Home
How to

உடனே உங்க போன்ல இருக்குற Downloads-ல இதை செக் பண்ணுங்க.. 1 இருந்தாலும் சிக்கல் தான்.. பீதி கிளப்பும் PDF கள்!

உங்கள் ஸ்மார்ட்போன் வழியாக நீங்கள் பதிவிறக்கம் (Download) செய்யும் எல்லாம் வகையான கோப்புகளுமே (Files) டவுன்லோட்ஸ் ஃபோல்டரில் (Downloads Folder) சேமிக்கப்படும் அல்லவா? அந்த ஃபோல்டருக்கு சென்று, நிறைய எண்ணிக்கையிலான பிடிஎஃப் (PDF) ஃபைல்களை டவுன்லோட் செய்து உள்ளீர்களா என்று சரிபார்க்கவும்.

ஒருவேளை நீங்கள் எக்கச்சக்கமான பிடிஎஃப் ஃபைல்களை டவுன்லோட் செய்து வைத்து இருந்தால்.. இந்த எச்சரிக்கை உங்களுக்கானது தான். அதென்ன எச்சரிக்கை? அடுத்தமுறை ஒரு பிடிஎஃப் ஃபைல்-ஐ டவுன்லோட் செய்யும் போது நீங்கள் ஏன் உஷாராக இருக்க வேண்டும்? அப்படி இல்லையென்றால் என்னவாகும்? இதோ விவரங்கள்:

உங்க போன்ல இருக்குற Downloads-ல இதை செக் பண்ணுங்க; பீதி கிளப்பும் PDF!

நமது டிஜிட்டல் வாழ்வில் பிடிஎஃப் ஃபைல்கள் மிகவும் முக்கியமான விஷயங்களாக மாறிவிட்டன. ஆதார் அட்டைகள் (Aadhaar Cards), பான் அட்டைகள் (PAN Cards) தொடங்கி டிஜிட்டல் ரசீதுகள் (Digital Bills) வரை பல்வேறு வகையான தகவல்களை மற்றவர்களுடன் பகிர்வதற்கும், பாதுகாப்பாக சேமிப்பதற்கும் பிடிஎஃப் ஃபைல்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இருப்பினும், சைபர் மற்றும் ஆன்லைன் குற்றங்களுடன் (Cyber and Online Crimes) தொடர்புடைய அபாயங்களின் காரணமாக, எந்தவொரு பிடிஎஃப் ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்யும் போதும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றன. ஒரு தவறான பிடிஎஃப் ஃபைல்-ஐ பதிவிறக்கம் செய்தாலும் கூட சிக்கல் தான்!

இதுபோன்ற பிடிஎஃப் ஃபைல் தொடர்பான பாதுகாப்பு சிக்கல்களில் இருந்து தூரமாக இருப்பது எப்படி? மிகவும் எளிமையான 5 விஷயங்களை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் கோப்புகளால் உங்களுக்கும், உங்களுடைய ஆவணங்களுக்கும், அதை டவுன்லோட் செய்யும் உங்களுடைய ஸ்மார்ட்போனிற்கும் எந்த சிக்கலும், ஆபத்தும் வராது என்பதை உறுதிசெய்ய முடியும்.

முதலில்.. நீங்கள் டவுன்லோட் செய்யும் பிடிஎஃப் ஃபைல்களில், உங்களுடைய கம்ப்யூட்டர் அல்லது மொபைலுக்கு தீங்கு விளைவிக்கும் வைரஸ்கள் அல்லது மால்வேர்ருள் இருக்கலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். எனவே, நீங்கள் பதிவிறக்கம் செய்த பிடிஎஃப்-ஐ திறக்கும் முன், ஒரு நல்ல ஆன்ட்டி-வைரஸ் மென்பொருள் மூலம் அதை ஸ்கேன் செய்வது மிகவும் முக்கியம்.

இரண்டாவது.. நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் ஃபைல்கள் ஆனது மிகவும் நம்பகமான ஆதாரங்களில் இருந்து பெறப்படுகிறது என்பதை உறுதி செய்துகொள்ளவும். இணையத்தில் உள்ள எல்லா பிடிஎஃப் ஃபைல்களுமே பாதுகாப்பான கோப்புகள் என்று கண்மூடித்தனமாக நம்புவதை நிறுத்தவும். சந்தேகத்திற்கிடமான அல்லது அறிமுகமில்லாத இணையதளங்களில் உள்ள பிடிஎஃப் ஃபைல்களை ஓருபோதும் டவுன்லோட் செய்யாதீர்கள்.

மூன்றாவது.. நீங்கள் எதை கிளிக் செய்ய போகிறீர்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் பதிவிறக்கம் செய்யும் பிடிஎஃப் ஃபைல்களில் ஏதேனும் இணைப்புகள் (Links) இருந்தால், அவை பாதுகாப்பானவை தான் என்பதை உறுதிசெய்யும் வரை அவற்றைக் கிளிக் செய்ய வேண்டாம்.

நான்காவது.. சந்தேகத்திற்கிடமான இணைப்புகள் அல்லது அடிக்கடி பாப்-அப் விளம்பரங்களை காட்சிப்படுத்தும் இணையதளங்களில் இருந்து எந்தவிதமான பிடிஎஃப் ஃபைல்களையும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம். அவைகள் வைரஸ் அல்லது மால்வேர்களை கொண்டிருக்கலாம். அங்கே கிடைக்கும் பிடிஎஃப் ஃபைல்களை பதிவிறக்கம் செய்வது - சொந்த காசில் சூனியம் வைப்பதற்கு சமம்.

கடைசியாக.. தனிப்பட்ட தகவலைக் கேட்கும் அல்லது சில செயல்களுக்காக வெளிப்புற இணையதளங்களுக்கு உங்களை வழிநடத்தும் பிடிஎஃப் ஃபைல்களில் கவனமாக கவனமாக இருக்கவும். இவைகள் ஃபிஷிங் (Phishing) முயற்சிகளாக இருக்கலாம்; அதாவது ஹேக்கர்கள் உங்களை பற்றிய முக்கியமான தரவுகளை திருடும் / சேகரிக்கும் முயற்சியாக இருக்கலாம்.

Best Mobiles in India

English summary
5 Important Things to Keep in Mind Before Downloading Any PDF File on Your Mobile Phone
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X