Home
How to

விண்டோஸ் 10 ஏப்ரல் அப்டேட் ரகசிய அம்சங்கள்.!

ஏப்ரல் 2018 அப்டேட் கார்டனாவின் நோட்புக் பக்கத்திற்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது. அதன் படி புதிய தோற்றத்தில் கார்டனா லிஸ்ட் மற்றும் ரிமைன்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது.

By Meganathan S

விண்டோஸ் 10 இயங்குதளத்துக்கான ஏப்ரல் 2018 அப்டேட் வெளியிடப்பட்டு விட்டது. டைம்லைன் மற்றும் நியர்பை ஷேரிங் போன்ற அம்சங்கள் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இத்துடன் செட்டிங்ஸ் ஆப் முன்பை விட பெரியதாகவும் சிறப்பாகவும் மாற்றப்பட்டு இருக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு பயனுள்ள அம்சங்களும் புதிய அப்டேட் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் விண்டோஸ் 10 ஏப்ரல் 2018 வழங்கும் புதிய வசதிகளில் பயன்தரும் அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

ரிமைன்டர் லிஸ்ட் செய்யும் கார்டனா

ரிமைன்டர் லிஸ்ட் செய்யும் கார்டனா

ஏப்ரல் 2018 அப்டேட் கார்டனாவின் நோட்புக் பக்கத்திற்கு புதிய தோற்றத்தை வழங்குகிறது. அதன் படி புதிய தோற்றத்தில் கார்டனா லிஸ்ட் மற்றும் ரிமைன்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறது. கார்டனாவின் புதிய நோட்புக் பக்கத்தில் ஆர்கனைசர் டேப் (Organizer Tab) உங்களது லிஸ்ட்கள் மற்றும் ரிமைன்டர்களை பக்கத்தின் நடுவே தெளிவாக காட்சியளிக்கும் வகையில் டிஸ்ப்ளே செய்கிறது. மற்ற நோட்புக் டூல்கள் மேனேஜ் ஸ்கில்ஸ் டேபில் வழங்கப்பட்டுள்ளது. இது செயலிகள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் சாதனங்களை இணைக்க வழி செய்கிறது.

ஆர்கனைசர் டேபில் உங்களது பெயருக்கு அடுத்த இடத்தில் பென்சில் டேப் சேர்க்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி உங்களுக்கு விருப்பமான பகுதிகளை குறிப்பிடலாம், இதனால் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பயணிக்கும் போது போக்குவரத்து நெரிசல் சார்ந்த விவரங்களை தெரிந்து கொள்ள முடியும். முன்னதாக இதே அம்சம் கார்டனா நோட்புக் அபவுட் மீ பக்கத்தில் வழங்கப்பட்டு இருந்தது.

பிளர்ரி செயலிகளை சரி செய்யலாம்

பிளர்ரி செயலிகளை சரி செய்யலாம்

விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கும் ஸ்கேலிங் அம்சம் அதிக ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேக்களில் எழுத்துக்களின் அளவை அதிகரிக்கும். இதனால் திரையில் உள்ள எழுத்துக்களை மிகவும் தெளிவாகவும், கூர்மையாகவும் வாசிக்க முடியும். எனினும் சில சமயங்களில் ஸ்கேலிங் அம்சம் வார்த்தைகளை பிலர் (தெளிவற்ற) ஆக்கிவிடும்.

புதிய அப்டேட்டில் இந்த பிரச்சனை எதிர்கொள்ள ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு செட்டிங்ஸ் -- சிஸ்டம் -- டிஸ்ப்ளே -- அட்வான்ஸ்டு ஸ்கேலிங் செட்டிங்ஸ் -- லெட் விண்டோஸ் டிரை டூ ஃபிக்ஸ் ஆப்ஸ் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

 சீரற்ற செயலிகளை அழிக்கலாம்

சீரற்ற செயலிகளை அழிக்கலாம்

விண்டோஸ் தளத்தில் செயலிகள் வேலை செய்யாமல் போனால், உடனே டாஸ்க் மேனேஜர் சென்று குறிப்பிட்ட செயலியை தேர்வு செய்து என்ட் டாஸ்க் ஆப்ஷனை க்ளிக் செய்வோம். இந்த அம்சம் தற்சமயம் வேலை செய்யும் என்றாலும், இந்த பணியை மேற்கொள்ள கூடுதல் வசதி செட்டிங்ஸ் செயலியில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த ஆப்ஷன் பயன்படுத்தி வேலை செய்யாத செயலிகளை க்விட் செய்ய முடியும். இதற்கு செட்டிங்ஸ் -- ஆப்ஸ் -- ஆப்ஸ் மற்றும் ஃபீச்சர்ஸ் ஆப்ஷன் சென்று கோளாறு செய்யும் செயலிகளை தேர்வு செய்து டெர்மினேட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

சிறப்பான கேம் பார்

சிறப்பான கேம் பார்

விண்டோஸ் 10 கேம் பார் தற்சமயம் புதிய வசதிகளை கூடுதலாக வழங்குகிறது. இதனால் இடதுபுறத்தில் கடிகாரத்தை வைத்து நேரம் பார்க்கவும், சில பட்டன்கள் கம்ப்யூட்டர் கேமராவை சிறப்பாக இயக்கவும், மைக்ரோஃபோன் ஆப்ஷனை ஆன் மற்றும் ஆஃப் செய்யவும் பயன்படுத்தலாம்.

ஆத்தென்டிகேட்டர் ஆப்

ஆத்தென்டிகேட்டர் ஆப்

விண்டோஸ் 10 எஸ் இயங்குதளம் பயன்படுத்துவோர் இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். இந்த அம்சம் கொ்டு கம்ப்யூட்டரை பாஸ்வேர்டு அல்லது பின் இன்றி செட்டப் செய்ய முடியும். ஏப்ரல் 2018 அப்டேட் மற்றும் விண்டோஸ் 10 எஸ் இயங்குதளம் ஆத்தென்டிகேட்டர் செயலியை கொண்டு கம்ப்யூட்டரை செட்டப் செய்ய முடியும். இதனால் விண்டோஸ் ஹெல்லோ வெப்கேமரா மற்றும் முகத்தை வைத்து லாக் இன் செய்யும்.

Best Mobiles in India

English summary
5 hidden features of Windows 10 April 2018 Update ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X