ஜியோ 4ஜி ஆண்ட்ராய்டை பாஸ்வேர்ட் இன்றி அன்லாக் செய்வது எப்படி..?

|

நமது பெரும்பாலான பாதுகாப்பான ரகசியங்களும், விடயங்களும் நமது ஸ்மார்ட்போனுக்குள் அடைந்து கிடக்கிறது என்பதை நாம் ஒற்றுக்கொண்டே ஆக வேண்டும். அம்மாதிரியான பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள், விடயங்கள் எல்லாம் பின் நம்பர், பாஸ்வேர்ட், பிங்கர்ப்ரிண்ட் சென்சார் என பல வகையான ஆதரவு மிக்க ஸ்மார்ட்போன் நுட்பங்களால் 'கழுகு கண்களிடம்' இருந்து பாதுகாக்கப்படுகின்றன.

ஆனால், தொழில்நுட்பம் எல்லா நேரங்களிலும் நமக்கு ஆதரவு அளிக்காது, முக்கியமாக நீங்கள் உங்கள் பாஸ்வேர்ட் அல்லது பின் நம்பரை மறந்து விட்டால்..!

வழிமுறைகள்

வழிமுறைகள்

அப்படியான நிலையில் உங்கள் ரிலையன்ஸ் ஜியோ சிம் கொண்டு இயங்கும் அண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் லாக் ஸ்க்ரீனை பாஸ்வேர்ட் இன்றி திறக்க முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா..? இதோ அதற்கான 4 வழிகள்.

வழி #01

வழி #01

முதல் வழி, ஒரு ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை பயன்படுத்துவது. ஒரு கம்ப்யூட்டரில் இருந்தோ அல்லது பிற மொபைல் போனில் இருந்தோ google.com/android/devicemanager என்ற வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

லாக் :

லாக் :

லாக் ஆகி கிடக்கும் போனில் பயன்படுத்தப்பட்ட அதே கூகுள் அக்கவுண்ட் கொண்டு வலைதளத்தில் சைன்-இன் செய்யவும். பின்பு அன்லாக் செய்ய வேண்டிய கருவியை தேர்வு செய்து 'லாக்' ஆப்ஷனை செலெக்ட் செய்யவும்.

உறுதி :

உறுதி :

ரிங், லாக் மற்றும் ஏரேஸ் - என்ற மூன்று பொத்தான்கள் கொண்டு உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது உறுதி செய்யப்படும்.

தற்காலிக கடவுச்சொல் :

தற்காலிக கடவுச்சொல் :

பின்பு உங்களுக்கு ஒரு தற்காலிக கடவுச்சொல் வழங்கப்படும் அதை உங்கள் தொலைபேசியில் கடவுச்சொல்லாக பயன்படுத்தி அன்லாக் செய்து கொள்ளாலாம். பின்னர் விருப்பமான பாஸ்வேர்ட் கொண்டு அதை மாற்றி அமைத்தும் கொள்ளலாம்.

வழி #02

வழி #02

அன்லாக் செய்ய கூகுள் லாக்-இன் பயன்படுத்தலாம். இந்த முறையானது ஆண்ட்ராய்டு 4.4 கிட்கேட் மற்றும் அதற்கு கீழே உள்ள இயங்கு தளங்கள் கொண்ட கருவிகளில் மட்டுமே வேலை செய்யும் மற்றும் உங்கள் ஸ்மார்ட்போனை திறக்க இதுவொரு வேகமான வழியாகும்.

பர்கெட் பாஸ்வேர்ட் :

பர்கெட் பாஸ்வேர்ட் :

உங்கள் பாஸ்வேர்ட் அல்லது பேட்டர்ன் ஆனது மறக்கப்பட்டு விட்டால், வேண்டுமென்றே ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட முறை தவறான பேட்டர்னை வழங்கவும். பின்பு பர்கெட் பாஸ்வேர்ட் ஆப்ஷன் செலெக்ட் செய்யவும். பின்னர் நீங்கள் பேக்-அப் பின் அல்லது கூகுள் லாக்-இன் விவரங்கள் அளிக்கப்பட உங்கள் போனை அன்லாக் செய்யலாம்.

வழி #03

வழி #03

கஸ்டம் ரிக்கவரியை பயன்படுத்தலாம். இந்த முறை முயற்சி செய்ய, உங்கள் தொலைபேசியில் ஒரு எஸ்டி கார்ட் இருக்க வேண்டும். உண்மையில், லாக் ஆன சாதனத்தை திறக்க இதுவொரு மேம்பட்ட வழியாகும்.

ரீபூட் :

ரீபூட் :

பேட்டர்ன் பாஸ்வேர்ட் டிஸ்ஸேபிள் (Pattern Password Disable) என்ற ஸிப் பைலை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து உங்கள் போனின் எஸ்டின் கார்டில் சேமித்து வைத்துக்கொள்ளவும். பின் உங்கள் தொலைபேசியில் அந்த எஸ்டி கார்டை இணைத்து மற்றும் ரீக்கவரி செய்யும் நோக்கத்தில் கருவியை ரீபூட் செய்யவும் பின்பு எஸ்டி கார்டில் இருக்கும் ஸிப் பைலை ஃப்ளாஷ் செய்து, ரீபூட் செய்யவும்.

பதிவு :

பதிவு :

பின்னர் உங்கள் தொலைபேசி ஒரு பூட்டிய திரை இல்லாமல் திறக்கும் அதில் ஒரு கடவுச்சொல் பதிவு செய்து போனை அன்லாக் செய்து கொள்ளலாம்.

வழி #04

வழி #04

இறுதி வழியாக பேக்டரி ரீசெட் செய்து அன்லாக் செய்யலாம். இதன் மூலம் நீங்கள் உங்கள் போனில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்களும் அழிக்கப்பட்டு விடும், உங்கள் பாஸ்வேர்ட் உட்பட. இம்முறையானது எப்போதுமே இறுதி முடிவாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வாட்ஸ்ஆப்பில் போலியான 'லாஸ்ட் சீன்' உருவாக்குவது எப்படி..? என்பதை படிக்க இங்கே கிளிக் செய்யவும்..!

Best Mobiles in India

English summary
4 Ways to Unlock Your Reliance Jio 4G Android Smartphone Without a Password. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X