ஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.!

ஸ்வைப் செய்தாலே திறக்கும்படி ஐபோன்களை வைத்திருக்காதீர்கள், ஐபோன்களை பாதுகாக்க பாஸ்கோடு பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.

|

ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் பல்வேறு அம்சங்கள் பிரபலமாக இருந்தாலும், அதன் பாதுகாப்பு தன்மை உலகம் வியந்த அம்சம் ஆகும். ஐபோன்களின் பாதுகாப்பு சிறப்பானதாக இருந்தாலும், சிலர் அதனை முழுமையாக பயன்படுத்தாமல் தகவல் மற்றும் சாதனத்தை பறிகொடுத்துவிடுகின்றனர்.

ஐபோன்களை பாதுகாக் ஆறு நறுக் டிப்ஸ்.!

மற்ற ஸ்மார்ட்போன் போன்று விலை குறைவாக இருந்தாலும் பரவாயில்லை, ஐபோன்களுக்கு ஒருவர் வழங்கும் தொகைக்கு அவற்றை மிகவும் பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டியது அவரவர் தலையாய கடமையாக இருக்கிறது.
ஐபோன்களில் இருக்கும் தகவல்களை அதன் உரிமையாளர் தவிர மற்றவர்கள் இயக்க முடியாதளவு பாதுகாப்பு வசதி கொண்டிருக்கும் நிலையில், இவற்றை மேலும் பாதுகாப்பாக வைப்பது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

1- பாஸ்கோடு பயன்படுத்தலாம்:

1- பாஸ்கோடு பயன்படுத்தலாம்:

ஸ்வைப் செய்தாலே திறக்கும்படி ஐபோன்களை வைத்திருக்காதீர்கள், ஐபோன்களை பாதுகாக்க பாஸ்கோடு பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும். எழுத்துக்கள், எண் மற்றும் சிறப்பு குறியீடு உள்ளடக்கிய ஆறு இலக்க பாஸ்கோடு பதிவிடுவது ஐபோன்களை சிறப்பான பாதுகாப்பை வழங்கிடும்.

டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி இருப்பின், கைகள் ஈரமாக இருந்தாலோ அல்லது முகம் மறைக்கப்படு இருக்கும் வரை பாஸ்கோடு பதிவிட வேண்டிய அவசியம் கிடையாது.

ஐபோனில் பாஸ்கோடு செட்டப் செய்ய செட்டிங்ஸ் -- டச் ஐடி & பாஸ்கோடு அல்லது செட்டிங்ஸ் -- ஃபேஸ் ஐடி & பாஸ்கோடு ஆப்ஷன்களுக்கு சென்று கைரேகை அல்லது முகத்தை காண்பிக்க வேண்டும். இங்கு பாஸ்கோடு செட்டப் செய்து முடித்ததும் ஐபோன் அன்லாக் ஆப்ஷன் ஆன் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

2- லாக் ஸ்கிரீன் ஆப்ஷன்களை டிசேபிள் செய்யவும்:

2- லாக் ஸ்கிரீன் ஆப்ஷன்களை டிசேபிள் செய்யவும்:

மிகவும் கடினமான போஸ்கோடு பதிவிட்டிருந்தாலும், சில சமயங்களில் சிலரால் உங்களது லாக் ஸ்கிரீனை இயக்க முடியும். இதற்கு ஐபோனின் சிரி முக்கிய பங்காற்றும், லாக் ஸ்கிரீனில் இருந்தபடி உங்களது மிகமுக்கிய தகவல்களை வழங்கலாம். இதுபோன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தவிர்க்க லாக் ஸ்கிரீனில் இருந்து சிரியை டிசேபிள் செய்யவும்.

ஐபோன்களினுள் நுழைய ஹேக்கர்கள் பயன்படுத்தும் மற்றொரு எளிய நுழைவு வாயிலாக ஏர்பிளேன் மோட் செயல்படுகிறது. ஏர்பிளேன் மோடினை லாக் ஸ்கிரீனில் உள்ள கன்ட்ரோல் சென்ட்டர் மூலமாகவே இயக்க முடியும், இந்த ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டால், இதனை ஃபைன்ட் மை ஐபோன் (Find my iPhone) ஆப்ஷன் கொண்டும் கண்டறிய முடியாது.

சிரி மற்றும் கன்ட்ரோல் சென்ட்டரை லாக் ஸ்கிரீனில் இருந்து பயன்படுத்தகூடிய வசதியை டிசேபிள் செய்ய, செட்டிங்ஸ் -- டச் ஐடி & பாஸ்கோடு (அல்லது ஃபேஸ் ஐடி&பாஸ்கோடு) ஆப்ஷன் சென்று கன்ட்ரோல் சென்ட்டர் மற்றும் சிரி ஆப்ஷன்களை லாக்டு லிஸ்ட்-இல் இயங்கச் செய்யும் ஆப்ஷனை ஆஃப் செய்ய வேண்டும்.

3- விரைவில் லாக் ஆக செய்யுங்கள்:

3- விரைவில் லாக் ஆக செய்யுங்கள்:

பொது இடங்களில் ஐபோனினை தவர விடும் பட்சத்தில், தவறானவர்கள் கையில் சில நொடிகள் கிடைத்தாலும் அவர்கள் அதனை பயன்படுத்திக் கொள்வர். இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க ஐபோன் மிக சீக்கிரமாக லாக் ஆகும் படி செய்ய வேண்டும்.

