Subscribe to Gizbot

மெதுவாகிப்போன ஜியோ 4ஜி வேகம்; மீண்டும் பழைய வேகத்திற்கு கொண்டுவர 4 டிப்ஸ்.!

Written By:

ஒரு ஸ்மார்ட்போன் ஆனது எப்பொழுதும் உச்சக்கட்ட செயல்திறனில் இயங்காது. சில நேரங்களில், சில உதவிகளை நாம் செய்ய வேண்டியிருக்கும். அம்மாதிரியான உதவிகள் உங்கள் ஸ்மார்ட்போனின் செயல்திறனை படிப்படியாக உயர்த்தும், குறிப்பாக உங்களின் 4ஜி வேகம் அதிகரிக்கும்.

மெதுவாகிப்போன ஜியோ 4ஜி வேகம்; மீண்டும் பழைய வேகத்த்தை பெற 4 டிப்ஸ்!

அப்படியாக உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் இன்டர்நெட் வேகம் பாதிக்கப்பட்டிருந்தால், சில குறிப்பிட்ட தந்திரங்களை செய்வதின் மூலம் அதை விரைவாகச் சரிசெய்யலாம் என்பதை நீங்கள் அறிவீர்களா.?

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
இதை தொடங்குவதற்கு முன்பு.!

இதை தொடங்குவதற்கு முன்பு.!

கீழ் தொகுக்கப்பட்டுள்ள எந்தவொரு 4ஜி எல்டிஇ தந்திரமும், உங்ளுக்கு 5ஜி வேகத்தை வழங்கப்போவதில்லை தான். ஆனால், உங்கள் பிரவுசிங் சுமையை குறைக்கும் அல்லது இன்டர்நெட் பயன்பாட்டின் போது நிகழும் 'லேக்' லேக் சரிசெய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இதை தொடங்குவதற்கு முன்பு, நீங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்கப்படவில்லை என்பதையும், மொபைல் டேட்டா கொண்டே இயங்குகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்தவும். இல்லையெனில் மொபைல் டேட்டாவை ஆன் செய்யவும், பின்னர் கீழ் தொகுக்கப்பட்டுள்ள தந்திரங்களை நிகழ்த்தவும்.

தந்திரம் #01

தந்திரம் #01

செயல்திறனை அதிகரிக்கும் பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யவும். இவைகளை பெர்பாமன்ஸ் பூஸ்டிங் ஆப்ஸ் (Performance-Boosting Apps ) என்பார்கள். சில பரிந்துரைகள் இங்கே : க்ளீன் மாஸ்டர் : இது போன் பூஸ்டர் மற்றும் வைரஸ் தடுப்பு ஆகிய இரண்டு பணிகளையும் நிகழ்த்துமொரு ஆப் ஆகும். இது தேவையிலாத பைல்களை, நோட்டிபிகேஷன்களை, வைரஸ்களை அகற்றி ஸ்மார்ட்போனின் செயலதிறனை அதிகரிக்க உதவுகிறது.

பேக்கிரவுண்ட்டில் செயல்படும் ஆப்ஸ்.!

பேக்கிரவுண்ட்டில் செயல்படும் ஆப்ஸ்.!

இதேபோல பேட்டரி நுகர்வை குறைக்க உதவும் சிஸ்ட்வீக் ஆண்ட்ராய்டு கிளீனர் (Systweak Android Cleaner) ஆப் மற்றும் ஸ்மார்ட்போனின் ரேம் சேமிப்பகத்தை மற்றும் பேக்கிரவுண்ட்டில் செயல்படும் ஆப்ஸ்களை கன்றிய உதவும் டியூ ஸ்பீடு பூஸ்டர் (DU Speed Booster) ஆப் ஆகியவைகளையும் இன்ஸ்டால் செய்யலாம்.

தந்திரம் #02

தந்திரம் #02

உங்களின் ஆண்ட்ராய்டு நெட்வொர்க் செட்டிங்ஸை சரிபார்க்கவும். இன்டர்நெட் வேகத்துடன் நீங்கள் தொடர்ந்து சிக்கலை எதிர்கொண்டிருந்தால், உங்கள் செட்டிங்ஸை சரிபார்க்கவும். செட்டிங்ஸ் சென்று -> மொபைல் நெட்வொர்க் செட்டிங்ஸை கண்டறியவும்.

ஜிஎஸ்எம்/ டபுள்யூசிடிஎம்ஏ / எல்டிஇ
மெனுவின் ப்ரீஸ்ஸ் நேம் ஆனது ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் மாறுபடும். அது சரியான மொபைல் நெட்வொர்க்குடன் இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யுங்கள். அதாவது 3ஜி-க்கு மட்டுமே கட்டுப்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். உலகில் பெரும்பாலான பகுதிகளில் ஜிஎஸ்எம்/ டபுள்யூசிடிஎம்ஏ / எல்டிஇ (GSM / WCDMA / LTE) போன்ற நெட்வொர்க்குகளின் கீழ் தான் இயங்குகின்றன, எனவே முதலில் இதை முயற்சிக்கவும்.

தந்திரம் #03

தந்திரம் #03

பயன்படுத்தாத ஆப்ஸ்களை டிஸேபிள் அல்லது அன்இன்ஸ்டால் செய்யுங்கள். பெரும்பாலான ஆப்ஸ் மிகவும் சிறப்பாகவே செயல்படுகின்றன. மறுகையில் உள்ள சில ஆப்ஸ்கள், அவைகள் இயங்கும் போது பின்னணியில் தேவையில்லாமல் உங்களின் மொபைல் டேட்டாவை வீணடிக்கின்றன. அதற்கு பேஸ்புக் ஒரு மிகச்சிறந்த உதாரணமாகும்.

சில ஆப்ஸ்களை டெலிட் செய்ய முடியாது.!

சில ஆப்ஸ்களை டெலிட் செய்ய முடியாது.!

ஒன்று குறிப்பிட்ட ஆப்ஸ்களை டெலிட் செய்ய விருப்பமில்லை, குறைந்தபட்சம் ஹோம் ஸ்க்ரீனில் இருந்தாவது நீக்குங்கள். அதைவிட்டு ரிமூவ் ஐகானை பயன்படுத்தவும். அல்லது முழுமையாக டெலிட் செய்ய வேண்டுமென்றால், ஆப்ளிகேஷன்ஸ் மெனு சென்று குறிப்பிட்ட ஆப்ஸ்களை ஒட்டுமொத்தமாக டெலிட் செய்யவும். சில ஆப்ஸ்களை டெலிட் செய்ய முடியாது. அவைகள் உற்பத்தியாளர்களால், அல்லது கூகுளால் ப்ரீ-லோடட் செய்யப்பட்ட அப்ஸ் ஆகும்.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
தந்திரம் #04

தந்திரம் #04

ஸ்மார்ட்போன்களில் காட்சிப்படும் விளம்பரங்களானது, செயல்திறனை மட்டுமின்றி, மொபைல் டேட்டாவையும் பாதிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா.? ஆண்ட்ராய்டில் ஒரு நல்ல ஆட் பிளாக்கரை கண்டுபிடிப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகும் என்பதை நாங்கள் அறிவோம். அதனால் தன ஒரு பரிந்துரையோடு வந்துள்ளோம். கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கும் ஆட்பிளாக் ப்ரவுஸர் ஆப்பை முயற்சி செய்து பார்க்கவும்.

மேலும் பல டெக் டிப்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் தளத்துடன் இணைந்திருக்கவும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
4 Tricks to Speed Up Internet on Your Android Smartphone. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot