Home
How to

எந்த கம்பெனியும் வெளியே சொல்லாத 4 உண்மைகள்.. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீப்பிடிப்பது எப்படி?

இந்தியாவில் எந்தவொரு மூலைமுடுக்காக இருந்தாலும் சரி.. அங்கே உள்ள ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) தீ விபத்திற்கு உள்ளாகி விட்டால் போதும்.. அது உடனடியாக மிகப்பெரிய செய்தியாகி விடும். குறிப்பாக அது தொடர்பான வீடியோ சிக்கிவிட்டால் போதும்.. இரவோடு இரவாக அது வைரல் ஆகிவிடும்!

வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும், "நாமளும் ஒரு இ-ஸ்கூட்டர் வாங்கினால் என்ன?" என்கிற எண்ணத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகாரத்து கொண்டே போகிறது!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் தீப்பிடிப்பது எப்படி? 4 முக்கிய உண்மைகள்!

இதற்கிடையில், ஆங்காங்கே மற்றும் அவ்வபோது ஏற்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்துக்களானது, ஏற்கனவே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கியவர்களை மட்டுமன்றி, வாங்க போகிறவர்களின் வயிற்றிலும் புளியை கரைக்கும் ஒரு செய்தியாகி விடுகிறது!

சமீபத்தில்.. ஜஸ்ட் மிஸ்.. ஜம்ப் அடித்து உயிர் தப்பிய இருவர்!

கடந்த சனிக்கிழமையன்று, தானேவில் உள்ள கிழக்கு எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலையில் பயணித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று, திடீரெனெ தீப்பிடித்து எரிந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக, இந்த தீ விபத்தின் போது, குறிப்பிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணித்த இருவரும் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினர். இருப்பினும் வழக்கம் போல இந்த தீவிபத்தும் வைரல் ஆகி வருகிறது!

தானேவில் நடந்த தீ விபத்து குறித்த தகவலானது, காலை 8.40 மணியளவில் கிடைத்ததாகவும், பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் காலை 9.15 மணியளவில் தீயை அணைத்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது!

வெளிப்படையாக பேசப்படாத 4 உண்மைகள்!

பொதுவாகவே தீ விபத்துக்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; அதிலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்பான தீ விபத்து என்றால்.. சொல்லவே வேண்டாம்!

இப்படியான தீ விபத்திற்கு பின்னால் 4 முக்கியமான உண்மைகள் உள்ளன. பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் அதைப்பற்றி வெளிப்படையாக பேசவில்லை என்றாலும் கூட, அந்த 4 உண்மைகளையும் ஒவ்வொருவரும் அறிந்து வைத்துக்கொள்வது நல்லது!

அதென்ன உண்மைகள்?

01. பொதுவாக ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் உள்ளே இருக்கும் பேட்டரியானது மூன்று நிகழ்வுகளின் போதுதான் தீப்பிடிக்கும்.

அது எலெக்ட்ரிக்கல் (Electrical), தெர்மல் (Thermal), மெக்கானிக்கல் (Mechanical) கோளாறுகளின் போது தீப்பிடிக்கும் அல்லது இவற்றில் ஏதேனும் 2 கோளாறுகளின் கலவையின் கீழ் தீப்பிடிக்கும்!

02. ஒரு மோதலின் விளைவாகவும் கூட எலெக்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியில் தீப்பிடிக்கலாம் அல்லது ஏதோ ஒரு வகையில் ஏற்கனவே அந்த பேட்டரி சேதமடைந்து இருக்கலாம், அதன் விளைவாக கூட அது தீப்ப்பிடிக்கலாம்!

03. லித்தியம்-அயன் பேட்டரியின் கலவையானது (Composition) திறமையானதாக இருக்கும் மறுகையில் அதிகமாக வெப்பமடையும் மற்றும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் இருக்கும். வல்லுநர்கள் இதை "தெர்மல் ரன்வே" நிகழ்வு (Thermal Runway Phenomenon) என்கின்றனர்.

அதாவது பேட்டரி செல்லிற்குள் (Battery Cell) நடக்கும் செயின் ரியாக்ஷன் (Chain Reaction) ஆனது வெப்பநிலையை அதிகரிக்கும்; மேலும் இரசாயன எதிர்வினைகளையும் (Chemical Reactions) ஏற்படுத்தும். இறுதியில் அந்த பேட்டரி தீ பிடித்து எரியும்!

04. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சார்ஜ் செய்யும் போதும் கூட சில தீ விபத்துகள் ஏற்படுகின்றன.

ஒருவேளை குறிப்பிட்ட இ-ஸ்கூட்டரின் உரிமையாளர் முறையான நடைமுறைகளை பின்பற்றாமல் இருந்திருக்கலாம். முக்கியமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரியை அதிகப்படியாக சார்ஜ் செய்து இருக்கலாம்!

எது அதிக சார்ஜ்?

ஒரு பேட்டரிக்கு அதன் அதிகபட்ச கொள்ளளவை ( Maximum capacity) தாண்டி, அதிகப்படியான மின்னோட்டம் (Excessive current) வழங்கப்படும் போது, அது அதிகமாக சார்ஜ் செய்யப்படுகிறது என்று அர்த்தம்.

அதிகப்படியான சார்ஜ் தொடரும் பட்சத்தில், ஒருகட்டத்தில் பேட்டரியின் பொருட்கள் பிரேக் டவுன் ஆகும், அது தீ விபத்தில் சென்று முடியும்!

More from GizBot

Best Mobiles in India

English summary
4 Unknown Truths Behind Each and Every Electric Scooter Fire Accident
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X