உங்க ஸ்மார்ட்போன்ல தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க! மீறினால்?

|

தவறான பழக்கங்களை, நடவடிக்கைகளை, செயல்களை அனுதினமும் கடைபிடிக்கும் போது என்னவாகும் என்றால்..?

ஒருகட்டத்தில், நாம் செய்வது தவறு என்பதையே மறந்து விடுவோம்; அதைவொரு அன்றாட வழக்கம் போல நிகழ்த்திக்கொண்டே இருப்போம்!

இன்று இல்லை என்றாலும்.. என்றாவது ஒருநாள்?

இன்று இல்லை என்றாலும்.. என்றாவது ஒருநாள்?

இப்படியாக தெரிந்தே நாம் செய்யும் சில தவறுகள், இன்று இல்லை என்றாலும் கூட என்றாவது ஒருநாள்.. நமக்கு சரியான பாடத்தை கற்றுக்கொடுக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

அப்படியாக சில ஆயிரங்கள் முதல் பல ஆயிரங்கள் வரை செலவழித்து நீங்கள் வாங்கிய ஸ்மார்ட்போனில் தெரிந்தோ தெரியாமலோ.. நீங்கள் செய்யும் 6 "தவறுகள்" உள்ளன!

அதென்ன தவறுகள்? அதனால் உங்களுக்கும், உங்கள் ஸ்மார்ட்போனிற்கும் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!உங்கள் போன் வெடிக்க போகிறது என்பதை நிரூபிக்கும் சில அறிகுறிகள்!

01. எல்லா சார்ஜரும் நம்ம சார்ஜர் தான்!

01. எல்லா சார்ஜரும் நம்ம சார்ஜர் தான்!

நம்மில் பலரும், சந்தையில் வாங்க கிடைக்கும் எல்லா சார்ஜர்களுமே ஒரே மாதிரியானவை என்கிற தவறான கருத்தை கொண்டுள்ளோம்.

"எந்த கேபிளை எடுத்து சொருகினாலும், என் ஸ்மார்ட்போன் நல்லாத்தான் சார்ஜ் ஆகுது.. இதுல என்ன தப்பு இருக்கும்? இதுல கவலைப்படுறதுக்கு என்ன இருக்கு?" என்று கேட்பவரா நீங்கள்?

உஷாரய்யா உஷாரு!

உஷாரய்யா உஷாரு!

உங்கள் ஸ்மார்ட்போனுடன் வந்த, குறிப்பிட்ட பிராண்டின் சார்ஜரை பயன்படுத்தாமல், கையில் கிடைக்கும் எந்தவொரு சார்ஜரையும் எடுத்து பயன்படுத்தினால்.. ஒருகட்டத்தில் (அதிக பட்சமாக) உங்கள் ஸ்மார்ட்போன் தீப்பிடிக்கலாம் அல்லது ஷார்ட் சர்க்யூட் போன்ற ஆபத்துகளை சந்திக்கலாம்.

(குறைந்த பட்சம்) உங்கள் ஸ்மார்ட்போனின் ஆயுட்காலம் பாதிப்படையலாம். எனவே எப்போதுமே, உங்கள் ஸ்மார்ட்போனுடன் வரும் சார்ஜரை மட்டுமே பயன்படுத்தவும், இல்லையேல் நம்பகமான பிராண்டுகளின் சார்ஜர்களை பயன்படுத்தவும்.

விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?விண்வெளியில் வீசப்பட்ட விசித்திரமான அறுகோண வைரங்கள்! பூமியில் வந்து விழுமா?

02.  கண்ட கண்ட ஆப்களை இன்ஸ்டால் செய்வது!

02. கண்ட கண்ட ஆப்களை இன்ஸ்டால் செய்வது!

சில பயனர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு குறிப்பிட்ட ஆப்-ஐ கண்டுபிடிக்க முடியாதபோது, ​​அதேபோன்ற பிற ஆப்களை இன்ஸ்டால் / டவுன்லோட் செய்யும் பழக்கத்தை கொண்டுள்ளன.

கூகுளும் சரி, நாங்களும் சரி, அதிகாரப்பூர்வமற்ற சோர்ஸ்களில் இருந்து கிடைக்கும் ஆப்களையும், மூன்றாம் தரப்பு ஆப்களையும் ஒருபோதும் பரிந்துரைக்க மாட்டோம்!

ஏனென்றால்?

ஏனென்றால்?

நன்கு அறியப்படாத மூலங்களிலிருந்து கிடைக்கும் ஆப்கள் ஆனது உங்கள் ஸ்மார்ட்போனிற்குள் வைரஸ்கள், ஸ்பைவேர்கள் மற்றும் மால்வேர்களை கொண்டு வரலாம்

அதன் பிறகு உங்களின் தனிப்பட்ட தகவல், பாஸ்வேர்ட்கள் மற்றும் வங்கி விவரங்கள் என எதற்குமே பாதுகாப்பு இருக்காது!

எனவே எப்போதுமே அதிகாரப்பூர்வ ஆப் ஸ்டோர்களில் இருந்து, நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள ஆப்களை மட்டுமே பதிவிறக்கம் செய்யவும்!

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்; எப்படியோ நமக்கு ரொம்ப வசதியா போச்சு!

