Samsung போன்களுக்கு கிடைக்க தொடங்கிய 5 புதிய அம்சங்கள்! உங்க Phone-க்கும் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

|

சாம்சங் (Samsung) நிறுவனம், இந்தியாவில் உள்ள தனது சில ஸ்மார்ட்போன்களுக்கு, லேட்டஸ்ட் அப்டேட் வழியாக புத்தம் புதிய அம்சங்களை சேர்க்க தொடங்கி உள்ளது.

அதென்ன அப்டேட்? அதன் கீழ் என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்? அவைகள் எந்தெந்த சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும்? இதோ விவரங்கள்:

என்ன அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு?

என்ன அப்டேட்.. எந்தெந்த போன்களுக்கு?

சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ சீரீஸ், கேலக்ஸி எம் சீரீஸ் (Galaxy M Series) மற்றும் கேலக்ஸி எஃப் சீரிஸ் (Galaxy F Series) ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட்டை (One UI 5.0 Update), வெளியிட தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட சில கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு One UI 5.0 அப்டேட்டை ஏற்கனவே வெளியிட்டுள்ளதாகவும் சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?வச்சிட்டாங்க ஆப்பு! Jio, Airtel திட்டங்களின் மீது விலை உயர்வு! இனி ரீசார்ஜ் செய்ய எவ்வளவு அதிகம் செலவு ஆகும்?

எந்தெந்த எம் சீரீஸ் போன்களுக்கு அப்டேட் கிடைக்கிறது?

எந்தெந்த எம் சீரீஸ் போன்களுக்கு அப்டேட் கிடைக்கிறது?

சாம்சங் நிறுவனத்தின் கூற்றுப்படி, கேலக்ஸி எம்53 (Galaxy M53), கேலக்ஸி எம்52 5ஜி (Galaxy M52 5G), கேலக்ஸி எம்33 (Galaxy M33), கேலக்ஸி எம்32 5ஜி (Galaxy M32 5G), கேலக்ஸி எம்32 (Galaxy M32) மற்றும் கேலக்ஸி எம்13 5ஜி (Galaxy M13 5G) ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இது தவிர்த்து மற்ற கேலக்ஸி எம் மற்றும் கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் கூட விரைவில் ஆண்ட்ராய்டு 13 அப்டேட் வெளியிடப்படும் என்பதையும் சாம்சங் உறுதிப்படுத்தி உள்ளது.

கேலக்ஸி ஏ சீரீஸின் கீழ் எந்தெந்த மாடல்கள் உள்ளன?

கேலக்ஸி ஏ சீரீஸின் கீழ் எந்தெந்த மாடல்கள் உள்ளன?

சாம்சங் கேலக்ஸி ஏ33 (Galaxy A33) மற்றும் கேலக்ஸி ஏ73 (Galaxy A73) ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 13 அப்டேட்டை வெளியிட்ட பிறகே எம் சீரிஸ் மற்றும் எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கான அப்டேட் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆக உங்களிடம் (மேற்குறிப்பிட்ட) கேலக்ஸி ஏ சீரீஸ், கேலக்ஸி எம் சீரிஸ் அல்லது கேலக்ஸி எஃப் சீரிஸ் ஸ்மார்ட்போன் இருந்தால், உங்கள் போனிற்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 5.0 அப்டேட் அணுக கிடைக்கும். அது கிடைத்ததும் நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - அதை இன்ஸ்டால் செய்ய வேண்டும்!

இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!இது பிளான் இல்ல.. லைஃப் டைம் செட்டில்மென்ட்! சிங்கிள் BSNL ரீசார்ஜ்ஜில் 790GB டேட்டா, 400 டேஸ் வேலிடிட்டி!

உங்கள் போனில் Android 13 அடிப்படையிலான One UI 5.0-ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி?

உங்கள் போனில் Android 13 அடிப்படையிலான One UI 5.0-ஐ இன்ஸ்டால் செய்வது எப்படி?

