அலெர்ட்! எக்காரணத்தை கொண்டும் இந்த 4 பொய்களையும் நம்பிடாதீங்க.. ஆரம்பமானது 5G ஊழல்!

|

இந்தியாவில் 5ஜி சேவைகள் அறிமுகமான சில தினங்களிலேயே திருட்டு கும்பலும், மோசடி செய்பவர்களும் அப்பாவி மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து பல மாநிலங்களை சேர்ந்த போலீசார்கள் "5ஜி ஊழல்" (5G Scam) தொடர்பான எச்சரிக்கைகளை வெளியிட்ட வண்ணம் உள்ளனர் மற்றும் 5ஜி தொடர்பான மோசடி குறித்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களை எச்சரித்தும் உள்ளனர்.

நீங்கள் நம்பவே கூடாத 4 பொய்கள்!

நீங்கள் நம்பவே கூடாத 4 பொய்கள்!

5ஜி ஊழல், 5ஜி மோசடி குறித்து உங்களுக்கு எதுவுமே தெரியாதென்றால், உடனே தெரிந்துகொள்ளுங்கள்.

குறைந்தபட்சம், 5ஜி தொடர்பான மோசடிகளில் சிக்காமல் இருக்க, எக்காரணத்தை கொண்டும் நீங்கள் நம்பவே கூடாத, 4 பொய்களை பற்றியாவது தெரிந்து கொளுங்கள்; உஷாராக இருங்கள்!

2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!2023 வரை 5G போன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை நிரூபிக்கும் 3 காரணங்கள்!

01.எஸ்எம்எஸ்,  வாட்ஸ்அப் அல்லது இமெயில் வழியாக..

01.எஸ்எம்எஸ், வாட்ஸ்அப் அல்லது இமெயில் வழியாக..

"உங்கள் போனிற்கு ஒரு எஸ்எம்எஸ் வழியாக அல்லது வாட்ஸ்அப் வழியாக அல்லது இமெயில் வழியாக ஒரு லிங்க் அனுப்புவோம்.. அதை கிளிக் செய்தால் போதும்.. உடனே உங்கள் ஸ்மார்ட்போன் 5ஜி போனாகி விடும்!" என்று கூறும் மோசடி ஆசாமிகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்!

இது முழுக்க முழுக்க ஒரு ஏமாற்று வேலை ஆகும். ஏனென்றால், எந்தவொரு இணைப்பின் (Link) மூலமும் உங்கள் போனிற்கு 5ஜி ஆதரவு கிடைக்காது!

மீறி கிளிக் செய்தால்..?

மீறி கிளிக் செய்தால்..?

"லிங்க் வழியாக 5ஜி ஆதரவு" என்கிற 5ஜி ஊழலை நம்ப வேண்டாம் என்று ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய இரண்டுமே தத்தம் பயனர்களை கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் 4ஜியில் இருந்து 5ஜிக்கு மேம்படுத்துவதாக கூறும் எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கைகளையும் அனுப்பி வருகின்றன.

பெரும்பாலும் "இதுபோன்ற" இணைப்புகள் மால்வேராகத்தான் (Malware) இருக்கும். அதை கிளிக் செய்தால் உங்கள் வங்கி விவரங்கள் உட்பட எந்தவொரு தனிப்பட்ட தகவல்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அவைகள் திருடப்படலாம்!

Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!Airtel, Jio யூசர்களே மனச தேத்திக்கோங்க.. உண்மையை அம்பலப்படுத்திய ஓபன் சிக்னல்!

02. நீங்கள் வர வேண்டாம்.. வீட்டிலேயே இருங்கள்!

02. நீங்கள் வர வேண்டாம்.. வீட்டிலேயே இருங்கள்!

"நீங்கள் எந்த சர்வீஸ் சென்டருக்கும் செல்ல வேண்டாம், வீட்டில் இருந்தபடியே உங்கள் 4ஜி ஸ்மார்ட்போனை மிகவும் எளிமையாக 5ஜி போனாக மாற்ற முடியும்!" என்கிற மோசடி வார்த்தைகளை நீங்கள் கேட்க நேரிடலாம்!

நன்றாக நினைவில் கொள்ளுங்கள் - தொலைதூரத்தில் இருந்தபடி, யாராலுமே உங்கள் 4ஜி போனுக்கு 5ஜி ஆதரவை வழங்க முடியாது!

