சூப்பர் டிப்ஸ்: ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இதையெல்லாம் செய்யலாம்.!

"செலவா.? அதெல்லாம் செய்ய முடியதுப்பா.. சல்லிப்பைசா கூட செலவு இல்லாமல் ஏதாச்சும் ஸ்மார்ட்போன் மேம்பாடுகளை நிகழ்த்த முடியுமா.? அப்படி ஏதாச்சும் இருந்தா சொல்லு.. இல்லனா இடத்தை காலி பண்ணு"

|

ஸ்மார்ட்போன்கள் பல்பணி செய்யுமொரு சாதனம் என்பதையும், அதனை கொண்டு அழைப்புகள் தவிர பல விடயங்களை மேற்கொள்ள முடியும் என்பதையும் நாம் அறிவோம். இருப்பினும், சில அதிகபட்ச ஸ்மார்ட்போன் அனுபவத்தை பெற விரும்பும்போது, ​​சில நேரங்களில் சிறிதளவிலான பணத்தையாவது செலவழிக்க வேண்டியிருக்கும்.

சூப்பர் டிப்ஸ்: ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் இதையெல்லாம் செய்யலாம்.!

"செலவா.? அதெல்லாம் செய்ய முடியதுப்பா.. சல்லிப்பைசா கூட செலவு இல்லாமல் ஏதாச்சும் ஸ்மார்ட்போன் மேம்பாடுகளை நிகழ்த்த முடியுமா.? அப்படி ஏதாச்சும் இருந்தா சொல்லு.. இல்லனா இடத்தை காலி பண்ணு" என்று "படபட"வென பட்டாசாய் வெடிக்கும் நபரா நீங்கள்.? அப்படியானால் இதோ உங்களுக்கான டிப்ஸ் "சுடச்சுட" - டேக் இட்.!

News Source: www.twoeggz.com

உங்களுக்கு பிடித்த வர்ணங்களில் மல்டி-கலர் பில்டர்

உங்களுக்கு பிடித்த வர்ணங்களில் மல்டி-கலர் பில்டர்

இன்ஸ்டாகிராம் சகாப்தத்தில் வாழும் நாம் அனைவருமே, சிறப்பான மற்றும் பெரிய அளவிலான புகைப்படங்களை எடுத்து ஆன்லைனில் இடுகையிட அலாதியாய் விரும்புகிறோம். அதற்கு உதவும் பல வகையான பில்டர்கள் மற்றும் மற்றும் எபெக்ட்ஸ்களை உள்ளடக்கிய பல பயன்பாடுகள் உள்ளன, ஆனால் அவைகள் அனைத்துமே நமது நேரம் (செயல்முறையின் போது) மற்றும் பணத்தை (இன்டர்நெட் செலவு உட்பட) எடுத்து கொள்கின்றன.

கேமராவின் மீது ஒளிபுகும் டேப்பை ஒட்டி..

கேமராவின் மீது ஒளிபுகும் டேப்பை ஒட்டி..

இன்னும் சொல்லப்போனால் எடிட்டிங் செய்யவதும், அந்த முழு செயல்முறையுமே செம்ம போர் அடிக்கும் ஒரு விடயமாகும். இது எதுவுமே செய்யாமல் மிகவும் எளிமையாக பில்டர்ஸ் சேர்க்க ஏதேனும் வழி இருக்கிறதா என்று கேட்டால் - இருக்கிறது. உங்கள் தொலைபேசியின் கேமராவின் மீது ஒளிபுகும் டேப்பை ஒட்டி, அதன் மீது நீங்கள் விரும்புகிற அல்லது சூழலுக்கு ஏற்ற மாதிரியான வண்ணங்களை தீட்டி புகைப்படம் எடுத்து பாருங்களேன். ஒரு ஆச்சரியமான புகைப்படம் நிச்சயமாக கிடைக்கும்.

உங்களுக்கு பொருத்தமான விஆர் கிளாஸ்.!

உங்களுக்கு பொருத்தமான விஆர் கிளாஸ்.!

விர்ச்சுவல் ரியாலிட்டி ஆனது மிகவும் பிரபலமாக மற்றும் புதிரான ஒன்றாக இருக்கும் அதே சமயம் சற்று விலைமதிப்பு மிக்கதாகவும் உள்ளது. வருகிறது. விஆர் எனப்படும் இந்த குறிப்பிட்ட அனுபவத்தை சேர்க்க பல விளையாட்டுகள் மற்றும் வீடியோக்கள் உருவாக்கப்படுகின்றன.

ஆன்லைன் டெம்ப்ளேட்டைக் கண்டுபிடியுங்கள்,

ஆன்லைன் டெம்ப்ளேட்டைக் கண்டுபிடியுங்கள்,

அதையெல்லாம் மலிவான விலையில் அனுபவிக்க விரும்பும் நபரா நீங்கள்.? அப்போது உங்களுக்கான விஆர் கண்ணாடியை நீங்களே செய்து கொள்ளுங்களேன், இதை நிகழ்த்த ஒரு எளிய நடைமுறை உள்ளது. உங்களுக்கான விஆர் கண்ணாடிக்கான ஆன்லைன் டெம்ப்ளேட்டைக் கண்டுபிடியுங்கள், அதை அச்சிடுக, அதை அடிப்படையாய் கொண்டு அட்டையை வெட்டி, அதனுடன் படிவங்களை ஒட்டி, இறுதியாக பைகோன்வெக்ஸ் லென்ஸ்களை பொருத்துங்கள். அவ்வளவுதான் - உங்களுக்கான விஆர் கிளாஸ் ரெடி.!

உங்கள் தொலைபேசிக்கான ஒரு ஜாய்ஸ்டிக்.!