ஐபோன் பயன்படுத்தப்படாத சில நொடிகளில் அது லாக் ஆகும் படி செய்தால், மற்றவர்கள் கையில் கிடைத்தாலும் அவர்களால் அதனை மிக எளிமையாக பயன்படுத்த முடியாத சூழல் ஏற்படும். இதற்கா கால அளவை நான்கு மணி நேரத்துக்கு செட் செய்தால் வசதியாதவும் பாதுகாப்பானதாகவும் இருக்கும்.

இந்த செட்டிங் டச் ஐடி & பாஸ்கோடு ஆப்ஷனில் பார்க்க முடியும். இதில் மிகவும் பாதுகாப்பான ஆப்ஷனாக Require Passcode ஆப்ஷனை Immediately-க்கு மாற்ற வேண்டும். இந்த ஆப்ஷன் செயல்படுத்தப்பட்டால் உங்களின் ஐபோனினை நீங்கள் எடுத்தாலோ அல்லது மற்றவர்கள் எடுத்தாலோ உடனடியாக அதில் பாஸ்கோடு பதிவிட கோரும். டச் ஐடி அல்லது ஃபேஸ் ஐடி ஆப்ஷனை தேர்வு செய்தால், இந்த செட்டிங் தானாக செயல்படுத்தப்படும்.

4- டேட்டா பாதுகாப்பு:

4- டேட்டா பாதுகாப்பு:

உங்களின் ஐபோன் தேவையற்றவர்கள் கையில் சில மணி நேரங்களுக்கு கிடைத்தால், அவர்களால் உங்களது பாஸ்கோடை யூகிக்க முடியுலாம். அந்த வகையில் நேரத்தை மிச்சப்படுத்த ஐபோனில் இருக்கும் இந்த அம்சத்தை ஐபோன் உங்களிடம் இருக்கும் போதே செயல்படுத்தலாம்.

ஐபோனில் பத்து முறை தவறான பாஸ்கோடு பதிவிட்டால், அதில் உள்ள அனைத்து தகவல்களையும் அழிக்கும் ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நான்கு முறை தவறான பாஸ்கோடு பதிவிடும் போது அடுத்தமுறை பாஸ்கோடு பதிவிடுவதற்கான நேரம் தாமதமாக்கப்படுகிறது.

நான்குமுறை தவறான பாஸ்கோடு பதிவிட்டால், ஐந்தாவது முறை பாஸ்கோடு பதிவிட ஒரு நிமிடம் தாமதப்படுத்தப்படும். இதைத் தொடர்ந்து ஆறு முறை தவறாக பாஸ்கோடு பதிவிட்டால் ஐந்து நிமிடம் காத்திருந்து மீண்டும் முயற்சிக்க வேண்டும், ஏழு மற்றும் எட்டாவது முறையும் தவறான பாஸ்கோடு பதிவிட்டால் 15 நிமிடங்களும், ஒன்பதாவது முறை தவறான பாஸ்கோடு பதிவிட்டால், அடுத்த முறை பாஸ்கோடு பதிவிட ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும்.

5-ஃபைன்ட் மை ஐபோன்:

5-ஃபைன்ட் மை ஐபோன்:

முதல் நான்கு வழிமுறைகளை பின்பற்றவில்லை என்றாலும், ஃபைன்ட் மை ஐபோன் (Find My iPhone) ஆப்ஷனை செயல்படுத்தலாம். தினசரி ஐபோன் பயன்பாட்டுக்கு எவ்வித தொந்தரவும் இல்லாத நிலையில், இந்த அம்சத்தை செட்டப் செய்வதும் எளிமையான விஷயமே.

இந்த அம்சம் செயல்படுத்தியிருந்தால், ஐபோன் காணாமல் போனதும் மற்றொரு கம்ப்யூட்டரில் இருந்து ஐபோன் எங்கிருக்கிறது என்பதை கண்டறிய முடியும். இத்துடன் ஐபோனை ஒலிக்கச் செய்யதும் தேடல் பணிகளை சிறப்பாக்க முடியும். இவை எதுவும் பலனளிக்காத பட்சத்தில் ஐபோனினை லாக் செய்து, அதில் உள்ள தகவல்களை முற்றிலும் அழிக்க முடியும்.

இந்த ஆப்ஷனை செயல்படுத்த செட்டிங்ஸ் -- உங்களது அக்கவுன்ட் பெயர் -- ஐகிளவுட் -- ஃபைன்ட் மை ஐபோன் -- ஃபைன்ட் மை ஐபோன் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.

6- டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்:

6- டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன்:

டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷன் அம்சம் செயல்படுத்தியிருந்தால், உங்களது தகவல்கள், புகைப்படங்கள், ஐகிளவுடில் உள்ள மற்ற தகவல்கள் மற்றும் ஐடியூன்ஸ் பேமென்ட் தகவல்களை பாதுகாக்க முடியும். இந்த அம்சம் செயல்படுத்திவிட்டால், உங்களது ஐபோன் பாஸ்கோடு மற்றவர்களுக்கு தெரிந்திருந்தாலும், உங்களது மற்றொரு சாதனம் இல்லாமல் கணக்கில் சைன் செய்ய முடியாது. இதனால் உங்களின் தகவல்கள் பாதுகாக்கப்படும்.

Best Mobiles in India

English summary
6 ways to make your iPhone more secure: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X