5G-ஐ பயன்படுத்திய சில மாதங்களில்.. மொபைலில் "இந்த" பாதிப்பு ஏற்படுமாம்!

|

5ஜி - நேற்று வரையிலாக, எப்போது அறிமுகமாகும் என்கிற ஒற்றை கேள்விக்கான பதிலை மட்டுமே தேடிக்கொண்டிருந்த இந்திய மக்கள்...

இன்றுமுதல் - அதாவது இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமாகிவிட்ட 2022 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் - 5ஜி சேவைகள் தொடர்பான பல வகையான கேள்விகளுக்கும், குழப்பங்களுக்குமான விடைகளை தேட வேண்டி இருக்கும்!

அப்படியான கேள்விகளில் மிகவும் முக்கியமான ஒரு கேள்வியை பற்றியும், அதன் பின்னணியில் உள்ள உண்மையை பற்றியும் தான், நாம் விரிவாக பார்க்க உள்ளோம்!

அதென்ன கேள்வி?

அதென்ன கேள்வி?

இந்தியாவில் 5ஜி நெட்வொர்க் அறிமுகமான வேகத்தில், "5ஜி சேவைகள் ஆனது ஸ்மார்ட்போனின் பேட்டரியை பாதிக்கும்" என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல், ஏற்கனவே ஒரு புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கிவிட்ட பயனர்களுக்கு மத்தியில் குழப்பத்தையும், புதிய 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டுள்ள பயனர்களின் மத்தியில் தயக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

இந்த தகவல் உண்மையா?

இந்த தகவல் உண்மையா?

ஆம்! இந்த தகவல் உண்மை தான். அதுமட்டுமன்றி, 5ஜி அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் பல பகுதிகளில் உள்ள பயனர்கள், இது குறித்து புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி.. கடந்த பல மாதங்களாக இந்தியாவில் தனது 5ஜி போன்களை விற்பனை செய்து வரும், பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் கூட இந்த தகவலை "கிட்டத்தட்ட" உறுதி செய்துள்ளது!

வழக்கத்தை விட வேகமாக!

வழக்கத்தை விட வேகமாக!

சாம்சங் நிறுவனம், அதன் சில 5G பயனர்கள் தங்கள் மொபைல் போனின் பேட்டரி ஆனது வழக்கத்தை விட வேகமாக தீர்ந்து போவதை கவனித்ததாக கூறுகிறது.

இருப்பினும், இந்த பிரச்சனைக்கு 5ஜி-ஐ மட்டுமே குறை சொல்ல முடியாது. இதற்கு பல வகையான காரணங்கள் உள்ளன என்று சாம்சங் கூறுகிறது!.

"உங்கள் போனின் பேக்கிரவுண்டில் இயங்கும் பல எண்ணிக்கையிலான ஆப்கள் அல்லது சில மொபைல் கேம்கள் ஆனது உங்கள் மொபைல் பேட்டரியை வழக்கத்தை விட வேகமாக காலி செய்யலாம்" என்று சாம்சங் விளக்கம் அளித்துள்ளது!

வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!<br />வெறும் ரூ.12,499-க்கு இப்படி ஒரு Samsung TV-ஆ! 2 வாங்கலாம் போலயே!

ஆனால் உண்மை என்னவென்றால்.. 5ஜி தான் முக்கிய குற்றவாளி!

ஆனால் உண்மை என்னவென்றால்.. 5ஜி தான் முக்கிய குற்றவாளி!

முன்னரே குறிப்பிட்டபடி, ஒரு மொபைல் போனின் பேட்டரி லைஃப் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஆனால், 5ஜி போன்களை பொறுத்தவரை, அதில் பேட்டரி நுகர்வு அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடப்படுகிறது.

ஏனென்றால், 5ஜி சேவையின் கீழ் நீங்கள், பெரிய அளவிலான டேட்டாவை மிகவும் வேகமாக பயன்படுத்தக்கூடும், இதனால் உங்கள் 5ஜி போன், அதிக பேட்டரியை பயன்படுத்த வேண்டியிருக்கும்!

கூட்டிக்கழித்து பார்த்தால்.?

கூட்டிக்கழித்து பார்த்தால்.?

குறிப்பாக கவரேஜ் என்று வரும் போது.. உங்கள் 5G ஸ்மார்ட்போன் ஆனது, தகவல் தொடர்புக்காக அருகில் உள்ள டவரை அடைய அதிக சக்தியை பயன்படுத்தும்.

ஆக.. எப்படி பார்த்தாலும், 5G போன்கள் ஆனது, 4ஜி போன்களை விட வேகமாக பேட்டரியை "வெளியேற்றும்" சாத்தியம் அதிகமாகவே உள்ளது.

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லை!

இதில் இருந்து தப்பிக்க வழியே இல்லை!

5ஜி சேவைகள் வழியாக "உறியப்படும்" மொபைல் பேட்டரியை சேமிப்பது எப்படி என்கிற தந்திரங்களை, நாட்டின் மூலைமுடுக்கெல்லலாம் 5ஜி சேவைகள் பரவிய பின்னரே அறிந்துகொள்ள முடியும்.

அதுவரை, பொதுவான சில மொபைல் பழக்க வழக்கங்களை வைத்தே, இந்த பேட்டரி லைஃப் சிக்கலை நாம் சமாளிக்க வேண்டும்!

பொதுவான பழக்க வழக்கங்கள் என்றால்.. என்னென்ன?

பொதுவான பழக்க வழக்கங்கள் என்றால்.. என்னென்ன?

- உங்கள் மொபைல் ஸ்க்ரீன் ஆனது விரைவாக 'ஆஃப்' அல்லது 'ஸ்லீப்' ஆகும்படி செட் செய்யவும்.

- ஸ்க்ரீனின் ப்ரைட்னஸை எப்போதும் குறைவாகவே வைத்திருக்கவும்

- ஆட்டோ ப்ரைட்னஸ் அம்சத்தை பயன்படுத்த வேண்டாம்.

- கீபோர்ட் சவுண்ட் மற்றும் வைப்ரேஷனை ஆஃப் செய்யவும்

ஆப்களுக்கு நோ... டார்க் தீமுக்கு யெஸ்!

ஆப்களுக்கு நோ... டார்க் தீமுக்கு யெஸ்!

- அதிக அளவில் பேட்டரியை பயன்படுத்தும் ஆப்களை (ஆப்ஸ் செட்டிங்ஸ் வழியாக) கண்டறிந்து, அவைகளை கட்டுப்படுத்தவும்.

- அடாப்டிவ் பேட்டரியை ஆன் செய்யவும்.

- பயன்படுத்தப்படாத கூகுள் அக்கவுண்ட்களை நீக்கவும்.

- முடிந்த வரை, பகல் நேரத்திலும் கூட.. டார்க் தீம்-ஐ (Dark Theme) எனேபிள் செய்யவும்!

Best Mobiles in India

English summary
5G Services Affect Your Smartphone Battery Life?

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X