் டைம்ஸ் -- அலெர்ட் ஃபார் ஆப்ஷன்களை க்ளிக் செய்யலாம்.

 விடுமுறை மற்றும் பிறந்த நாள்

விடுமுறை மற்றும் பிறந்த நாள்

காலென்டர் ஆப் விடுமுறை நாட்கள் மற்றும் பிறந்தநாள் உள்ளிட்டவற்றை முன்கூட்டியே நினைவூட்டும் என்பதால் குறிப்பிட்ட வாரத்தை சிறப்பாக திட்டமிட முடியும். பிறந்த நாள் அல்லது விடுமுறை மற்றும் இரண்டு ஆப்ஷன்களையும் காலென்டரில் இருந்து அழிக்க முடியும். இதை செய்ய காலென்டர் செயலியின் கீழ் உள்ள காலென்டர்ஸ் செயலியை க்ளிக் செய்து கீழ் உள்ள பிறந்த நாள் மற்றும் விடுமுறை ஆப்ஷன்களை அன்செக் செய்ய வேண்டும்.

சந்தா செலுத்தி சேமிக்கலாம்

சந்தா செலுத்தி சேமிக்கலாம்

இந்த ஆப்ஷன் குறிப்பிட்ட குழுவின் காலென்டருக்கு சந்தாதாரர் ஆகும் பட்சத்தில், குழுவில் திட்டமிடப்படும் நிகழ்வுகள் தானாக காலென்டரில் அப்டேட் செய்யப்படும். மீண்டும் திட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படும் போதும் அதற்கான அப்டேட் தானாக செயல்படும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
வார நிகழ்வுகள்

வார நிகழ்வுகள்

காலென்டரில் உள்ள கோ-டு- வியூ அம்சம் மாதம் மற்றும் வார அடிப்படையில் திட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை பட்டியலிட்டு காண்பிக்கும். இதில் ஒவ்வொரு தினத்திற்கும் திட்டமிடப்பட்டு இருக்கும் நிகழ்வுகளை பார்க்க முடியும்.

டிராக் மற்றும் ரீ-ஷெட்யூலிங்

டிராக் மற்றும் ரீ-ஷெட்யூலிங்

நீங்கள் உருவாக்கும் திட்டங்களை மாற்றியமைக்க எளிமையான வழிமுறை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நிகழ்வை க்ளிக் செய்து எடிட் ஆப்ஷனில் மாற்ற வேண்டிய தேதி மற்றும் நேரம் உள்ளிட்டவற்றை பதிவிட வேண்டும். நாள் அல்லது வார அடிப்படையில் பார்க்க குறிப்பிட்ட நிகழ்வை அழுத்தி பிடிக்க வேண்டும்.

நிகழ்வு தேர்வு செய்யப்பட்டதும் அதனை இழுத்து புதிய தேதி மற்றும் நேரத்தில் அதனை மாற்ற முடியும். நேரத்தை மாற்றியமைக்க குறிப்பிட்ட நிகழ்வில் உள்ள கடிகாரத்தின் நேரத்தை மேல்பக்கம் அல்லது கீழ்பக்கமாக டிராக் செய்தாலே போதுமானது.

Best Mobiles in India

English summary
7 iPhone calendar tips everyone should know ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X