ஸ்மார்ட்போனின் கேமரா மூலம் டிவி ரிமோட் பேட்டரியை 'செக்' செய்வது எப்படி.?

  நம் கைகளுக்குள் தவழும் ஸ்மார்ட்போன்களானது, அலாரம் - கைக்கடிகாரம் தொடங்கி டிஎஸ்எல்ஆர் கேமரா வரையிலாக அனைத்து இதர கேஜெட்களையும் விழுங்கி தன்னுள் கொண்டுள்ளதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.

  நீங்கள் என்னதான் பெரிய 'கேடி ரங்கா கில்லாடி பில்லா'வாக இருந்தாலும் கூட சில இரகசியமான மற்றும் தந்திரமான ஸ்மார்ட்போன் சீக்ரெட்ஸ்களை அறிந்திருக்க அதிகம் வாய்ப்பில்லை. அப்படியாக, இதெல்லாம் கூட ஒரு ஸ்மார்ட்போன் கொண்டு செய்ய முடியுமா.? என்று உங்களை ஆச்சரியப்படுத்தும் சுவாரசியமான டிப்ஸ்களை உள்ளடக்கியதே இந்த தொகுப்பு.

  வேண்டாம், வேண்டாம்.. நன்றியெல்லாம் சொல்ல வேண்டாம் - இம்மாதிரியான ஸ்மார்ட்போன் சீக்ரெட்ஸ்களை வெளிப்படுத்துவதெல்லாம் என்ன பெருமையா.? எங்கள் கடமை.!

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 07: சாலை பயணத்தை அதிக பாதுகாப்பாக்கும்.!

  ஒருவேளை நீங்கள் இருட்டான இடத்தில், விளக்குகள் அல்லாத சாலையில் வாகனத்தை ஓட்டிய அனுபவத்தை கொண்டிருந்தால் உங்கள் கண்களை எப்போதும் சாலையில் வைத்திருப்பது எவ்வளவு கடினமானதொரு பணி என்பதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். இனிமே அந்த கடினத்தன்மையை நீங்கள் உணரவே மாட்டர்கள். அதை HUDWAY என்கிற பயன்பாடு உறுதி செய்யும்.

  வாகனத்தின் வேகம் மற்றும் ஜிபிஎஸ்-மேட் வரைபடம்

  பிரைட்னஸ் அமைப்புகளை சரி செய்து, இந்த ஆப்பை திறந்து, உங்கள் தொலைபேசியை வாகனத்தின் டாஷ்போர்டில்வைத்தால் போதும் உங்களுக்குத் தேவைப்படும் எல்லா தகவல்களையும் நீங்கள் பெறுவீர்கள்: வாகனத்தின் வேகம் மற்றும் நீங்கள் செல்ல வேண்டிய பாதைகளை காட்சிப்படுத்தும் ஒரு ஜிபிஎஸ்-மேட் வரைபடம் ஆகியவைகளை இந்த ஆப் உங்கள் கண்ணாடியில் ப்ரொஜெக்ஷன் போல காட்சிப்படுத்தும்.

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 06: தொடாமலேயே கட்டுப்படுத்தலாம்.!

  உங்கள் ஸ்மார்ட்போனில் கெஸ்டர் பயன்முறை (அதாவது சைகைகளால் நிகழ்த்தப்படும் கட்டுப்பாடுகள்) இருந்தாலும் கூட அதை எல்லா இடத்திலும், எல்லா நேரங்களிலும் பயன்படுத்த முடியாது என்பதை பயன்படுத்தியர்களுக்கு நன்றாக தெரியும். பல சூழ்நிலைகளில் இந்த சைகை கட்டுப்பாடு பயன்முறையை சிறப்பானதொரு அம்சமாக இருக்காது.

  தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோ

  ஒருவேளை நீங்கள் சமையல் மற்றும் சுத்திகரிப்பு போன்ற பணிக்கு இடையே உங்களின் ஸ்மார்ட்போனின் திரையை தொடாமல் மற்றும் அதை ஈரப்படுத்தி விடாமல் அல்லது அழுக்குப்படுத்தி விடாமல் பயன்படுத்த விரும்புகிறீர்கள் என்றால் Wave Control (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) என்கிற ஆப் உங்களுக்கு உதவும். இந்த ஆப்பின் பயன்பாடு கொண்டு உங்களால் தொடுதல்களை நிகிலத்தாமலேயே இசை மற்றும் வீடியோக்களை பிளே செய்ய முடியும், அழைப்புகளை நிகழ்த்த முடியும்.

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 05: தூரத்தை அளவிடலாம்.!

  பார்ப்பதற்கு, இதெல்லாம் ஒரு மேட்டரா என்று தோன்றலாம். ஆனால் ஒருமுறை நீங்கள் இதை பயன்படுத்தினால் தான் உங்களுக்கு புரியும். அளவுகள் எடுப்பதென்பது அனுதினமும் நாம் செய்யுமொரு வேலை என்பது. இந்த தந்திரத்தை அறிந்தபின்னர் ஒரு நூலை அல்லது ஒரு நாடாவை தேடி நீங்கள் ஓதவேண்டிய அவசியம் இருக்காது.

  உங்கள் தொலைபேசியின் கேமரா உதவும்

  நீங்கள் ஒரு பொருளை அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தை துல்லியமான முறையின்கீழ் அளவிட விரும்புகிறீர்கள் என்றால், உங்கள் தொலைபேசியின் கேமரா அதற்கு உதவும் என்று கூறினால் நம்புவீர்களா.? Sizeup என்கிற ஆப்பின் உதவியின் மூலம் இது சாத்தியமாகிறது. இந்த ஆப்பை ரன் செய்து அளவிட விரும்பும் பொருளின் முன் கேமராவை ஆன் செய்து காட்ட அளவீடுகள் காட்சிப்படும்.

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 04: கணினியிலிருந்து மெஸேஜ் அனுப்ப உதவும்.!

  மிகவும் தேவையான சமயத்தில் உங்களின் ஸ்மார்ட்போன் பேட்டரி இறந்துவிட்டதா.? உங்கள் நண்பர் அல்லது அலுவலக பணியாளரிடம் நீங்கள் அவசரமாக தொடர்பு கொள்ள வேண்டுமா.? கவலையை விடுங்கள். Mightytext என்கிற பயன்பாடு உங்களுக்கு உதவும்.

  கணினி அல்லது டாப்ளெட் உடன் ஒத்திசைக்கும்

  இது உங்கள் தொலைபேசியை, கணினி அல்லது டாப்ளெட் உடன் ஒத்திசைக்கும், அதன் வழியாக உங்கள் மின்னஞ்சலில் இருந்து எஸ்எம்எஸ் மற்றும் எம்எம்எஸ்-களை நிர்வகிக்கும் வாய்ப்பை உங்களுக்கு வழங்கும். இந்த ஆப் வழியாக உங்கள் தொலைபேசி எண்ணுடன் இணைக்கப்பட்ட அனைத்து செய்திகளும் உங்கள் கணினி திரையில் தோன்றும், மேலும் உங்கள் டெக்ஸ்ட் இன்பாக்ஸிலும் அவற்றைக் கண்டறியலாம்.

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 03: இன்னும் சிறப்பான முடிவுகளை எடுக்க உதவும்.!

  அனுதினமும் அவ்வளவு ஏன் அணு ஷணமும் நாம் எல்லோருமே எதோ ஒரு முடிவுகளை எடுத்துக்கொண்டே இருக்கிறோம். எடுத்துக்காட்டிற்கு உங்களின் பிரியமான நபருடன், ஒரு சரியான உணவகத்திற்கு செல்ல விரும்புகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.

