எவ்ளோ பெரிய திருடனா இருந்தாலும் ஒரு சின்ன தப்பு பண்ணுவான்.!

By Staff
|

ஒரு தயாரிப்பு எவ்வளவுக்கு எவ்வளவு பிரபலமானதாக உள்ளதோ அவ்வளவுக்கு அவ்வளவு காப்பி கேட் (அதாவது உருவத்தில், பார்ப்பதற்கு ஒரிஜினல் போன்றே இருக்கும் போலி அல்லது க்ளோன்) தயாரிப்புகளும் மிக அதிகமாக உருவாக்கம் பெறும்.

சில சமயங்களில் போலியான தயாரிப்புகள் அசலை மிஞ்சும் அளவிற்கு அற்புதமாக வடிவமைக்கப் படுகின்றன. யாருக்கு தெரியும் நீங்கள் இப்போது பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் கூட ஒரு க்ளோன் தயாரிப்பாக இருக்கலாம்.

இப்படியாக சந்தைக்குள் மிகவும் வெளிப்படையாக, கம்பீரமாக உலவும் போலியான கருவிகளை கண்டுபிடிக்க அவற்றை வாங்குவதற்கு முன், அது ஒரு போலி கேஜெட் என்பதை அங்கீகரிக்க உதவும் 6 முக்கியமான உதவிக்குறிப்புகள் உள்ளது. அதை பற்றிய தொகுப்பே இது.!

உதவிக்குறிப்பு #01 : பேக்கேஜிங்

உதவிக்குறிப்பு #01 : பேக்கேஜிங்

கள்ளப் பொருட்களின் உற்பத்திகள் பெரும்பாலும் தொகுப்பு வடிவமைப்பை புறக்கணிக்கின்றன. உத்தியோகபூர்வ சில்லறை விற்பனையாளர் எப்பொழுதும் வடிவமைப்பு மற்றும் பேக்கேஜிங்கில் பொருட்களின் சிறிதளவு விவரங்களை கவனமாக கையாள்வர்.

தெளிவான எழுத்துக்கள்

தெளிவான எழுத்துக்கள்

ஆக பேக்கேஜிங் தரத்தில் சற்று கவனம் செலுத்துங்கள், மேலும் அதில் பிரண்ட் தரத்தையும் கவனியுங்கள், முக்கியமாக எல்லா இடங்களிலும் தெளிவானதாக எழுத்துக்கள் உள்ளதா என்பதை கவனியுங்கள்.

பேக்கேஜ் சீம்ஸ் மற்றும் முனைகள்

பேக்கேஜ் சீம்ஸ் மற்றும் முனைகள்

தரமான பேக்கேஜின் உள்ளே எந்த தளர்வும் எந்த தகவலும் தவறவிடப்பட்டு இருக்காது. போக்குவரத்தின் போது எந்த சேதமும் ஏற்பட்டு விடாத வண்ணம் உற்பத்தியாளர்கள் எப்பொழுதும் தங்கள் பொருள்களை சரியாக பேக் செய்வர், பேக்கேஜ் சீம்ஸ் மற்றும் முனைகள் உட்பட அனைத்திலும் கவனம் செலுத்துவர். இதில் ஏதாவது வெளிப்படையான குறையை நீங்கள் கண்டால் அது ஒரு போலியான தயாரிப்பு என்று அர்த்த

உதவிக்குறிப்பு #02 : பயனர் கையேடு

உதவிக்குறிப்பு #02 : பயனர் கையேடு

ஒருவேளை பேக்கேஜில் கவனம் செலுத்த தவறியிருந்தால் உள்ளே பயனர் கையேட்டை புரட்டவும். உங்களுக்கு கிடைக்கும் பயனர் கையேடு ஆனது ஒரு கேஜெட்டின் பாஸ்போர்ட் ஆகும்.

வேறு மொழியில்

வேறு மொழியில்

குறிப்பிட்ட சாதனம் பற்றிய அனைத்து முக்கியமான தகவல்களும் வாங்கும் நாட்டின் மொழியில் இருக்க வேண்டும். அது வேறு மொழியில் எழுதப்பட்டிருந்தால், அதை நீங்கள் படிக்க இயலாது என்றால், அது நிச்சயமாக ஒரு போலியான சாதனம் அல்லது பிராண்டின் க்ளோன் என்று அர்த்தம்

உதவிக்குறிப்பு #03 : மெடீரியலின் மீது கவனம் செலுத்த வேண்டும்

உதவிக்குறிப்பு #03 : மெடீரியலின் மீது கவனம் செலுத்த வேண்டும்

உங்களின் கேஜெட் எந்த பொருளாக வேண்டுமானாலும் இருக்கலாம், அது பிளாஸ்டிக், ரப்பர், அல்லது அலுமினியமாக கூட இருக்கும். அதில் உயர் தரம் அல்லது குறைந்த தரம் என்ற பாரபட்சம் உங்களுக்கு புலப்பட்டால் உஷாராகிக்கொள்ளுங்கள்.