03. ஓஎஸ் அப்டேட்-ஆ.. செக்யூரிட்டி பேட்ச்-ஆ? அப்புறமா பண்ணிக்கலாம்!

03. ஓஎஸ் அப்டேட்-ஆ.. செக்யூரிட்டி பேட்ச்-ஆ? அப்புறமா பண்ணிக்கலாம்!

பெரும்பாலான மொபைல் பிராண்டுகள் அவ்வப்போது லேட்டஸ்ட் ஓஎஸ் அப்டேட் மற்றும் செக்யூரிட்டி பேட்ச்களை தத்தம் வாடிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொள்கின்றன.

மால்வேர்கள் மற்றும் அது தொடர்பான பிற ஆபத்துக்களிலிருந்து உங்கள் போனை பாதுகாக்கவும், மேலும் உங்கள் ஸ்மார்ட்போனை "தடுமாற்றம்" இல்லாமல் இயங்க வைக்கவும், லேட்டஸ்ட் அப்டேட்கள் மிகவும் முக்கியம்! அவைகளை ஒருபோதும் புறக்கணிக்க வேண்டாம்; புறக்கணிக்கவும் கூடாது!

04. அடிக்கடி யூஸ் பண்ணுவீங்க.. ஆனா அப்டேட் மட்டும் பண்ணவே மாட்டீங்க!

04. அடிக்கடி யூஸ் பண்ணுவீங்க.. ஆனா அப்டேட் மட்டும் பண்ணவே மாட்டீங்க!

உங்கள் ஸ்மார்ட்போன் சீராகவும், பாதுகாப்பாகவும் இயங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஆப்களை (எப்போதெல்லாம் முடியுமோ, அதாவது எப்போதெல்லாம் அப்டேட் கிடைக்கிறதோ.. அப்போதெல்லாம்) அப்டேட் செய்யவும்!

ஆப்களுக்கு கிடைக்கும் அப்டேட்ஸ் ஆனது யூசர் எக்ஸ்பீரியன்ஸை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், புதிதாகக் கண்டறியப்பட்ட "பாதிப்புகளையும்" சீர்செய்யும் என்பதை மறக்க வேண்டாம் !

பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?பிளாஸ்டிக்கை வைரங்களாக மாற்றிய விஞ்ஞானிகள்! இனி வைரத்தின் விலை குறையுமா?

05. ஆஹா.. இங்க பப்ளிக் வைஃபை கிடைக்குது.. இங்கயே உட்காந்துடலாம்!

05. ஆஹா.. இங்க பப்ளிக் வைஃபை கிடைக்குது.. இங்கயே உட்காந்துடலாம்!

உண்மையில் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் - ஒரு வரம்; அதே சமயம் - அது ஒரு பெரிய பாதுகாப்பு அபாயமும் கூட!

ஏனெனில் உங்களை போலவே பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகளை ஹேக்கர்களாலும் அணுக முடியும். அதுமட்டுமின்றி, பப்ளிக் வைஃபை நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பப்படும் தகவல்களை அவர்களால் மிகவும் எளிதாக பார்க்கவோ, திருடவோ முடியும்!

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லையா?

இருக்கிறது! நீங்கள் பப்ளிக் வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை வந்தால், இன்டர்நெட் உடன் கனெக்ட் ஆக, நீங்களொரு VPN-ஐ பயன்படுத்துகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

விபிஎன் எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்வொர்க்குகள் (Virtual Private Networks) ஆனது, பப்ளிக் நெட்வொர்க்குகளில் கூட (நீங்கள் நுழையும்) இணையதளங்களை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் ஒரு எளிமையான தீர்வு ஆகும்.

இருப்பினும், முடிந்தவரை மொபைல் டேட்டாவை மட்டுமே பயன்படுத்துங்கள்!

Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!Truecaller சீக்ரெட்ஸ்: இது தெரிஞ்ச அடுத்த நிமிஷமே App-ஐ திறப்பீங்க!

06. பேக் கவர் அல்லது மொபைல் கேஸில் நாம் செய்யும் 2 தவறுகள்!

06. பேக் கவர் அல்லது மொபைல் கேஸில் நாம் செய்யும் 2 தவறுகள்!

புத்தம் புதிய ஸ்மார்ட்போனை கீழே போட்டு உடைத்தவர்களிடம் கேளுங்கள் - பேக் கவர் அல்லது மொபைல் கேஸின் முக்கியத்துவம் என்ன என்று?

இது ஒரு சிறிய தவறு தான்.. ஆனால் பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்த வல்லது என்பது தெரிந்தும் கூட நம்மில் சிலர் பேக் கவர் அல்லது மொபைல் கேஸை புறக்கணிக்கிறோம்!

இரண்டாவது தவறு?

இரண்டாவது தவறு?

நீங்கள் வாங்கும் பேக் கவர் அல்லது மொபைல் கேஸின் தரத்திலும் கூட அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பார்க்க ஸ்டைல் ஆக இருக்கிறது என்பதற்காக மட்டமான தயாரிப்பை வாங்கி, உங்கள் ஸ்மார்ட்போன் பாதுகாப்பில், நீங்களே ஒரு பெரிய ஓட்டையை போட்டு விடாதீர்கள்!

Best Mobiles in India

English summary
6 Common And Biggest Mistakes to Avoid By Every Smartphone User

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X