உங்கள் தொலைபேசிக்கான ஒரு ஜாய்ஸ்டிக்.!

உங்கள் ஸ்மார்ட்போனில் கேம் விளையாடும் போது, ஒரு ஜாய்ஸ்டிக் இருந்தால் இந்த கேம் இன்னும் சிறப்பானதொரு அனுபவத்தை வழங்கியிருக்கும் என்று எண்ணியது உண்டா.? அது உண்மையில் சாத்தியம் தான், அதுவும் ஒன்றுமே செலவாகாமல் சாத்தியம் என்று கூறினால் நம்புவீர்களா.? நம்பித்தான் ஆகவேண்டும்.

2 ரப்பர் பேண்ட்களை எடுத்து சுருட்டி..

2 ரப்பர் பேண்ட்களை எடுத்து சுருட்டி..

முதலில், ஒரு பிளாஸ்டிக் பாட்டிலை 2 துண்டுகளாக வெட்டி கொள்ளுங்கள். பின்னர் கத்திரிக்கோலை பயன்படுத்தி அந்த பாட்டிலை சுற்றி 4-6 அங்குல நீளமுள்ள ஒரு துண்டை வெட்டி எடுங்கள். சிறிதளவு பஞ்சுதனை எடுத்து அதை அலுமினிய தகடு கொண்டு போர்த்தி அதை ஒரு பளபளப்பான பந்து போல தயார் செய்து கொள்ளுங்கள். பின்னர் வெட்டப்பட்ட பிளாஸ்டிக் பட்டையை சுருட்டி அதன் முனைகளை பசையிட்டு ஒட்டவும். பின்னர் 2 ரப்பர் பேண்ட்களை எடுத்து சுருட்டி ஒட்டப்பட்ட பிளாஸ்டிக் வட்டத்தினுடன் இணைத்து உங்கள் ஸ்மார்ட்போனின் கீழ் பகுதியில் மாட்டிக்கொள்ளவும். இப்போது இதை வைத்து, ஒரு விளையாட்டை இயக்கவும், அதை ஒரு ஜாய்ஸ்டிக் போல பயன்படுத்தவும் முடியும். மகிழுங்கள்.!

க்ளோஸ்-அப் புகைப்படங்களுக்கான தந்திரம்.!

க்ளோஸ்-அப் புகைப்படங்களுக்கான தந்திரம்.!

உங்கள் தொலைபேசி கொண்டு க்ளோஸ்-அப் புகைப்படங்களை எடுக்க விரும்புகிறீர்களா, ஆனால் உங்கள் கேமரா அதை அனுமதிக்கவில்லையா.? ஒரு விலையுயர்ந்த மேக்ரோ விளைவு லென்ஸ் கேமரா கொண்ட ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லையா.? கவலையை விடுங்க. அதற்கும் ஒரு ஈஸியான தந்திரம் இருக்கு.

பழைய லேசர் பாயிண்டரை கண்டுபிடிக்க வேண்டும்

பழைய லேசர் பாயிண்டரை கண்டுபிடிக்க வேண்டும்

இதை நிகழ்த்த நீங்கள் ஒரு சில நிமிடங்கள் செலவழித்தால் போதும். உங்களுக்கே சொந்தமான ஒன்றை க்ளோஸ் அப் கேமராவை உருவாக்கி விடலாம். நீங்கள் ஒரு பழைய லேசர் பாயிண்டரை கண்டுபிடிக்க வேண்டும். அதன் உள்ளே இருக்கும் போகஸ் லென்ஸ்தனை களைய வேண்டும். பின்னர் அதை ஒரு ஹேர்பின் மூலம் பின் பக்க கேமராவுடன் இணைத்து அல்லது உங்களுக்கே உரிய வழிமுறையை கொண்டு கேமராவுடன் இணைத்து, கேமராவை ஆன் செய்து தான் பாருங்களேன். அந்த விளைவு நம்பமுடியாத ஒன்றாக இருக்கும்.

உங்கள் ஸ்டைலஸை உருவாக்குங்கள்.!

உங்கள் ஸ்டைலஸை உருவாக்குங்கள்.!

ஸ்மார்ட்போன்களுக்கான ஸ்டைலஸ்கள் மிகவும் பிரபலமானவைகள் அல்ல, இருப்பினும் கூட சில சூழ்நிலைகளில் அவைகள் நமக்கு உண்மையில் தேவைப்படும் இடங்கள் உள்ளன. உதாரணமாக, நீங்கள் உங்கள் தொலைபேசியில் அல்லது டேப்ளெட்டில் படங்களை வரைய விரும்பினால், உங்கள் விரல்கள் அதற்கு ஏதுவானதாக இருக்காது; பொருந்தாது.

இது உங்கள் டிஸ்பிளேவை கீறாது.!

இது உங்கள் டிஸ்பிளேவை கீறாது.!

இந்த இடத்தில் உங்களுக்கு ஒரு ஸ்டைலஸ் தேவைப்படும். ஆனால் அவைகள் விலையுயர்ந்ததாக இருக்கிறதே.? ஆக வழக்கம் போல, உங்கள் ஸ்டைலஸை நீங்களே உருவாக்குங்களேன். அதெப்படி.? அதை செய்ய ஒரு சரியான மற்றும் எளிமையான வழி உள்ளது. நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சாதாரண பேனாவை அலுமினிய தாளில் சுருட்டி அதன் இறுக்கமாக விளிம்புகளை அழுத்தி ஸ்டைலஸ் போன்று உருவாக்கவும் பின்னர் அதை பயன்படுத்தவும். பயப்பட வேண்டாம், இது உங்கள் டிஸ்பிளேவை கீறாது.

Best Mobiles in India

English summary
5 Ways to Tune Up Your Smartphone That Won’t Cost You Anything. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X