இந்த 5 Job Search உத்திகளை தெரிந்து கொண்டால், பாதி வேலை கிடைத்ததற்கு சமம்.!

உங்களுடன் படித்த பெரும்பாலானோர்கள் - அப்பா பணத்தில் / கம்பெனியில், அல்லது மாமா சிபாரிசில் அல்லது அக்கா பிஸ்னஸ் அல்லது மாமனார் கொடுத்த வரதட்சணை பணத்தில் தான் வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

|

ட்விட்டர், பேஸ்புக்கில் கவிதை படிப்பவர்களை விட கவிதை எழுதுபவர்கள் தான் அதிகம். என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்திருக்குமென்று நம்புகிறேன். தோழமைகளே, நாம் ஏற்றுக்கொண்டாலும் சரி, மறுத்தாலும் சரி - இங்கு அனைவருக்கும் வேலை இல்லை; கிடையாது; கிடைக்காது என்பது தான் கசப்பான உண்மை.!

5 Job Search உத்திகள்: பாதி வேலை கிடைத்ததற்கு சமம்.!

உங்களுடன் படித்த பெரும்பாலானோர்கள் - அப்பா பணத்தில் / கம்பெனியில், அல்லது மாமா சிபாரிசில் அல்லது அக்கா பிஸ்னஸ் அல்லது மாமனார் கொடுத்த வரதட்சணை பணத்தில் தான் வண்டி ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

செத்த மீன்கள்.!

செத்த மீன்கள்.!

மீதமுள்ளவர்கள் எப்போது வேலை பறிபோகுமென்ற பீதியிலேயே வேலை பார்த்துக் கொண்டிருக்க மறுகையில் உள்ள இன்னும் சிலர் "செத்த மீன்"களை போல (எம்பிஏ முடித்துவிட்டு கவர்மெண்ட் வேலை அல்லது என்ஜினீயரிங் முடித்துவிட்டு மெடிக்கலில் வேலை), ஏதோவொரு ஓடையில், ஏதோவொரு கடலை நோக்கி பயணித்துக்கொண்டே இருக்கின்றனர். இதுதான் நான், இதற்காகத்தான் நான் என்று கர்வமாக கூறிக்கொள்ளும் வேலையில் நம்மில் எத்தனை பேர் இருக்கின்றோம்.

பத்தோடு பதினொன்றாய் இதையும் ட்ரை பண்ணுங்க.!

பத்தோடு பதினொன்றாய் இதையும் ட்ரை பண்ணுங்க.!

என்னது பிடித்த வேலையா.? அதெல்லாம் ஒரு தூரதேசத்து கனவு. எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன், ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை - என்று பெருமூச்சு விடுபவரா நீங்கள்.? அப்போது பத்தோடு பதினொன்றாய் இந்த ஐந்து வேலை தேடல் உத்திகளையும் ஒருமுறை முயற்சி செய்துதான் பாருங்களேன்.

வேலை தேடல் உத்தி #01

வேலை தேடல் உத்தி #01

ஒரு வெள்ளைத்தாளை எடுங்கள் அதில் உங்களுக்கு என்னென்ன திறன்கள் உள்ளன என்றே கேள்வியை உங்களிடமே கேட்டுக்கொண்டு அதைப்பற்றி தடையின்றி குறைந்தபட்சம் 5 நிமிடங்களாவது பதில் எழுதுங்கள். இது உங்களிடம் ஏற்கனவே இருக்கும் திறன்களை கண்டறிய மற்றும் அதை பயன்படுத்த உதவும்.

பாதி வேலை கிடைத்ததற்கு சமம்.!

பாதி வேலை கிடைத்ததற்கு சமம்.!

புரிந்திருக்குமென்று நம்புகிறேன். ஆம் தோழமைகளே ஏற்கனவே நீங்கள் எதில் சிறப்பாக செயல்படுவீர்களோ, அது சார்ந்த வேலைகளை தேடுவது பாதி வேலை கிடைத்ததற்கு சமம். இதில் அதிக சம்பளம் கிடைக்கும், இதில் கிடைக்காது என்று உங்களை நீங்களே தணிக்கை செய்யாதீர்கள். எல்லா துறையிலும் எல்லாருமே போதுமான பணத்தை ஈட்டுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேலை தேடல் உத்தி #02

வேலை தேடல் உத்தி #02

உங்களுக்கு பிடித்த மூன்று பேரை மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். பின்னர் அவர்களிடம் இருக்கும் வியப்பான திறமைகளை பட்டியலிடுங்கள். அதில் எந்தெந்த திறமைகள் உங்களிடம் உள்ளது மற்றும் இல்லை என்பதை பிரித்தெடுங்கள். இல்லாததை கற்றுக்கொள்ளுங்கள். ஒரு வேலை நன்றாக வரும் அல்லது தெரியும் என்பதால் குண்டு சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டக்கூடாது. உங்களுக்கு இல்லாத திறமைகளையும் அறிந்து, அதையும் வளர்த்தெடுக்க வேண்டும்.

