India

இந்த 5 அறிகுறியில் 1 இருந்தாலும் உங்கள் போனில் பெரிய சிக்கல் இருக்கிறது என்று அர்த்தம்!

|

இந்த எச்சரிக்கை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை வைத்து இருப்பவர்களுக்கு மட்டுமோ அல்லது ஐபோன் யூசர்களுக்கு மட்டுமோ அல்ல.. அனைவருக்கும் தான்!

அதாவது உங்கள் கையில் எந்தவொரு நிறுவனத்தின், எந்தவொரு ஓஎஸ்-இன் கீழ் இயங்கும் மொபைல் போன் இருந்தாலும் சரி.. இந்த எச்சரிக்கை உங்களுக்கு பொருந்தும்!

அதென்ன எச்சரிக்கை? அதென்ன அறிகுறிகள்?

அதென்ன எச்சரிக்கை? அதென்ன அறிகுறிகள்?

தலைப்பில் குறிப்பிட்ட 5 அறிகுறிகளை பற்றி அறியும் முன்னர், இந்த எச்சரிக்கைக்கான அடித்தளம் என்ன என்பதை பற்றி மேலோட்டமாக பார்த்து விடலாம்.

ஸ்மார்ட் டிவி இல்லாத வீடுகளில் கூட 2 - 3 ஸ்மார்ட்போன்கள் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இப்படி தாறுமாறாக பெருகிப்போன மொபைல் போன்களின் எண்ணிக்கையானது மிகவும் மோசமான மால்வேர்கள் (Malware) மற்றும் வைரஸ்களின் (Virus) எண்ணிக்கைகளையும் சேர்த்தே அதிகரித்துள்ளது.

Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் Google Drive யூஸ் பண்ற எல்லாருக்கும் "இது" கட்டாயம் தெரிஞ்சு இருக்கனும்! என்னது அது?

கூகுளும், ஆப்பிளும் அடிக்கடி கெஞ்சுவது - இதனால் தான்!

கூகுளும், ஆப்பிளும் அடிக்கடி கெஞ்சுவது - இதனால் தான்!

லேட்டஸ்ட் வெர்ஷனுக்கு அப்டேட் ஆகவும் என்று கூகுளும், ஆப்பிளும் அடிக்கடி கெஞ்சுவதற்கு முக்கிய காரணமே - மால்வேர்களும், வைரஸ்களும் தான்!

பெரும்பாலான நேரங்களில், Google மற்றும் Apple ஆகிய இரண்டுமே மால்வேர், வைரஸ் அல்லது அது தொடர்பான பாதிப்புகளை உடனே கண்டறிந்து விடும்.

அதை தொடர்ந்து, குறிப்பிட்ட மால்வேரை / வைரஸை "காலி செய்யும்" சொல்யூஷனை உருவாக்கும், அதை லேட்டஸ்ட் செக்யூரிட்டி பேட்ச் ஆக வெளியிட்டு, அதை உடனே டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யுமாறும் கேட்கும்.

சில சமயம் நீங்கள் தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!

சில சமயம் நீங்கள் தான் உங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!

சில சமயங்களில், கூகுளும் ஆப்பிளும் தன்னால் முடிந்த வேகத்தில் ஒரு மால்வேரை, ஒரு வைரஸை கண்டுபிடிக்காமல் போகலாம்.

இந்த இடத்தில் தான் உங்கள் மொபைல் போனையும், அதில் உள்ள உங்கள் பெர்சனல் டேட்டாவையும் பாதுகாக்க நீங்களே சொந்தமாக ஏதாவது செய்ய வேண்டியிருக்கும்.

யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் யாருமே சொல்லித்தர மாட்டாங்க.. Truecaller-இல் "இதை" மறைக்க முடியும்னு!

சாதாரண மக்களால் எப்படி ஒரு மால்வேர்-ஐ கண்டுபிடிக்க முடியும்?

சாதாரண மக்களால் எப்படி ஒரு மால்வேர்-ஐ கண்டுபிடிக்க முடியும்?