OTP கேட்பார்கள்!

OTP கேட்பார்கள்!

உங்கள் மொபைலில் 5ஜி-ஐ எனேபிள் செய்வதாக கூறும் எவருடனும் உங்களின் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் ஒடிபி போன்றவைகளை பகிர வேண்டாம்.

அதே போல உங்கள் மொபைலில் 5ஜி-ஐ எனேபிள் செய்ய உதவும் என்று உறுதியளிக்கும் எந்தவொரு அதிகாரப்பூர்வமற்ற ஆப்களையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.

அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் அதிர்ச்சி ரிப்போர்ட்! 2022 முடிவில் "இந்த போன்கள்" எல்லாமே குப்பைக்கு போகும்!

03. உங்க ஊரில் 5ஜி இல்லை என்றாலும் பரவாயில்லை!

03. உங்க ஊரில் 5ஜி இல்லை என்றாலும் பரவாயில்லை!

"அதனால என்ன? உங்க ஊரில் இன்னும் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படவில்லை என்றாலும் கூட பரவாயில்லை! நாங்கள் சொல்வதை செஞ்சா போதும்.. உங்களுக்கு 5ஜி கிடைக்கும்!" என்று வாய் கூசாமல் பொய் சொல்லுவார்கள்! நம்பி விடாதீர்கள்!

இதுவரை 5ஜி சேவைகள் தொடங்கப்படாத எந்தவொரு நகரத்திலும் உங்களால் 5ஜி-ஐ பெற முடியாது. உங்கள் டெலிகாம் ஆப்ரேட்டர் உங்கள் நகரத்தில் 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தும் வரை காத்திருங்கள்; எந்த மோசடியில் சிக்கி கொள்ளாதீர்கள்.

டிசம்பர் 2023... மார்ச் 2024 க்குள்!

டிசம்பர் 2023... மார்ச் 2024 க்குள்!

டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி ஆகிய எட்டு நகரங்களில் ஏர்டெல் நிறுவனம் அதன் 5ஜி-ஐ அறிமுகப்படுத்தத் தொடங்கியது.

மறுகையில் உள்ள ஜியோ - டெல்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் வாரணாசியில் தன் பீட்டா சோதனைகளை தொடங்கியுள்ளது.

எப்படி பார்த்தாலும், 5ஜி சேவைகள் நாடு முழுவதும் சென்றடைய அடுத்த இரண்டு ஆண்டுகள் ஆகும். இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால்.. ஜியோ நிறுவனம் டிசம்பர் 2023 க்குள்ளும், பார்தி ஏர்டெல் ஆனது மார்ச் 2024 க்குள்ளும் நாடு முழுவதிலுமான 5ஜி-ஐ அறிமுகம் செய்யும்.

இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!இதை மட்டும் செஞ்சா போதும்.. உங்க மொபைல் பேட்டரி 2 - 3 நாளுக்கு தீராது!

04. புதுசா 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டாம்!

04. புதுசா 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வேண்டாம்!

"உங்களுடைய பழைய 4ஜி போன் இருந்தாலே போதும்.. 5ஜி சேவைகளை அனுபவிக்க புதுசா ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டிய அவசியமே இல்லை!" என்று கதை சொல்லுவார்கள். அவர்களை அப்படியே புறக்கணித்து விடுங்கள்!

ஏனென்றால், உங்கள் மொபைலில் 5ஜி நெட்வொர்க் கிடைப்பதற்கு, அது நிச்சயமாக ஒரு 5ஜி எனேபிள்டு ஸ்மார்ட்போனாக இருக்க வேண்டும்.

சற்றே விழிப்புடன் இருக்கவும்!

சற்றே விழிப்புடன் இருக்கவும்!

அதாவது ஒரு 4ஜி போனை 5ஜி போனாக யாராலும் மாற்ற முடியாது. எனவே சற்றே விழிப்புடன் இருக்கவும். அதேபோல எந்தவொரு மென்பொருளும் அல்லது செயலியும் கூட உங்கள் 4ஜி போனை ஒரு 5ஜி போனாக மேம்படுத்தாது என்பதை நினைவில் கொள்ளவும்.

Best Mobiles in India

English summary
5G Scam Alert For All Smartphone Users Do Not Believe These 4 Lies for Any Reason

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X