How to check PF Balance in online (TAMIL)
வேலை தேடல் உத்தி #03

வேலை தேடல் உத்தி #03

உங்களுக்கான மதிப்புகளுடன் ஒற்றுப்போகும் நிறுவனத்தை அடையாளம் காணவும். அதாவது உங்களுக்கான நன்மைகள் (சம்பளம் மற்றும் உடல்நலம் உட்பட), உங்களின் கலாச்சாரம் (தனிப்பட்ட பொறுப்புகள் உட்பட), அலுவகத்தின் இடம் (தனிப்பட்ட கட்டிடம், கூட்டு கட்டிடம் மற்றும் தூரம் உட்பட) மற்றும் நீங்கள் வேலை செய்யும் பாணி (எட்டு மணிநேர வேலை அல்லது 24/7 வேலை) ஆகிய அனைத்துடனும் உங்களிடம் வேலை ஒற்றுப்போக வேண்டும்.

அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்.!?

அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்.!?

ஓரளவு தான் (அட்ஜெஸ்ட்மெண்ட்ஸ்) சீரமைவுகள் இருக்க வேண்டும். இந்த உத்தியானது நீண்ட கால நன்மைகளை வழங்குவதை உறுதி செய்யும். வேலை கிடைத்தால் போதுமென்ற முடிவுகளை எடுக்கும் நபர்களுக்கு எந்தவிதமான உத்திகளும் கிடையாது, வேலையும் செய்யாது.

வேலை தேடல் உத்தி #04

வேலை தேடல் உத்தி #04

உங்களின் மூலோபாய வலைப்பின்னலை ( strategic network) உருவாக்கவும். இதன் அர்த்தம் ரோட்டில் போற வர்றவன் கிட்டலாம் வேலை கிடைக்குமா.? என்று கேட்க வேண்டும் என்பதில்லை. மூலோபாய நெட்வொர்க் என்பது உங்களை விட்டு ஒருபடி விலகி சென்ற உங்களின் உண்மையான நண்பர்களிடம் அமைக்கப்படவேண்டும்.

இருக்கவே இருக்கு பேஸ்புக் மற்றும் லின்க்டுஇன்.!

இருக்கவே இருக்கு பேஸ்புக் மற்றும் லின்க்டுஇன்.!

அவர்களுள் உங்களுக்கு பிடித்த தொழில்துறையில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதை கண்டறியுங்கள். சில ஆராய்ச்சிகளை (இருக்கவே இருக்கு பேஸ்புக் மற்றும் லின்க்டுஇன்) செய்யுங்கள். மீண்டும் அவர்களை இணைப்பில் கொண்டு வாருங்கள், முடிந்தால் சந்தியுங்கள் மற்றும் உங்களின் திறமைகளை பகிருங்கள். இதற்கெல்லாம் முன்பு ஒருவர் உங்களின் நேரத்தை வீணடித்தால் உங்களுக்கு எவ்வளவு எரிச்சலாகும் என்பதை ஒருமுறை மனதிற்கொள்ளுங்கள்.

வேலை தேடல் உத்தி #05

வேலை தேடல் உத்தி #05

உங்களுக்கான "குறைந்த பட்ச" சம்பளம் என்ன என்பதை அறியுங்கள். இதை நிகழ்த்தவொரு கால்குலேட்டர் போதும். உங்களின் அடிப்படை செலவுகள் மற்றும் தேவைகளுக்கான செலவை கணக்கு போட்டு பார்த்தால் ஒரு தொகை வரும் அத்துடன் சிறிதளவு கூடுதல் தொகையை (நேர்மையாக செயல்படவும், இதுவொரு உத்தியாகும், தந்திரம் அல்ல) இணைத்து பாருங்கள் - அதுதான் உங்களுக்கான சரியான சம்பளம். பணம் என்பது ஒரு தேவை மட்டுமல்ல, வேலை செய்யத்தூண்டுமொரு எரிபொருளும் ஆகும்.

நிதி தேவைகளை விட்டுக்கொடுக்க கூடாது.!

நிதி தேவைகளை விட்டுக்கொடுக்க கூடாது.!

ஆக ஒரு நேர்காணலில் சம்பளம் சார்ந்த கேள்விகள் எழும்போது உங்களின் நிதி தேவைகளை விட்டுக்கொடுக்க கூடாது என்பதை நினைவில் கொள்ளவும். மேலும் பல வகையான ஸ்மார்ட் டிப்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்தின் டெக் டிப்ஸ் பிரிவுடன் இணைந்திருக்கவும்.

Best Mobiles in India

English summary
5 Job Search Strategies You Probably Haven't Tried Yet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X