இந்த 6 விடயங்களை செய்தால் உங்கள் ஸ்மார்ட்போன் 100% பாதுகாப்பாக இருக்கும்.!

பின்பவரும் 6 பாதுகாப்பு விடயங்களை செய்வதினால் உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை கிட்டத்தட்ட 100% உறுதிப்படுத்தலாம்.!

|

எப்போதுமே நமக்கு மேலோட்டமான ஸ்மார்ட்போன் மீது தான் கவனம் இருக்கும், எடுத்துக்காட்டுக்கு மொபைல் ஸ்க்ரீனில் கீறல் விழாமல் பார்த்துக்கொள்வோம், ஏர்பிளேன் மோட் ஆன் செய்து சார்ஜ் செய்வோம், மெமரியை கவனமாக பராமரிப்போம், இப்படியாக சின்ன சின்ன விடயங்களின் மீது கவனம் செலுத்தினால் போதும் ஸ்மார்ட்போன் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.

ஸ்மார்ட்போன் பாதுகாப்பு என்பது வேறு. ஏனெனில் உங்கள் ஸ்மார்ட்போன் முக்கியமான தகவல், தனிப்பட்ட புகைப்படங்கள், நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் தகவல்கள் ஆகியவைககளை கொண்டிருக்கிறது. மேலும், நிச்சயமாக நீங்கள் அந்த விடயங்கள் வெளியே கசிவதை விரும்ப மாட்டீர்கள். ஆக, பின்பவரும் 6 பாதுகாப்பு விடயங்களை செய்வதினால் உங்கள் ஸ்மார்ட்போனின் பாதுகாப்பை கிட்டத்தட்ட 100% உறுதிப்படுத்தலாம்.!

எப்போதும் கையில்தான் இருக்கும்.!?

எப்போதும் கையில்தான் இருக்கும்.!?

அட யார் நமது போனை எடுத்து விட போகிறார்கள் என்ற எண்ணம் ஆபத்தில் தான் முடியும். ஆக, பாதுகாப்பு என்று வரும்போது இவைகள் முதற்கட்டமான விடயங்களாக பின் அல்லது பாஸ்வேர்ட் திகழ்கிறது. உங்கள் முக்கிய தகவல்களை பாதுகாக்க மிக அடிப்படையான ஒன்று ஸ்க்ரீன் லாக் அல்லது பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) பூட்டு அவசியமாகிறது.

ஏதேனும் பதிவிறக்கம் செய்யும் போது..

ஏதேனும் பதிவிறக்கம் செய்யும் போது..

எப்போதும் நம்பகமான மூலங்களில் இருந்து பெறப்பட்ட ஆப்ஸ்களை பதிவிறக்கம் செய்யவும். தீம்பொருள் இல்லாத பயன்பாடுகளை பெற கூகுள் பிளே அல்லது அமேசான் ஆப் ஸ்டோர் போன்ற நம்பகமான ஆதாரங்களை பயன்படுத்துவது நல்லது.

அதை விட முக்கியமாக..

அதை விட முக்கியமாக..

எந்த பயன்பாட்டை பதிவிறக்கம் செய்தாலும் சரி நீங்கள் அனுமதிகள் பட்டியலை காண்பீர்கள். அந்த பட்டியல் குறித்து நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அதாவது, டவுன்லோட் பெர்மிஷன்களை நன்றாக படிக்க வேண்டும். வெறுமனே ஒப்புதல் அளிக்க கூடாது.

லோக்கேஷனை கண்டறிவதற்கு

லோக்கேஷனை கண்டறிவதற்கு

மீட்பு ஆதரவான ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் ஆப் தனை பயன்படுத்தவும். இந்த பயன்பாட்டை கொண்டு எளிதாக நீங்கள் உங்கள் கருவியை இழந்தாலும் அல்லது யாராவது திருடி இருந்தாலும் கூட எங்கு உள்ளது என்ற லோக்கேஷனை கண்டறிவதற்கு பயன்படுத்த முடியும்.

ஒரு ஆன்டிவைரஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.!

ஒரு ஆன்டிவைரஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.!

இதுபோன்ற பயன்பாடுகள் வழக்கமான ஸ்கேன் மற்றும் நீங்கள் கருவியை புதுப்பித்து பராமரிக்க உதவும். வரும் காப்பதே சிறந்தது என்பதில் நம்பிக்கை இருப்பின் ஒரு ஆன்டிவைரஸ் பயன்பாட்டைப் பயன்படுத்தவும்.!

திறந்த பொது வைஃபை கிடைத்தால் தவிர்க்கவும்

திறந்த பொது வைஃபை கிடைத்தால் தவிர்க்கவும்

இப்போது இந்திய ரயில் நிலையங்களில் மற்றும் துறை கடைகளில் பொது வைஃபை பயன்படுத்த கிடைக்கிறது அதை அணுகுவதின் மூலம் ஒருவேளை நீங்கள் உங்களின் இரகசியங்களை ஹேக்கர்களுடன் பகிர்ந்து கொள்ள உதவலாம் ஆக தெரியாத வைஃபை நெட்வொர்க்குகளை இணைப்பதற்கான முயற்சியை எப்போதுமே தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

3 வகையான ஆன்லைன் ஆபாச பார்வையாளர்கள், மூன்றாவது வகையினர் உஷார்.!

Best Mobiles in India

Read more about:
English summary
6 Tips To Protect Your Android Phone From Hackers. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X