இதெல்லாம் அமேசானில் கிடைக்குமென்று உங்களுக்கு தெரியுமா.?

லேசர் கீபோர்ட் பொறுத்தவரை ஹொலோக்கிராஃபி தொழில்நுட்ப முறையில் பயன்படுகிறது, அதன்பின்பு இந்த சாதனம் உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெப்லேட் போன்ற சாதனங்களில் ப்ளூடூத் மூலம் இயக்கி பயன்படுத்த முடியும்.

By Prakash
|

இப்போது வரும் தொழில்நுட்பங்கள் பொறுத்தவரை பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது, அதன்படி மாணவர்களுக்கு இந்த புதிய தொழில்நுட்பங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். 3டி பென், லேசர் கீபோர்ட் போன்ற அனைத்து சாதனங்களும் மிக விரைவில் அனைத்து இடங்களுக்கும் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் வலைதளத்தில் பல்வேறு புதிய சாதனங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது, இவற்றின் விலை சற்று உயர்வாக இருந்தாலும் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தக் கூடிய புதிய தொழில்நுட்ப சாதனங்களை பார்ப்போம்.

 3டி பென்:

3டி பென்:

இந்த 3டி பென் தொழில்நுட்பம் பொறுத்தவரை பல்வேறு நாட்களுக்கு முன்பே வந்துவிட்டது, தற்சமயம் இது மேம்படுத்தப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றில் ஸ்டீரியோஸ்கோபிக் அச்சடிப்பு, மேம்பட்ட unclogging தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது. இது காற்றில் வரையவும், காகிதத்தில் பொருட்களை கண்டுபிடிப்பதற்காகவும் பயன்படுத்தலாம். அச்சிடும் பேனா உங்கள் கலை யோசனைகளை திறமையுடன் செயல்பட வைக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவற்றை எளிமையாக பயன்படுத்த முடியும்.

ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் லைட்:

ஸ்மார்ட்போன் ஃபிளாஷ் லைட்:

இப்போது வரும் ஸ்மார்ட்போன்களில் கண்டிப்பாக ஃபிளாஷ் லைட் இடம்பெறும், ஆனாலும் கூட சில இடங்களில் அதிக வெளிச்சம் தேவைப்படும் அதற்கு தகுந்தபடி எஃப் லென்ஸ் எனப்படும் ஃபிளாஷ் லைட் தற்சமயம் வெளிவந்துள்ளது. இந்த எஃப் லென்ஸ் ஸ்மார்ட்போனில் பின்புறம் பயன்படுத்த முடியும், இது பல மடங்கு வெளிச்சம் தரும் ஆற்றல் கொண்டவையாக உள்ளது. மேலும் 16 எல்இடி பல்புகள் கட்டப்பட்ட சிறிய மல்டிஃபங்க்ஸ்னல் மினி ஃபிளாஷ் லைட் பயன்படுத்த மிக அருமையாக இருக்கும்.

பிளேபல்ப்  கேன்டில்:

பிளேபல்ப் கேன்டில்:

இந்த பிளேபல்ப் கேன்டில் பொறுத்தவரை பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது,அதன்பின்பு இவற்றை இல்லங்களில் வைத்துப் பயன்படுத்த மிக அருமையா இருக்கும். மேலும் குறிப்பிட்ட செயலி மூலம் இவற்றை கட்டுப்படுத்த முடியும், உதரணமாக உங்களுக்கு தேவையான நிறங்களை ஸ்மார்ட்போனில் தேர்வு செய்து அவற்றின் மூலம் பிளேபல்ப் கேன்டிலை பயன்படுத்த முடியும். அதன்பின்பு இவற்றைப் பயன்படுத்தி புகைப்படங்கள் கூட மிக அருமையாக எடுக்க முடியும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
வொண்டர்கியூப் :

வொண்டர்கியூப் :

எட்டுவிதமான மொபைல் பயன்பாடுகள் ஒரே சாதனத்தில் இருப்பதாக வொண்டர்கியூப் பெருமைப்பட்டுக்கொள்கிறது. இந்த சாதனம் பொறுத்தவரை லேப்டாப் போன்ற சாதனங்களுடன் இணைக்கலாம். கோப்புகளை பேக் அப் எடுக்கலாம். இதே முறையில் போனை சார்ஜ் செய்யலாம். ஸ்மார்ட் போனில் வீடியோ அல்லது புகைப்படம் பார்க்க விரும்பினால்இ இதை ஸ்டாண்டாகப் பயன்படுத்தலாம். யு.எஸ்.பி. சாதனமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். மெமரி கார்டையும் இதில்பொருத்திக்கொள்ளலாம். இருளில் டார்ச்சாகவும் செயல்படும். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த வொண்டர்கியூப்.

லேசர்  கீபோர்ட்:

லேசர் கீபோர்ட்:

லேசர் கீபோர்ட் பொறுத்தவரை ஹொலோக்கிராஃபி தொழில்நுட்ப முறையில் பயன்படுகிறது, அதன்பின்பு இந்த சாதனம் உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப், டெப்லேட் போன்ற சாதனங்களில் ப்ளூடூத் மூலம் இயக்கி பயன்படுத்த முடியும். இதில் உள்ள சிறப்பம்சங்கள்
பொறுத்தவரை லேசர் லைட் கொண்டு மிக அருமையாக டைப் செய்ய முடியும்.

இனி ட்ரையல் ரூம்களுக்கு வேலையில்லை; வருகிறது விர்ச்சுவல் க்ளோத்ஸ்.

இனி ட்ரையல் ரூம்களுக்கு வேலையில்லை; வருகிறது விர்ச்சுவல் க்ளோத்ஸ்.

