ஒவ்வொரு நாளும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள்.! இனி செய்ய வேண்டாம்

By Gizbot Bureau
|

தெரிந்தோ தெரியாமலேயே நாம் அனுதினமும் செய்யும் ஒரு செயல்பாடு அல்லது வேலை ஆனது, நாளடைவில் நமது வாழ்வின் ஒரு அன்றாட பழக்கமாகி விடுகின்றன. நாம் மட்டுமின்றி நம்மை சுற்றி உள்ளவர்களும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை நிகழ்த்துவதால், எது சரி.? எது தவறு.? என்பதை நம்மால் அறிந்துகொள்ளவே முடியாது.

அப்படியாக, வாழ்வில் நாள் தோறும் நாம் செய்யும் 5 சிறிய தவறுகள் என்ன.? அது ஏன் தவறு.? எது சரி என்பதை பற்றிய சிறு தொகுப்பே இது.!

05. ஏர்பிளேன் மோட்: போடலாமா.? கூடாதா.?

05. ஏர்பிளேன் மோட்: போடலாமா.? கூடாதா.?

ஏர்பிளேன் மோட்-ல் போட்டுவிட்டு சார்ஜ் செய்தால், ஸ்மார்ட்போனில் மிக விரைவாக சார்ஜ் ஏறும் என்பது உண்மைதான். லாக் செய்யப்பட்டு இருக்கும் போது, இன்டர்நெட் ஆன் ஆகி இருக்கும் பட்சத்தில், பேட்டரி சார்ஜ் ஆவதில் தடைகள் இருக்கும் என்று கூறும் ஜீவிகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் கூட, இன்டர்நெட்டை ஆப் செய்து சார்ஜ் செய்வதை விட, ஏர்பிளேன் மோட்-ஐ ஆன் செய்து சார்ஜ் செய்வதே பெஸ்ட்.!

04. பின்பாக்கெட் மட்டும் உதவாது.!

04. பின்பாக்கெட் மட்டும் உதவாது.!

படுஜோரான மழை என்றால் நாம் ஓரமாக ஒதுங்கி விடுவோம். ஆனால் சாரல் என்றால், பாதுகாப்பதாக நினைத்து, மொபைலை பின்பாக்கெட்டில் வைப்பதும், பின்பக்கம் மழைச்சாரல் அடிக்காது என்று நம்புவதும், நம்மில் பெரும்பாலான செய்யும் ஒரு காரியம் தான். அப்படித்தானே.? ஒருவேளை அப்படி இருக்கலாம். நமக்கு ஏன் அந்த ரிஸ்க். உங்களின் பர்சில் அல்லது காயின் பாக்கெட்டில் ஒரு Sealable plastic bag-ஐ மடித்து வைத்துக்கொள்ளுங்களேன். மழை சிறிதோ, பெரிதோ, மொபைல் நனையாமல் இருப்பதை உறுதி செய்யலாம்.

03. தெரியும் ஆனால், யூஸ் பண்ண மாட்டோம்.!

03. தெரியும் ஆனால், யூஸ் பண்ண மாட்டோம்.!

கம்ப்யூட்டர் கீபோர்டின் கீழே இரண்டு எக்ஸ்பென்டபிள் கால்கள் இருக்கும் என்பதை நாம் அனைவருமே அறிவோம், ஆனால் பயன்படுத்த மாட்டோம். ஒருமுறை யூஸ் பண்ணி பாருங்களேன். பின்தான் புரியும் அந்த கால்கள் டைப்பிங் செய்யும் போது எவ்வளவு உதவியாக இருக்கும் என்பதும், மணிக்கட்டு வலிகளை எவ்வாறு குறைக்கும் என்பதும்.!

02. சிக்கல் சிக்கல்.. சிக்கலோ சிக்கல்.. சிக்கல்களுக்கெல்லாம் சிக்கல்.!

02. சிக்கல் சிக்கல்.. சிக்கலோ சிக்கல்.. சிக்கல்களுக்கெல்லாம் சிக்கல்.!

அழகா சுருட்டி மடிச்சு.. பேக் உள்ளே அல்லது பாக்கெட்டில் உள்ள வச்சிட்டா போதும்.. ஹெட்போன்கள் சிக்கிக்கொள்ளாது என்று நினைப்போம், அதை செய்தும் பார்ப்போம். 10-ல் ஒருமுறை மட்டுமே அது வொர்க் அவுட் ஆகும். மீதி 9 முறையும் ஹெட்போன்கள் சிக்கிதான் கொண்டிருக்கும். ஆக, அடுத்தமுறை, ஒரு சிறிய பிளாஸ்டிக் துண்டை எடுத்து, இடைவெளி இல்லாத அளவு துண்டின் இடையே வெட்டி அதற்கு நடுவில் வட்டமாக வெட்டி, லாக் செய்து கொள்வது போல உருவாக்கி, ஹெட்செட் லாக்கராக பயன்படுத்தி பாருங்களேன்.!

01. செக் செய்யவேண்டிய அவசியமே இருக்காது.!

01. செக் செய்யவேண்டிய அவசியமே இருக்காது.!

BACK BAG என்கிற பெயரை கொண்டிருப்பதால், அதை முதுகில் மட்டும் தான் அணிய வேண்டும் என்கிற சட்டம் ஒன்றுமில்லை. முன்பக்கமாகவும் அணியலாம். குறிப்பாக, லேப்டாப் பேக்கில், லேப்டாப் மட்டுமன்றி, பெண்ட்ரைவ், இன்டர்நெட் கார்ட், எஸ்டி கார்ட் போன்ற சிறு பொருட்களும் இருக்கும். ஆக பேக்கை உங்கள் கண்முன்னே வைத்துகொள்ளவது சிறந்தது. அடிக்கடி பேக்கின் ஸிப் திறந்து இருக்கிறதா என்று செக் செய்யவேண்டிய அவசியமே இருக்காது.!

புகைப்படங்கள் : பிரைட்சைட்

Most Read Articles
Best Mobiles in India

English summary
5 Simple Things We Do Wrong Every Day. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X