Home
How to

ஜூலை 31 கடைசி.. ரூ.8 லட்சத்திற்கு கீழ், அதற்கு மேல்.. ITR Filing 2026 இல் செய்யவே கூடாத 6 Costly ஆன தவறுகள்!

ஐடிஆர் ஃபைலிங் 2026 (ITR Filing 2026) சூடுபிடித்துள்ளது. சம்பளம் பெறும் வரி செலுத்துவோர்கள். 2025-26 நிதியாண்டிற்கான கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும். இந்த வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலத்தில், அவசரத்தில் செயல்படும்போது அறியாமலேயே சில தவறுகள் நேரிட வாய்ப்புள்ளது என்பது இயல்பானதே.

உதாரணமாக, தவறான வருமான வரி படிவத்தை தேர்ந்தெடுப்பது, உங்களுக்கு கிடைக்கக்கூடிய வரி விலக்கை கவனிக்க தவறுவது அல்லது தவறான வரி முறையை தேர்ந்தெடுப்பது போன்றவை நிகழலாம். எனவே, வரி செலுத்துவோர் தங்கள் கணக்கை தாக்கல் செய்வதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்களை இங்கே வழங்குகிறோம். அப்படியாக நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய 6 முக்கியமான விஷயங்கள் இதோ:

ITR Filing 2026 இல் செய்யவே கூடாத 6 Costly ஆன தவறுகள்!

1. சரியான நேரத்தில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தல்: முதலாவதாக, சம்பளம் பெறும் வரி செலுத்துவோர் தங்கள் வருமான வரி கணக்கை (return) தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 31 ஆகும்; அதே சமயம் சுயதொழில் செய்பவர்களுக்கு ஆகஸ்ட் 31 வரை அவகாசம் உள்ளது.

"வரி செலுத்துவோர் காலக்கெடுவுக்குள் தங்கள் கணக்குகளை தாக்கல் செய்வது அவசியம். காலக்கெடு முடிந்த பிறகு, பழைய வரி முறையைத் (old tax regime) தேர்ந்தெடுக்க முடியாது. காலக்கெடு முடிந்ததும், இயல்புநிலை வரி முறையே (default regime) அமலுக்கு வந்துவிடும்" என்று பிடி குப்தா & கம்பெனியின் இணை நிறுவனர் சிஏ பிரதிபா கோயல் கூறுகிறார்.

2. சரியான வரி படிவத்தை தேர்ந்தெடுத்தல்: கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் சரியான வருமான வரி படிவத்தை தேர்ந்தெடுப்பதாகும். "மியூச்சுவல் ஃபண்டுகள் அல்லது பங்குகள் வடிவில் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருத்தல் அல்லது ஒரு நிறுவனத்தில் இயக்குநராக பதவி வகித்தல் போன்ற காரணங்களால் ஐடிஆர்-2 படிவத்தை பயன்படுத்த வேண்டிய சூழலிலும், சிலர் ஐடிஆர்-1 படிவத்தில் கணக்கு தாக்கல் செய்துவிடுகிறார்கள்".

"வெளிநாட்டு சொத்து ஒன்றை வைத்திருப்பது மட்டுமே (அதை விற்காவிட்டாலும் கூட) ஐடிஆர்-2 படிவத்தில் கணக்கு தாக்கல் செய்யப் போதுமானது என்பதை வரி செலுத்துவோர் புரிந்துகொள்ள வேண்டும்" என்று மும்பையை சேர்ந்த சிஏ சௌஹான் & கம்பெனியின் நிறுவனர் சிராக் சௌஹான் கூறுகிறார்.

3. சரியான வரி முறையை தேர்ந்தெடுத்தல்: கூடுதலாக, வரி செலுத்துவோர் பழைய மற்றும் புதிய வரி முறைகள் ஆகிய இரண்டின் கீழும் தங்களுக்கு ஏற்படும் வரிப் பொறுப்பை ஒப்பிட்டு பார்த்த பின்னரே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும். ரூ.8 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட விலக்குகள் (deductions) உள்ள வரி செலுத்துவோர் மட்டுமே பழைய வரி முறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் சிஏ சௌஹான் வாதிடுகிறார்.

4. AIS/TIS உடன் சரிபார்த்தல்: சில வரி செலுத்துவோர் தங்கள் வரிக்குரிய வருமானத்தை கணக்கிட வருடாந்திர தகவல் அறிக்கை (AIS) அல்லது வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம் (TIS) ஆகியவற்றை மட்டுமே முழுமையாக நம்பியிருக்கிறார்கள்; ஆனால் இது சிறந்த நடைமுறை அல்ல என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

வரி செலுத்துவோர் முதலில் தங்கள் வரிக்குரிய வருமானத்தை கணக்கிட்டு, பின்னர் அதை AIS/TIS-இல் உள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்க வேண்டும். "இந்த ஆவணங்கள் உங்கள் முழு வருமானத்தையும் வெளிப்படுத்துவதில்லை. சில சூழ்நிலைகளில் இவை உங்கள் வருமானத்தைக் குறைவாகக் காட்டக்கூடும்," என்று சிஏ சௌஹான் கூறுகிறார்.

5. நிதியாண்டில் வேலையை மாற்றியிருந்தால்: நிதியாண்டின் போது நீங்கள் வேலையை மாற்றியிருந்தால், வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும் போது அதை கணக்கில் எடுத்துக்கொள்வது அவசியம். சில வரி செலுத்துவோர் தங்கள் தற்போதைய நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட பார்ம் -16-ஐ அடிப்படையாகக் கொண்டு வரிக்குரிய வருமானத்தை கணக்கிடுகிறார்கள். இதனால் ஆண்டின் முற்பகுதியில் ஈட்டிய வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

6. கிரிப்டோ முதலீடு: இறுதியாக, ஒரு வரி செலுத்துபவர் அந்த ஆண்டில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துகளில் (VDAs) முதலீடு செய்திருந்தால், கிரிப்டோ சொத்துகளை விற்பதன் மூலம் கிடைக்கும் லாபத்துடன் ஏற்படும் இழப்புகளை ஈடுசெய்ய (set off) முடியாது என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், கிரிப்டோ மூலம் கிடைக்கும் லாபத்திற்கு 30% என்ற நிலையான வரி விதிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
6 Costly mistakes every Tax Payers Should Avoid in ITR Filing 2026 Last Date July 31
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X