Google மற்றும் Apple போன்ற நிறுவனங்களையே திக்குமுக்காட வைக்கும் மால்வேர்களை / வைரஸ்களை சாதாரண ஸ்மார்ட்போன் யூசர்களால் எப்படி கண்டுபிடிக்க முடியும்? - நியாமான கேள்வி!

மால்வேர்களை / வைரஸ்களை கண்டறிவதற்கு பெரிய அளவிலான வழிகாட்டுதல்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட, உங்கள் மொபைல் போன் ஒரு மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடித்து விடலாம்.

உடனே.. மொபைல் போனை பிரித்து பார்க்க வேண்டுமா என்று பயப்பட வேண்டாம்!

உடனே.. மொபைல் போனை பிரித்து பார்க்க வேண்டுமா என்று பயப்பட வேண்டாம்!

கவலைப்பட வேண்டாம், உங்கள் ஸ்மார்ட்போன் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய, அதை அக்கு வேறாக ஆணி வேறாக கழட்டி, பிரித்து பார்க்கமாறு நாங்கள் உங்களை கேட்க மாட்டோம்.

மாறாக ஸ்மார்ட்போனின் பேட்டரி லைஃப் எப்படி இருக்கிறது? அது அடிக்கடி ஓவர்ஹீட் ஆகிறதா? போன்ற எளிமையான சோதனைகளை வைத்தே உங்கள் மொபைல் போன் ஒரு தீங்கு விளைவிக்கும் மால்வேரால் / வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை உங்களால் கண்டறிய முடியும்; அதென்ன அறிகுறிகள்:

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

01. அடிக்கடி ஓவர் ஹீட்டிங்:

01. அடிக்கடி ஓவர் ஹீட்டிங்:

மொபைல் போன்கள் ஓவர்-ஹீட்டிங் ஆவதொன்றும் பெரிய சிக்கல் இல்லை. ஆனால் அது அடிக்கடி நடக்கிறதா? அவைகள் மிகவும் வெப்பமடைகிறதா? என்பதே இங்கே எழும் முக்கிய கேள்வி!

பெரும்பாலும் ஒரு மால்வேர் அதன் "வேலையை" செய்ய, உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ப்ராசஸர் மற்றும் பிற முக்கிய ஆதாரங்களையே பயன்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலைகளில் உங்கள் ஸ்மார்ட்போன் மிகவும் கடுமையான ஓவர்ஹீட்டிங்கை சந்திக்கும்.

இந்த சிக்கலை சரி செய்வது எப்படி?

இந்த சிக்கலை சரி செய்வது எப்படி?

உங்கள் ஸ்மார்ட்போன் அடிக்கடி மற்றும் மிகவும் அதிகமாக வெப்பமடைவதை நீங்கள் கண்டுபிடித்தால், நீங்கள் சமீபத்தில் இன்ஸ்டால் செய்த ஆப்களை சரிபார்த்து, அதில் சந்தேகத்திற்கு இடமான ஆப்களை டெலிட் செய்யவும். ஏனெனில் அது ஒரு மால்வேர் ஆக இருக்கலாம்.

இல்லையேல், உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள முக்கியமான டேட்டாக்களை பேக்-அப் எடுத்துவிட்டு, மொபைல் போனை 'ரீசெட்' செய்யவும்.

Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?Google எச்சரிக்கை! இந்த 4 ஆப்களையும் உடனே DELETE செய்யவும்; ஏனென்றால்?

02. மிகவும் மோசமான பேட்டரி லைஃப்:

02. மிகவும் மோசமான பேட்டரி லைஃப்:

ஒரு மால்வேர், தன் தீங்கிழைக்கும் வேலைகளை கட்டவிழ்த்து விட உங்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்துகிறது என்றால், அது ஓவர் ஹீட்டிங் ஆகிறது என்றால், அதற்காக அந்த மால்வேர் உங்கள் மொபைல் போனில் உள்ள பேட்டரியை தான் பயன்படுத்தும் என்பதும் இங்கே வெளிப்படை!