- உங்கள் சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-க்கு (Settings) செல்லவும்

- அங்கே சாஃப்ட்வேர் அப்டேட் (Software Update) என்கிற ஆப்ஷனை தேடி கண்டுபிடித்து, அதை கிளிக் செய்யவும்.

- பின்னர் உங்கள் போனிற்கு, ஏதேனும் புதிய சாஃப்ட்வேர் அப்டேட் வந்துள்ளதா என்று ஸ்கேன் செய்யப்படும். ஒருவேளை புதிய அப்டேட் வந்து இருந்தால், உங்களுக்கு காண்பிக்கப்படும்.

- அதை ட்வுன்லோட் செய்யவும். பின்னர் ஸ்க்ரீனில் தோன்றும் வழிமுறைகளை பின்பற்றி அதை இன்ஸ்டால் செய்து முடிக்கவும்.

- இந்த செயல்முறையை செய்து முடிக்க, உங்கள் ஸ்மார்ட்போனை ரீஸ்டார்ட் (Restart) செய்யும்படி கேட்கப்படலாம். அதை தயங்காமல் செய்யவும்; அவ்வளவு தான் வேலை முடிந்தது!

One UI 5.0 அப்டேட்டின் கீழ் என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்?

One UI 5.0 அப்டேட்டின் கீழ் என்னென்ன புதிய அம்சங்கள் கிடைக்கும்?

- இந்த அப்டேட்டின் கீழ் லாக் ஸ்க்ரீன் கஸ்டமைசேஷன் (Lock screen customisation) என்கிற அம்சம் கிடைக்கும். இதை கொண்டு வால்பேப்பர், கிளாக் ஸ்டைல் மற்றும் நோட்டிஃபிகேஷனை கஸ்டமைஸ் செய்யலாம். இதை செய்ய லாக் ஸ்க்ரீனை லாங் பிரஸ் செய்தால் போதும்.

- இந்த அப்டேட்டின் கீழ் ஒவ்வொரு தொடர்புக்கும் (Contact) வெவ்வேறு கால் பேக்கிரவுண்டை (Call Background) செட் செய்யலாம். இதன் மூலம் யார் அழைக்கிறார்கள் என்பதை எளிதாக கண்டறிய முடியும்.

பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த பார்த்ததுமே குலை நடுங்கிப்போன விஞ்ஞானிகள்.. வீனஸ் கிரகத்திற்கு பின்னால் ஒளிந்திருந்த "எமன்".. என்னது அது?

ஸ்பிளிட் ஸ்கிரீன் வியூ, போட்டோ வாட்டர்மார்க் மற்றும் ஸ்டிக்கர்ஸ்!

ஸ்பிளிட் ஸ்கிரீன் வியூ, போட்டோ வாட்டர்மார்க் மற்றும் ஸ்டிக்கர்ஸ்!

- இந்த அப்பேட்டின் கீழ், ஸ்பிளிட் ஸ்கிரீன் வியூ (Split screen view) எனப்படும் அம்சமும் அணுக கிடைக்கும். ஒரு எளிமையான ஸ்வைப் கெஸ்சர் (Swipe Gesture) மூலம் மல்டி விண்டோக்களை (Multi window) உருவாக்க முடியும்.

- சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஒன் UI 5.0 அப்டேட் ஆனது ஒவ்வொரு புகைப்படத்தின் மூலையிலும் தேதி, நேரம் போன்ற கஸ்டமைஸ் தகவலைக் கொண்ட வாட்டர்மார்க் (WaterMark) ஒன்றை சேர்க்கும் திறனையும் உங்களுக்கு வழங்கும்.

- கடைசியாக, இந்த அப்டேட் ஆனது உங்கள் கேலரியில் (Gallery) உள்ள புகைப்படங்களிலிருந்து புதிய ஸ்டிக்கர்களை உருவாக்கவும் உதவும்.

Best Mobiles in India

English summary
5 New Features Coming To Your Samsung Phone Via One UI 5.0 Update. Check Eligible Phones List in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X