உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
கொரோனா கால கட்டத்திற்குப் பிறகு வைஃபை என்பது அனைத்து வீடுகளிலும் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. ஆன்லைன் வகுப்புகள் மற்றும் வொர்க் ப்ரம் ஹோம் (Work From Home), OTT பயன்பாடு போன்ற காரணங்களால் Wi-Fi பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
வைஃபை வைத்திருப்பது இப்போது இது ஒரு புதிய கலாச்சாரமாகவே மாறிவிட்டது. வீடுகளில் எப்படி பிரிட்ஜ் (Fridge), வாஷிங் மெஷின் (Washing Machine) போன்ற சாதனங்கள் முக்கியமோ, அதேபோல இப்போது வைஃபை ரூட்டர் (Wi-Fi Router) சாதனங்களையும் மக்கள் அதிகளவில் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

வாங்கிய புதிதில் இருந்த வைஃபை வேகம் இப்போது இல்லையா?
வயர் (Wire) மூலம் இணைக்கப்படும் LAN கனெக்சனை தாண்டி, வயர்லெஸ் (Wireless) முறையில் வரும் வைஃபை இன்டர்நெட் வசதிக்கு அதிகப்படியான வரவேற்பு கிடைப்பதற்குக் காரணம், வீட்டில் எந்த பகுதியில் இருந்து வேண்டுமானாலும் இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்திக்கொள்ள இந்த வைஃபை சாதனங்கள் அனுமதிக்கின்றன. இந்த சவுகரியம் காரணமாகவே பலர் வயர்லெஸ் வைஃபை கனெக்ஷனை விரும்புகின்றனர்.
ஆனால், வாங்கிய புதிதில் இருக்கும் வைஃபையின் வேகம் போகப்-போக பாதிக்கப்படுவது வழக்கம். இதற்கு, முறையான பராமரிப்பு இன்மையை ஒரு முக்கிய காரணம் என்று கூறலாம். பலருக்கு வைஃபை ரூட்டரை எப்படி முறையாகப் பராமரிப்பது என்று தெரிவதில்லை. எப்போதும், உங்கள் வைஃபை சிறப்பான கனெக்டிவிட்டியை கொடுப்பதற்கான சில டிப்ஸ்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
வைஃபை இன்ஸ்டால் செய்வதில் மிகவும் முக்கியமானது சரியான இடத்தில் அதைப் பொருத்தி வைப்பது. வைஃபையானது வயர்லெஸ் கனெக்ஷன் என்பதால், சிக்னல் பயணிக்கும் வழியில் ஏதேனும் பொருள் இடையூறாக இருக்கும் பொழுது சிக்னலின் வேகம் பாதிக்கப்படும். இதனைத் தவிர்க்க, எந்த-எந்த அறைகளில் வைஃபை பயன்படுத்துவீர்களோ, அதற்கு பொதுவான ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ரூட்டரை இன்ஸ்டால் செய்வது சிறப்பானது.

உங்கள் WiFi சிக்னல் ஸ்ட்ரென்த்தை அதிகரிக்க இதை செய்யலாம்.!
WiFi ரூட்டரை ஒரு சமதளமான இடத்தில், பொருட்கள் இடையூறாக இல்லாத வகையில் பொருத்தி வைப்பது அவசியம். வைஃபை இலிருந்து வரும் வயர்லெஸ் சிக்னல்கள் அக்கம் பக்கத்து வீட்டிலிருந்து வரும் சிக்னல்களால் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளன. எனவே உங்களது வைஃபையிற்கு தனியாக வயர்லெஸ் சேனலை அமைத்துக்கொள்வது நல்லது.
பொதுவாக, வைஃபையில் வரும் சிறிய ஆம்னி டைரக்சனல் (Omni-directional) ஆன்டனாக்கள் அனைத்து திசைகளிலும் சிக்னலை பரப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். உங்கள் வீட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் வைஃபையை நீங்கள் பயன்படுத்துவீர்களானால், இந்த ஆம்னி டைரக்சனல் ஆன்டனாக்கள் பயன்படலாம். ஆனால் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டும் வைஃபை நீங்கள் பயன்படுத்தினால் டைரக்ஷனல் ஆன்டனாக்களை உபயோகிப்பது நல்லது.
இந்த டைரக்ஷனல் ஆன்டனாக்கள் குறிப்பிட்ட திசையை நோக்கி வைஃபை சிக்னலை ஃபோகஸ் (Focus) செய்ய உதவும். இதன் மூலம் சாதாரண ஆம்னி டைரக்ஷனல் ஆன்டனாக்களினால் கிடைக்கும் வேகத்தை விட அதிக வேகத்தில் வைஃபை கனெக்ஷன் கிடைக்கும். இவற்றை ஹை கெயின் (High gain) என்று கூறுவர். Wi-Fi சிக்னலை அதிகரிக்க மற்றொரு சிறந்த வழி ரிப்பீட்டரை (Repeater) பயன்படுத்துவது.

வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்து இப்படி கூட WiFi சிக்னல் ஸ்ட்ரென்த்தை அதிகரிக்கலாமா?
இந்த ரிப்பீட்டர்கள் புதிதாக சிக்னலை உருவாக்காமல், ஏற்கனவே இருக்கும் உங்கள் வைஃபை சிக்னலை மீண்டும்-மீண்டும் வெளிப்படுத்தும். இதன் மூலம் சிக்னல் பூஸ்ட் (Boost) ஆகும். ஒரு ரிப்பீட்டரை இன்ஸ்டால் செய்வதற்கு புதிய கனெக்சன், கூடுதல் வயர்கள் தேவையில்லை. வீட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ரிப்பீட்டர்களை வைப்பதன் மூலம் அதிவேக வைஃபை கனெக்ஷனை பெற்று சிறப்பாக பணியாற்றலாம்.
ரிப்பீட்டரைப் போல, சில ஆன்டனாக்களையும் பயன்படுத்தி வைஃபை சிக்னலை பூஸ்ட் செய்ய முடியும். சில இணையதளங்களில் இதற்கான டெம்ப்லேட்களும் (Template) கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றை பயன்படுத்தி பாயில் (Foil) அல்லது கார்ட்போர்ட் (Cardboard) மூலம் வீட்டிலேயே பிரத்தியேக ஆண்டனாக்களை உருவாக்கி, அவற்றை ஆன்டனா பூஸ்டர்களாக பயன்படுத்தலாம்.
பொதுவாக ஆண்டனா பூஸ்டருக்கு பாரபோலிக் சாட்டிலைட் (Parabolic satellite), காபி கேன் (Coffee Can) போன்ற வடிவங்களில் ஆன்டனாக்களை உருவாக்கலாம். இவை வயர்லெஸ் சிக்னலை பூஸ்ட் செய்வது மட்டுமில்லாமல் ஒரு குறிப்பிட்ட திசைக்கு டைரக்ட் செய்யவும் உதவும். இதைவிட, சிறப்பான விஷயம் என்னவென்றால், அமேசான் போன்ற தளங்களில் இதற்கென்று சில கேட்ஜெட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசியாக உங்கள் WiFi Firmware-ஐ எப்போது அப்டேட் செய்தீர்கள்?
ரூட்டர் உற்பத்தியாளர்கள் அவ்வப்போது ஃபார்ம்வேர் (Firmware) அப்டேட்களை வெளியிடுவர். அவற்றைப் பயன்படுத்தி உங்கள் ரூட்டரை அடிக்கடி அப்கிரேட் (Upgrade) செய்வது அவசியம். இவை உங்கள் வைஃபையின் சிக்னலை பூஸ்ட் செய்வது மட்டுமின்றி புதிய அம்சங்களைப் பயன்படுத்தவும் உதவும். இதற்கு தேர்ட் பார்ட்டி ஃபார்ம்வேர்களையும் (Third Party Firmware) உபயோகப்படுத்தியும் பயனடையலாம்.
பாதுகாப்பான ஃபார்ம்வேர்கள் இலவசமாக பிளே ஸ்டோரில் நிறைய இருக்கின்றன. அவற்றில் குறிப்பாக ஒன் ப்ராஜெக்ட் (One Project), DD-WRT ஆகியவற்றைக் கூறலாம். இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் WiFi சிக்னலை பூஸ்ட் செய்து சிறந்த வைஃபை அனுபவத்தை நீங்கள் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