  ஒரு ஸ்மார்ட் ஆன வழி

  அது சீன உணவகமா.?? அல்லது இத்தாலிய உணவகமா அல்லது இந்திய உணவகம் தானா என்பதை நேரில் சென்று காண வேண்டிய அவசியம் இல்லாமல் உங்கள் நேரத்தைச் சேமிக்கவும் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையை சிறிது எளிதாக்குவும் ஒரு ஸ்மார்ட் ஆன வழி இருக்கிறதென்றால் நம்புவீர்களா.? அந்த வழி - Decision Crafting (ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ்) என்கிற ஆப் தான். உங்களுக்கான விருப்பங்களை, தொகுப்பு பண்புகளை இதனுள் உள்ளிடவும், பின்னர் உங்களுக்கான சிறந்த தேர்வுகள் பரிந்துரைக்கப்படும்

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 02: சுயப்பாதுகாப்பை உறுதி செய்யும்.!

  இரவு நேரங்களில் தாமதமாக வீட்டிற்கு திரும்பும் நிலை ஏற்பட்டால், ஒருவேளை நீங்கள் குறிப்பிட்ட சில தெருக்களில் பாதுகாப்பற்றதாக உணர்ந்தால், உங்கள் நரம்புகளை அமைதிப்படுத்தவும், எந்தவொரு ஆபத்தையும் சமாளிக்கவும் bSafe பயன்பாடு உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

  ஜிபிஎஸ் வழியாக இருப்பிடத்தை கண்காணிக்கும்

  இது உங்கள் அவசர தொடர்புகளுக்கு ஒரு எஸ்ஓஎஸ் (SOS) செய்தியை மட்டும் அனுப்பாமல், வீடியோ மற்றும் ஆடியோவையும் பதிவுசெய்து அனுப்பும் உடன் ஜிபிஎஸ் வழியாக உங்களின் இருப்பிடத்தையும் கண்காணிக்கும். குறிப்பிட்ட நேரத்திற்குள் எஸ்ஓஎஸ்-ஐ நீங்கள் அணைக்கவில்லை என்றால் சிறிதும் நேரத்தை வீணடிக்காமல் உங்களின்எநண்பர்களுக்கு எச்சரிக்கை செய்தியை அனுப்பும்.

  ஸ்மார்ட்போன் சீக்ரெட் 01: ரிமோட் பேட்டரிகளை பரிசோதிக்கலாம்.!

  உங்கள் ரிமோட் கண்ட்ரோலில் உள்ள பேட்டரிகள் இறந்து விட்டதா அல்லது ரிமோட் கண்ட்ரோலின் அகச்சிவப்பு சிக்னலில் ஏதாவது கோளாரா.? என்பதை அறிய, அதை வெளியே எடுத்து அல்லது கழட்டி சோதனை செய்யும் அளவு பொறுமை இல்லையென்றால், இந்த ஸ்மார்ட்போன் டிஸ்க் உங்களுக்கு மிகவும் பிடித்ததொரு தந்திரமாக இருக்குமென்பதால் சந்தேகமேயில்லை. சுவாரசியம் என்னவென்றால் இதை நிகழ்த்த எந்தவொரு தனியப்பட்ட பயன்படும் தேவையில்லை.

  சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு ஒளி தென்பட்டால்

  உங்கள் ஸ்மார்ட்போனை கையில் எடுக்கவும், கேமரா பயன்பாட்டை தொடங்கவும். பின்னர் ரிமோட் கண்ட்ரோலை எடுத்து, கேமராவை நோக்கி சுட்டிக்காட்டி, ஏதாவதொரு பொத்தானை அழுத்தவும், அதை உங்களின் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வழியாக பார்க்கவும். அப்படி நிகழ்த்தும் போது உங்களுக்கு எதாவது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு ஒளி தென்பட்டால் உங்கள் பேட்டரியின் அகச்சிவப்பு சிக்னலில் எந்தவிதமான கோளாறும் இல்லை, ஒருவேளை பேட்டரி இறந்திருக்கலாம் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  7 Brilliant Things You Can Do With Your Smartphone. Read more about this in Tamil GizBot.
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more