5 எம்பி கேமராக இருந்தாலும் கூட "செம்ம" போட்டோஸ் எடுக்க 6 டிப்ஸ்.!

நீங்கள் ஒரு மொக்கையான ஸ்மார்ட்போன் கேமரா கொண்டிருந்தாலும் கூட இந்த 6 சூப்பர் டிப்ஸ் உங்களுக்கு நிச்சயமாக உதவும்.

|

நண்பர் யாரேனும் புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கியதாக கூறினால் போதும், முதல் கேள்வியாக "எத்தனை எம்பி ரியர் கேமரா.?? செல்பீ கேமரா எத்தனை எம்பி.??" என்று கேட்டுவிடுகிறோம். இதன்மூலம் ஸ்மார்ட்போன் கேமரா அம்சம் மீது நாம் எவ்வளவு ஆர்வமாக உள்ளோம், முக்கியமாக ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபி மீது எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளோம் என்பதை அறிய முடிகிறது.

ஆனால், எல்லோராலும் சிறப்பான ஸ்மார்ட்போன் புகைப்படங்களை உருவாக்க முடிவதில்லை, சிலருக்கு திறன் இருப்பினும் கூட அவர்களின் ஸ்மார்ட்போன் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதற்கு தீர்வே இல்லையா.?? 5எம்பி, 6எம்பி போன்ற குறைந்த அளவிலான கேமரா கொண்ட எங்களால் ஸ்மார்ட்போன் போட்டோகிராஃபியில் அசத்த முடியாத என்று கவலை கொள்ள வேண்டாம். நீங்கள் ஒரு மொக்கையான ஸ்மார்ட்போன் கேமரா கொண்டிருந்தாலும் கூட "செம்ம" போட்டோஸ் எடுக்க 6 சூப்பர் டிப்ஸ் இதோ.!

01. செட்டிங்ஸை முடிந்த வரை நொண்டுங்கள்

01. செட்டிங்ஸை முடிந்த வரை நொண்டுங்கள்

"ஆமாம் இதுல என்ன பெருசா இருக்க போகுது" என்று நம்மில் பலர் கேமரா செட்டிங்ஸை புறக்கணித்து விடுகிறோம். அடு தவறு. உங்கள் தொலைபேசியின் இயல்புநிலை கேமரா பயன்பாட்டில் உள்ள அமைப்புகளுக்கான மெனுவை முடிந்தமட்டில் ஆராயுங்கள். அது நிச்சயமாக உங்களின் இறுதி ஷாட்டை திறம்பட வெளிக்கொணர உதவும். முக்கியமாக போகஸ், பிரைட்னஸ் போன்ற பல ஒழுங்குகளை சரிபார்க்க உதவும்.

02. உங்களின் இரு கைகளையும் பயன்படுத்துங்கள்

02. உங்களின் இரு கைகளையும் பயன்படுத்துங்கள்

ஒரு நிலையான ஷாட் கிளிக் செய்ய உங்கள் இரு கைகளையும் பயன்படுத்துங்கள். குறைந்த ஒளியில் கிளிக் செய்யும் இன்டரஹ இருகை முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அல்லது நீங்கள் வேகமாக நகரும் பொருளை கைப்பற்ற முயற்சி செய்கிறீர்கள் என்றால் அடிப்படையிலாகவே உங்கள் கிளிக் மங்கலாவதை குறைக்கவும், நிலைத்தன்மை அதிகரிக்கவும் இது உதவும்.

03. படம் எடுக்கும் முன் போகஸில் கவனம் செலுத்தவும்

03. படம் எடுக்கும் முன் போகஸில் கவனம் செலுத்தவும்

இன்றைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் சிறந்த ஆட்டோ போகஸ் அம்சங்களை காண முடிகிறது.இருப்பினும் கூட இந்த விஷயத்தில் உங்கள் கவனம் சிதறினால் உங்கள் புகைப்படத்தின் போகஸ் திசைமாறிப் போகலாம் ஆக, கிளிக் செய்வதற்கு முன் சரியான ஷாட் பெற சிறப்பாக வரையறுக்கப்பட்ட ஆழத்தை உறுதி செய்துகொண்டு கிளிக் செய்யவும்.

04. டிஜிட்டல் ஜூம் பயன்படுத்த வேண்டாம்

04. டிஜிட்டல் ஜூம் பயன்படுத்த வேண்டாம்

ஒருவேளை உங்களின் கருவி ஐபோன் 7 பிளஸ் ஆக இல்லாவிட்டால் உங்கள் கேமராவின் ஒரு மென்பொருளான டிஜிட்டல் ஸூம் அம்சத்தை பயன்படுத்த வேண்டாம். ஒரு படம் டிஜிட்டல் ஸூம் செய்யப்பட்டால் நிச்சயமாக அது படத்தை சிறிது சிறிதாக குறைக்கிறது. ஆக டிஜிட்டல் ஸூம் செய்வதற்கு பதிலாக முடிந்தால் ஒரு பொருளுக்கு அருகில் செல்ல முயற்சி செய்யுங்கள்.

05. (மல்டிபிள் ஷார்ட்ஸ்) பல படங்களை எடுக்கவும்

05. (மல்டிபிள் ஷார்ட்ஸ்) பல படங்களை எடுக்கவும்

குழு புகைப்படங்கள் அல்லது உருவப்படம் கிளிக் செய்வதன் மூலம் அவைகளை எப்போதும் உங்கள் நினைவில் தங்க வைத்துக்கொள்ளலாம். ஆக இம்மாதிரியான புகைப்படத்தில் விளையாட்டுத்தனம் செய்துவிடக்கூடாது எனவே முடிந்த வரை உங்கள் கேமராவில் உள்ள பர்ஸ்ட் ஷார்ட் அல்லது மல்டிபிள் ஷார்ட் அம்சத்தை கையாளுங்கள் அல்லது ஒரே ப்ரேமை பல முறை கிளிக் செய்யவும், அதில் ஒன்று நிச்சயமாக திருப்திகரமாக அமையும்.

06. லென்ஸை சுத்தமாக வைத்திருங்கள்

06. லென்ஸை சுத்தமாக வைத்திருங்கள்

தற்செயலான விரல் தொடுதல்கள் அல்லது வேறு எதாவது ஒரு வெளிப்புற காரணத்தினால் ஏற்படும் அழுக்கு தூயோசி படிதல் ஆகிய காரணங்களால் கூட உங்கள் புகைப்படம் பாழாகலாம்ஆக எப்போதும் மைக்ரோபைபர் துணியை பயன்படுத்தி உங்கள் லென்ஸை சுத்தமாக்குவதை செய்ய மறவாதீர்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
6 simple hacks for clicking significantly better photos with your smartphone. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X