இ-காமர்ஸ் துறையில் இந்தியா வின் இரண்டாவது பெரிய நிறுவனம் என்ற பெயரை கொண்டுள்ளது அமேசான் நிறுவனம், ஸ்மார்ட்போன் போன்ற பல்வேறு சாதனங்களை மிக எளிமையாக தேர்வுசெய்து அமேசான் தளத்தில் வாங்க முடியும். பல்வேறு மக்கள் ஆடைகளை தேர்வு அதிக நேரங்கள் தேவைப்படுகிறது, அதன்பின்பு தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்வதில் பல சிக்கல் உள்ளது.

இதுபோன்ற பல பிரச்சனைகளை தவிர்க்க பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் மற்றும் அமேசான் நிறுவனம் இணைந்து விர்ச்சுவல் க்ளோத்ஸ் எனும் 3டி முறையை கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இனிமேல் மக்கள் மிக எளிமையாகவும், தங்களுக்கு பொறுத்தமான ஆடையை தேர்வுசெய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க்:

நியூயார்க்:

நியூயார்க் நகரத்தை அடிப்படையாகக் கொண்ட பாடி லேப்ஸ் என்ற நிறுவனம் புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது, இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் மற்றும் பாடி லேப்ஸ் நிறுவனங்கள் இணைந்து விரைவில் இந்தப் பயன்பாட்டை அனைத்து இடங்களுக்கும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறுது.

தொழில்நுட்பம்:

தொழில்நுட்பம்:

இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை ஆடைகளை தேர்வு செய்ய விர்ச்சுவல் ஸ்கேன் பயன்படுத்தப்படுகிறது, இதன் மூலம் கற்பனை கண்ணாடி வேலைசெய்கிறது, மேலும் தகுந்த ஆடைகளை எளிமையாக தேர்வு செய்யமுடியும். அதன்பின்பு உயரமாகவும், கருப்பாகவும், குள்ளமாகவும் இருப்பவர்கள் தங்களுக்கு தகுந்த ஆடைகளை அட்டகாசமாக தேர்வு செய்ய முடியும்.

விர்ச்சுவல் ஸ்கேன்:

விர்ச்சுவல் ஸ்கேன்:

விர்ச்சுவல் ஸ்கேன் பொதுவாக எவ்வாறு வேலைசெய்கிறது என்றால் காமிராக்கள் மற்றும் ப்ரொஜெக்டர்களின் கலவையைப் பயன்படுத்துகிறது, மேலும் விர்ச்சுவல் மாதிரியை உருவாக்க சூழலை ஸ்கேன் செய்வதன் மூலம் கற்பனை கண்ணாடியில் வேலைசெய்கிறது. அதன்பின்பு எந்த பொருளைக் கண்டறிவது என்பதை நிர்ணயிக்க பயனரின் முகத்தையும், கண்களையும் அடையாளம் காட்டுகிறது.

ஆடைகள்:

ஆடைகள்:

இந்த விர்ச்சுவல் ஸ்கேன் மூலம் பயனர்களுக்கு தகுந்த ஆடைகள் அனைத்தும் தேர்வுசெய்யமுடியும், அதன்பின்பு துணிகளும் காட்சியும் கலர்-யதார்த்த விளைவுகளை உருவாக்குவதற்கு கண்ணாடி உதவுகிறது.

பாடி லேப்ஸ் :

பாடி லேப்ஸ் :

பாடி லேப்ஸ் நிறுவனம் பொறுத்தவரை மனித உடல்கள் மற்றும் இயக்கங்களின் 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்றது. இந்நிறுவனம் ஆன்லைன் வாடிக்கையாளர்களுக்கு தனிப்பயனாக்குதலுக்கான பொருந்தக்கூடிய ஆடைகளைத் தரவரிசைப் பயன்படுத்துகிறது மற்றும் -ரியாலிட்டி வீடியோ கேம்ஸ் போன்றவற்றை உருவாக்குகிறது.

வாடிக்கையாளர்கள்:

வாடிக்கையாளர்கள்:

வாடிக்கையாளர்கள் அவர்கள் விரும்பும் அதிகமான துணிகளைக் கண்டறிந்து, அமேசான் வருவாயை உயர்த்த நினைக்கிறது. மேலும் சில்லறை விற்பனையாளரையும் கிட்டத்தட்ட விர்ச்சுவல் ஸ்கேன் ஆடைகளை முயற்சிப்பதில் இருந்து நிச்சயமாக பயன் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஷன்:

பேஷன்:

அமேசான் நிறுவப்பட்ட பேஷன் உலகின் சில எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், இந்நிறுவனம் சமீப ஆண்டுகளில் சில பேஷன் அடைகளில் அதிக கவனம் செலுத்தும் தயாரிப்புகளை வழங்கியுள்ளது, மேலும் அமேசான் நிறுவனம் ஸ்டைலான ஆடைகளை தயாரிப்பதில் அதிக கவனம் செலுத்திவருகிறது.

3டி ஸ்கேனிங் :

3டி ஸ்கேனிங் :

3டி ஸ்கேனிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அமேசான் எளிதாக வாடிக்கையாளர்களுக்கு ஆடைகளை, ஷூக்களை மற்றும் பொருந்தக்கூடிய பாகங்கள் வழங்க முடியும்.

காப்புரிமை;

காப்புரிமை;

அனைத்து காப்புரிமை கருத்துகளும் நிச்சயமாக தயாரிப்புகளாக மாறாது. இந்த தொழில்நுட்பத்தை கொண்டுவர அமேசான் நிறுவனம் அதிகளவு முயற்சி செய்துவருகிறது, கூடிய விரைவில் இந்த 3டி ஸ்கேனிங் தொழில்நுட்பம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
5 Amazing Tech Gadgets available on Amazon; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X