கோடு அல்லது பிற குறைபாடுகள்

கோடு அல்லது பிற குறைபாடுகள்

மிகவும் பிரபலமான பிராண்டுகள் தங்களின் பொருட்களில் (மெட்டீரியலில்) தயாரிப்பு செலவை சேமிக்க மாட்டாரகள். பிளாஸ்டிக் மூடுதல் ஆனது கோடு அல்லது பிற குறைபாடுகள் இல்லாமல் மென்மையானதாக இருக்க வேண்டும். பொய்யான ஒரு கருவியில் எளிதாக தயாரிப்பு நிழல்கள் மற்றும் ஒழுங்கற்ற மேற்பரப்புகளானது மலிவான பிளாஸ்டிக்கை காட்டிக்கொடுக்கும்.

உதவிக்குறிப்பு #04 : லோகோ

உதவிக்குறிப்பு #04 : லோகோ

நிறுவனத்தின் சின்னமானது குறிப்பிட்ட பிராண்டின் முகம் என்றே கூறலாம். அதில் எப்போதுமே ஒரு சிறப்பு கவனம் செலுத்தப்படும். அது எப்பொழுதும் சிதைந்து போகாதபடி செய்யப்படுகிறது: பல வருடங்கள் கழித்தும் லோகோ எளிதில் அடையாளம் காணக்கூடியதாக இருக்கும்.

குறியீடுகள்

குறியீடுகள்

சாதனத்தில் உள்ள அனைத்து எழுத்துருக்கள் மற்றும் குறியீடுகள் மென்மையாகவும், படிக்கக்கூடியதாகவும், நீடித்ததாகவும் இருக்க வேண்டும். பெரும்பாலும் உற்பத்தியாளர்களின் பெயரைக் குறைக்கவோ அல்லது ஏதேனும் தவறாகவோ இருந்தால் அவை போலித்தனமானவை என்பது உறுதி.

உதவிக்குறிப்பு #05 :  சார்ஜர்

உதவிக்குறிப்பு #05 : சார்ஜர்

ஒரு சார்ஜர் என்பது உங்கள் நாட்டின் பயன்பாட்டிற்கு ஏற்றபடி இருக்க வேண்டும். ஐரோப்பாவில் நீங்கள் வாழ்ந்தால், ஐரோப்பிய சாக்கெட்டுகளுக்கான சிறப்புத் தொகுதி இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் ஒரு அடாப்டர் வாங்க அல்லது ஒரு தனி சார்ஜர் வாங்கி கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு இருந்தால் அது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும்

தரமான காப்பு

தரமான காப்பு

பிராண்ட் சார்ஜர்கள் ஆனது அதன் பிளாஸ்டிக் பாகங்களுக்கு இடையே வண்ண மாற்றங்கள் கொண்டிருக்காது. நினைவில் வைத்து கொள்ளுங்கள், உங்கள் கேஜெட்களை பயன்படுத்தும் போது உங்கள் பாதுகாப்பிற்கு உங்களின் பிராண்டுகள் தான் பொறுப்பு ஆகா ஒரு சார்ஜரின் மூலப்பொருட்களுக்கு எப்போதும் மெருகூட்டல் குறிப்புகள் மற்றும் தரமான காப்பு மற்றும் பினிஷ் உள்ளன என்பதை உறுதி செய்து கொள்ளவும்

உதவிக்குறிப்பு #06 : வயர்கள் மற்றும் பிளக்குகள்

உதவிக்குறிப்பு #06 : வயர்கள் மற்றும் பிளக்குகள்

வயர் தரம் எனபது ஒரு கள்ள தயாரிப்பின் மிகவும் தெளிவான அறிகுறிகளில் ஒன்றாகும். அசல் வயர் ஆனது ஒரு செருகப்பட்ட பின்னர் அதன் கேபிள் உறுதியாக மற்றும் சமமாக உட்கார்ந்து கொள்ளும் ஆனால் ஒரு போலி வயர் ஆனது தவறான கோணங்களில் மற்றும் தளர்வான பாகங்கள் கொண்டிருப்பதை காண முடியும். சில நேரங்களில் ப்ளக்கின் நீளம் சாக்கின் ஆழத்தை கூட எட்டாது.

நெகிழ்வானதாக

நெகிழ்வானதாக

வயர் மீது கவனம் செலுத்தும் போது அதன் இன்சுலேஷன் தரத்தின் மீதும் கவனம் செலுத்துங்கள். வளைவு நெகிழ்வானதாகவும், நிறமுள்ளதாகவும் இருக்க வேண்டும், அதே நேரத்தில் அடையாளங்கள் அழிக்கப்படக்கூடாது.

Best Mobiles in India

Read more about:
English summary
6 Tips to Help You Recognize Fake Gadgets. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X