Subscribe to Gizbot

ரொம்ப சாதாரணமா நினைச்சா சீரியஸான சிக்கல் ஆகிடும், பாத்துக்கோங்க..!

Written By:

இந்த நாட்களில் எல்லா இடங்களிலும் கூகிள் உள்ளன. தேடல்களுக்கு கூகுள் சர்ச், மின்னஞ்சல்களுக்கு ஜிமெயில், விடியோக்கள் காண கூகுள் தொடர்புடைய யூட்யூப், என்பதோடு நில்லாது கூகுள் க்ரோம், டாக்குமெண்ட்ஸ், ஷீட்ஸ், கேலண்டர், காண்டாக்ட், மேப்ஸ் மற்றும் ஆண்ட்ராய்டும் கூட.!

இது மட்டுமல்ல, கூகுள் அக்கவுண்ட்டின் சான்றுகளை பயன்படுத்தி தான் நாம் பல்வேறு வலைத்தளங்களை அணுகுகிறோம். இணைய இணைப்பில் உள்ள ஒவ்வொருவரின் வாழ்விலும் கூகுள் ஒரு உள்ளார்ந்த பகுதியாக உருவாகிவிட்டது.

அப்படியாக நீங்கள் கூகுளில் சேமிக்கும் உங்கள் தகவல்கள், உடன் உங்கள் கூகுள் அக்கவுண்ட் என்ன எதற்குமே எந்த விதமான பாதிப்பும் ஏற்படக்கூடாது என்றால் நீங்கள் ஒரு ஸ்மார்ட் விடயத்தை நிச்சயமாக செய்தாக வேண்டும். ஆக, உங்கள் கூகுள் அக்கவுண்ட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் சில குறிப்புகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

நீங்கள் இந்த குறிப்புகளை உங்கள் கூகுள் அக்கவுண்ட்களில் பின்பற்றினால் உங்கள் கூகுள் அக்கவுண்ட் உள்ளடக்கியுள்ள உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதை நீங்களே உறுதி செய்து கொள்ளலாம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
கூகுள் செக்யூரிட்டி செக்அப்

கூகுள் செக்யூரிட்டி செக்அப்

நீங்கள் அழகாக மற்றும் விரைவாக உங்கள் கூகுள் கணக்கின் பாதுகாப்பு அமைப்புகளை சரிபார்க்க அனுமதிக்கும் ஒரு உள்ளடிக்கிய அம்சத்தினை கூகுள் கொண்டுள்ளது. நீங்கள் வெறுமனே 'மை அக்கவுண்ட்' சென்று 'சைன்-இன் அண்ட் செக்யூரிட்டி' பட்டியலின் கீழ் உள்ள செக்யூரிட்டி செக்அப்-பை அணுகவும். நீங்கள் இந்த விருப்பத்தை ஒருமுறை கிளிக் செய்யவும் மீட்பு மற்றும் பாதுகாப்பு விவரங்களை ஆய்வு செய்ய கேட்கப்படும் ஒரு புதிய விண்டோ திறக்கப்படும்.

1. செட்டிங் ஏ ரிக்வரி அண்ட் போன் இமெயில்

1. செட்டிங் ஏ ரிக்வரி அண்ட் போன் இமெயில்

உங்கள் ரீக்கவரி மெயில் மற்றும் பேக்-அப் தொலைபேசி அமைப்புகளை சரிபார்க்கவும். நம்பகம் இல்லாத சாதனத்தில் இருந்து உங்கள் முதன்மை அக்கவுண்ட் திறக்கப்பட்டால் ஒரு எச்சரிக்கை மின்னஞ்சல் ரீக்கவரி அக்கவுண்ட்க்கு அலெர்ட் மின்னஞ்சல் அனுப்பிவைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

2. செக் தி டிவைசஸ் கனெக்டட் டு யூவர் அக்கவுண்ட்

2. செக் தி டிவைசஸ் கனெக்டட் டு யூவர் அக்கவுண்ட்

அடுத்த படி நீங்கள் உங்கள் கணக்கை அணுக பயன்படுத்தப்படும் சாதனங்கள் எவை என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அதில் நம்பகமான சாதனங்கள் காட்டப்பட்டால் 'லூக்ஸ் குட்' கிளிக் செய்யவும் இல்லையேல் மேலும் பல விவரங்களுக்கு 'சம்திங் லூக்ஸ் ராங்' என்பதை கிளிக் செய்யவும்.

3. ரீவியூ தி ஆப்ஸ் அண்ட் வெப்சைட்ஸ்

3. ரீவியூ தி ஆப்ஸ் அண்ட் வெப்சைட்ஸ்

முதலில் வெகுநாட்களாக நீங்கள் பயன்படுத்தாத ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் செய்து நீக்கிவிட பரிந்துரைக்கப்படுகிறது. பயன்படுத்தப்படாத குறிப்பிட்ட ஆப்ஸ்களில் அங்கீகார தேதி மற்றும் கூகுள் அக்கவுண்ட் விவரங்கள் இருப்பின் அதை 'ரீமூவ்' செய்து விடவும்.

4. ரீவியூ யூவர் 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செட்டிங்ஸ்

4. ரீவியூ யூவர் 2-ஸ்டெப் வெரிஃபிகேஷன் செட்டிங்ஸ்

நீங்கள் உங்களின் பேக்-அப் போன் நம்பர்களை முழுமையாக சோதித்த கையேடு பேக்அப் கோட்ஸ்-களையும் உருவாக்க வேண்டும் அல்லது நீங்கள் கூகுள் ஆத்தென்டிகேட்டர் என்ற ஆண்ட்ராய்டு ஆப் தனை (Google Authenticator app) பதிவிறக்கம் செய்யலாம். இந்த இரண்டு செயல்பாடுகளும் நீங்கள் நம்பகமில்லாத சாதனத்தில் இருந்து கூகுள் அக்கவுண்ட் அணுகல் நிகழ்த்த நேரும் போது உதவும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

5. லாஸ்ட் டைம் பாஸ்வேர்ட் சேன்ஞ்டு

5. லாஸ்ட் டைம் பாஸ்வேர்ட் சேன்ஞ்டு

இறுதியாக நீங்கள் உங்களுக்கான பாதுகாப்பு அமைப்புகளை முடித்துவிட்ட பிறகு, 'சைன்இன் & செக்யூரிட்டி' டாப் கிளிக் செய்து கடந்த முறை எப்போது நீங்கள் உங்கள் கடவுச்சொல்லை மாற்றினீர்கள் என்ற விவரங்களையும், உங்களின் 2 ஸ்டெப் வெரிஃபிக்கேஷன் செயலில் உள்ளதா என்பதையும் சரி பார்த்துக்கொள்ளவும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஜியோ பயனாளியாக இல்லாமலேயே ஜியோ ஆப்ஸ்களை இலவசமாக அணுகலாம், எப்படி?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Read more about:
English summary
5 Google Account Security Tips You Should Not Ignore. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot