4G டூ 5G சீக்ரெட்! இந்த மேட்டர் தெரிஞ்சதும்.. உடனே Settings-க்கு போவீங்க!

|

உள்ளூர் ஆட்டோக்கார அண்ணன், அக்கா முதல்.. உலகளாவிய "விபாயாரிகளான" அம்பானி, அதானி வரையிலாக.. (சமீப காலமாக) அனைவரின் வாய்களிலும் "அடிப்படும்" ஒரு வார்த்தை - 5G!

கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மத்தியில், 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடந்து முடிந்த வேகத்தில், யார் முதலில் 5ஜி சேவையை அறிமுகம் செய்ய போகிறார்? என்கிற போட்டியும் முடுக்கி விடப்பட்டுள்ளது!

Airtel மற்றும் Jio-வும் ரெடி... ஆனால் மக்கள் ரெடியா?

Airtel மற்றும் Jio-வும் ரெடி... ஆனால் மக்கள் ரெடியா?

நாட்டில் 5ஜி சேவைகளை தொடங்குவது யாராக வேண்டுமானால் இருக்கலாம். அது பார்தி ஏர்டெல் ஆக இருக்கலாம். அல்லது ரிலையன்ஸ் ஜியோவாக இருக்கலாம்!

"அது அவங்க பிரச்சனை, அவங்க போட்டி! நாம் 5ஜி-க்கு தயாராக இருக்கிறோமா? நம்மால் 5ஜி சேவைகளை அணுக முடியுமா?" என்பது தான் நம்ம பிரச்சனை!"

சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!சில்லறை வேலையை பார்த்த சீனா! இதெல்லாம் ஒரு பொழப்பா? கழுவி ஊற்றிய நாசா!

"தீபாவளி பரிசு காத்திருக்கிறது!"

இந்தியாவில், கூடிய விரைவில்.. இன்னும் சொல்லப்போனால் வருகிற தீபாவளி பண்டிகை காலத்தில், 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5ஜி சேவைகளை யாரெல்லாம் வழங்குவார்கள் என்பதில் சந்தேகமே வேண்டாம் - இந்தியாவின் மூன்று மிகப்பெரிய டெலிகாம் நிறுவனங்களான - ஜியோ, ஏர்டெல் மற்றும் விஐ ஆகியவைகள் தான்!

அதெல்லாம் சரி.. உங்க  போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்குமா?

அதெல்லாம் சரி.. உங்க போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்குமா?

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 5ஜி ஸ்பெக்ட்ரத்தை ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஜியோவைத் தொடர்ந்து சுனில் மிட்டலுக்குச் சொந்தமான பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ..43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. கடைசியாக உள்ள வோடபோன் ஐடியா (Vi) நிறுவனமானது ரூ.18,799 கோடி செலவு செய்துள்ளது.

இப்படி கோடிகளில் புரளும் 5ஜி ஒருபக்கம் இருக்க, உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் ஆனது 5G நெட்வொர்க்கை ஆதரிக்குமா என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா?

செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பச்சை நிற பொருள்! இதெப்படி சாத்தியம்?

தெரியாதென்றால்.. உடனே செக் செய்யுங்கள்!

தெரியாதென்றால்.. உடனே செக் செய்யுங்கள்!

இந்தியாவில் எப்போது வேண்டுமானாலும் 5ஜி சேவைகள் அறிமுகப்படுத்தப்படும் என்கிற சூழ்நிலையில், உங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க்கை சப்போர்ட் செய்யுமா? செய்யாதா? என்கிற கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லை என்றால்..

உங்கள் போன் 5G சேவையை ஆதரிக்குமா அல்லது 4G, 3G மற்றும் 2G சேவைகளை மட்டுமே ஆதரிக்குமா? என்பதை கண்டறியும் எளிய வழிமுறை இதோ:

சில நொடிகளில்.. Settings வழியாகவே கண்டுபிடிக்கலாம்!

சில நொடிகளில்.. Settings வழியாகவே கண்டுபிடிக்கலாம்!

- முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள செட்டிங்ஸ்-க்கு செல்லவும்.

- பின்னர் 'வைஃபை & நெட்வொர்க்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்

- இப்போது 'சிம் & நெட்வொர்க்' என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும், (நீங்கள் டூயல் சிம் கார்ட்டை பயன்படுத்தினால்.. ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும்)

- பின்னர் இப்போது Preferred network type என்கிற விருப்பத்தை காண்பீர்கள்; அதை கிளிக் செய்யவும்.

- ஒருவேளை உங்கள் போன் 5G-ஐ ஆதரித்தால், அங்கே 2G/3G/4G/5G என பட்டியலிடப்படும். இல்லையென்றால் 5ஜி காணாப்படாது!

முதல் முறையாக ஏலியன் கிரகத்தை முதல் முறையாக ஏலியன் கிரகத்தை "நேரடியாக" போட்டோ எடுத்த நாசா!

5G நெட்வொர்க்கை ஆதரிக்கவில்லை என்றால்?

5G நெட்வொர்க்கை ஆதரிக்கவில்லை என்றால்?

உங்கள் போன் 5G நெட்வொர்க்கை ஆதரிக்கவில்லை என்றால், வரவிருக்கும் அதிவேக இண்டர்நெட்டை நீங்கள் அனுபவிக்க விரும்பினால்.. வேறு வழியே இல்லை, நீங்களொரு 5G-எனேபிள்டு செய்யப்பட்டட ஸ்மார்ட்போனை வாங்கியே ஆக வேண்டும்.

Realme, Xiaomi உட்பட பல நிறுவனங்கள் ஏற்கனவே மலிவு விலையில் 5G ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகின்றன. போதாக்குறைக்கு வரும் நாட்களில் ரூ.10,000 க்குள் வாங்க கிடைக்கும் 5G போன்களும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

Most Read Articles
Best Mobiles in India

English summary
5G Phone Checker 2022 Check Your Android Smartphone Support 5G Network or Only 4G 3G and 2G

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X