Home
How to

ஹேக்கர்களிடம் இருந்து இண்டர்நெட் நெட்வொர்க்கை பாதுகாப்பது எப்படி?

By Siva

LAN என்று கூறப்படும் லோக்கல் ஏரியா இண்டர்னெட் என்னும் இண்டர்நெட் கனெக்ஷன் தற்போதைய வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்டது.

ஹேக்கர்களிடம் இருந்து இண்டர்நெட் நெட்வொர்க்கை பாதுகாப்பது எப்படி?

ஆனால் அதே நேரத்தில் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த காசில் வாங்கிய இண்டர்நெட் கனெக்ஷனை இன்னொரு நமக்கு தெரியாமல் பயன்படுத்த அனுமதிக்காதவாறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வது என்ற விழிப்புணர்வு எத்தனை பேருக்கு இருக்கின்றது.

3ஜி போன்களிலும் ரிலையன்ஸ் ஜியோ பார்கோடு பெறுவது எப்படி??

ஸ்ட்ராங்கான பாஸ்வேர்டு:

பொதுவாக இண்டர்நெட் கனெக்ஷனின் பாஸ்வேர்ட் அல்லது வைஃபை பாஸ்வேர்டுகளை பலர் மிக எளிதாக அமைத்து விடுகின்றனர். இதனால் ஹேக்கர்கள் மிக எளிதில் நம்முடைய இண்டர்நெட்டை திருடி விடுகின்றனர். இண்டர்நெட் பாஸ்வேர்டை குறைந்த பட்சம் வருடத்திற்கு மூன்று முறை மாற்ற வேண்டும் என்பதோடு பாஸ்வேர்டை யாரும் அறிந்திராவண்ணம் கடுமையாக உருவாக்க வேண்டும். சிறப்பு கேரக்டர்களின் மூலம் பாஸ்வேர்ட் அமைப்பது சிறப்பு.

ஸ்கேன் செய்ய மறக்க வேண்டாம்.

உங்களுடைய டெக்ஸ்டாப் கம்ப்யூட்டரிலோ அல்லது லேப்டாப்பிலோ மெமரி கார்டு, பென் டிரைவர் ஆகியவை பயன்படுத்தும்போது கண்டிப்பாக அவற்றை ஸ்கேன் செய்வது நல்லது. ஸ்கேன் செய்யாவிட்டால் அதில் மறைந்திருக்கும் ஹேக்கர்களின் வைரஸ்கள் உங்கள் பாஸ்வேர்டை மிக எளிதில் கடத்திவிடும். இதனால் எக்ஸ்டர்னல் டிவைஸ்களை கண்டிப்பாக ஸ்கேன் செய்து பயன்படுத்துங்கள்.

ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்:

உங்கள் கம்ப்யூட்டர்களில் தானாக வரும் ஒருசில ஃபைல்களில் ஒருசில மால்வேர்கள் ஒளிந்திருக்கும். இதனால் இவ்வகை ஸ்கேம்களை தவிர்க்க ரெகுலராக ஆண்ட்டி வைரஸ் புரோக்ராம் மூலம் அத்தகைய சாப்ட்வேர்களை அழித்துவிட வேண்டும்,

ஸ்பேம் லிங்குகளை தவிர்க்க வேண்டும்:

நாம் ஒருசில இணையதளங்களுக்கு செல்லும்போது தானாகவே சில லிங்குக்கள் நம் முன்னே தோன்றும். இத்தகைய லிங்குகள் கண்டிப்பாக ஹேக்கர்களில் மால்வேர் லிங்குகளாகத்தான் இருக்கும். எனவே இத்தகைய லிங்குக்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மேலும் பாதுகாப்பான இணையதளங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதையும் ஞாபகப்படுத்த வேண்டும்,

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
LAN or Local Area Network is the type of network connection , where it is used for getting connected to the internet service along with a certain limited area.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X