எனவே, உங்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனின் பேட்டரி லைஃப் திடீரென குறைவதை நீங்கள் கண்டால், மேற்கூறிய அதே வழிமுறைகளை மீண்டும் செய்யவும்; அதாவது லேட்டஸ்ட் ஆக இன்ஸ்டால் செய்த ஆப்களை டெலிட் செய்யவும் அல்லது மொபைலை ரீசெட் செய்யவும்.

03. ஸ்லோ-வான பெர்ஃபார்மென்ஸ்:

03. ஸ்லோ-வான பெர்ஃபார்மென்ஸ்:


மொபைல் போனின் "பின்னணியில் இயங்கும்" ஒரு மால்வேர், மொபைல் பேட்டரியை வேகமாக உறிஞ்சுகிறது என்றால், அது மொபைலின் ப்ராசஸிங் ஸ்பீட்-ஐயும் சேர்த்தே "உறிஞ்சுகிறது" என்று அர்த்தம்.

இதன் விளைவாக உங்கள் மொபைல் போனின் செயல்திறன் குறையலாம் அல்லது கடுமையாக பாதிக்கப்படலாம்.

ஆப்களை திறப்பதில் அல்லது கேம்களை இயக்குவதில் உங்கள் போன் மந்தமாக செயல்படுவதை கண்டால், உங்கள் ஸ்மார்ட்போனில் ஏதோ கோளாறு இருக்கிறது என்று அர்த்தம்.

WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!WhatsApp-இல் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி மாட்டிக்காதீங்க; இனிமேல் இப்படி பண்ணுங்க!

04. புயல் வேகத்தில் தீரும் மொபைல் டேட்டா:

04. புயல் வேகத்தில் தீரும் மொபைல் டேட்டா:

சில மால்வேர்கள், நல்ல இன்டர்நெட் கனெக்ஷனை நம்பியே களமிறக்கப்படுகின்றன. அதாவது, இது பெரும்பாலும் உங்கள் மொபைல் டேட்டாவை திருடி அதை ஹேக்கர்களுடன் பகிர்ந்து கொள்ளும். இது உங்கள் டெய்லி டேட்டா முன்கூட்டியே தீர்ந்துபோவதற்கு வழிவகுக்கும்.

எனவே, உங்கள் டேட்டா ஒதுக்கீடு விரைவாக தீர்ந்து போவதை நீங்கள் கவனித்தால், உங்கள் போன் மால்வேர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம்.

05. ப்ரவுஸர்-ஐ திறந்தாலே எக்கச்சக்கமான பாப்-அப் மெசேஜ்கள்:

05. ப்ரவுஸர்-ஐ திறந்தாலே எக்கச்சக்கமான பாப்-அப் மெசேஜ்கள்:

இந்த சிக்கல், பெரும்பலும் ஆண்ட்ராய்டு போன்களில் காணப்படுகிறது. உங்கள் மொபைலின் இன்டர்நெட் ப்ரவுஸரில் திடீரென நிறைய டெக்ஸ்ட் பாப்-அப்கள் தோன்றினால், உங்கள் மொபைலில் மால்வேர் பாதிப்பு இருக்கலாம் என்று அர்த்தம்.

Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட Google Pay, Paytm-இல் தெரியாமல் கூட "இதை" செஞ்சிடாதீங்க.. SBI எச்சரிக்கை!

இதில் இருந்து தப்பிப்பது எப்படி?

இதில் இருந்து தப்பிப்பது எப்படி?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், உங்கள் ஸ்மார்ட்போனில் ஆன்டி-மால்வேர் தொகுப்பை (anti-malware suite) இன்ஸ்டால் செய்யலாம் அல்லது மொபைல் போனை 'பேக்டரி ரீசெட்' செய்யலாம்.

மேலும் இதுபோன்ற டெக் டிப்ஸ்களுக்கு கிஸ்பாட் தமிழ் வலைத்தளத்தை ஃபாலோ செய்யவும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
5 Signs that Prove your Mobile Phone Affected by Malware or Virus How to be Safe

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X