ஸ்டூடியோ லைட்டிங்: வீட்டில் முயற்சிக்கக் கூடிய எளிய லைட்டிங் முறைகள்

|

ஸ்டூடியோ லைட்டிங் என்றாலே அச்சம் கொள்பவர்கள் இருக்கின்றனர். எனினும் அனைவரும் நினைப்பதை போல் அச்சப்பட வேண்டிய விஷயம் கிடையாது. சில எளிமையான ஹோம் ஸ்டூடியோ கிட், சில ஃபிளாஷ் ஹெட் மற்றும் உபகரணங்களை கொண்டு தலைசிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.

ஸ்டூடியோ லைட்டிங்: வீட்டில் முயற்சிக்கக் கூடிய எளிய லைட்டிங் முறைகள்

ஹோம் ஸ்டூடியோ லைட்டிங் கிட்களில் பல்வேறு ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இவற்றில் பல ஆப்ஷன்கள் பட்ஜெட் விலையிலும் கிடைக்கின்றன. அவ்வாறு உங்களுக்கு தேவையான சில அடிப்படை கிட் உபகரணங்கள் மற்றும் அவற்றை கொண்டு ஸ்டூடியோ போர்டிரெயிட்களை எவ்வாறு படமாக்க வேண்டும் என்பனவற்றை தொடர்ந்து பார்ப்போம்.

ஃபிளாஷ் ஹெட்கள்:

ஃபிளாஷ் ஹெட்கள்:

பெரும்பாலான கிட்களில் இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள் இருக்கும். இதனுடன் ஃபிளாஷ் டியூபுடன் மாடலிங் லைட் ஒன்றும் இருக்கும். பெரும்பாலானவற்றில் ஸ்விட்ச் செய்யக்கூடிய ஸ்லேவ் இருக்கும், இவற்றில் ஒன்றை டிரிகர் செய்ய வேண்டியதாய் இருக்கும். இதனால் ஒன்றை மட்டும் கேமராவுடன் இனைத்திருந்தாலே போதுமானது.

ஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 1 | ரெம்பிரான்ட்

ஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 1 | ரெம்பிரான்ட்

இவ்வகை லைட்டிங் வழிமுறை அதிக டெப்த் கொண்ட ஆர்டிஸ்டிக் ஷாட்களை எடுக்க முடியும்

ஒரு ஃபிளாஷ் ஹெட்டினை 45 கோணத்தில் ஆறு அடி உயரத்தில் மாடலை நோக்கி செட் செய்ய வேண்டும். இவ்வாறு செட் செய்யும் போது வெளிச்சம் ஒருபக்கமாகவும், உயரத்திலும் அதிக பிரகாசமாக பரவும்.

இதனை கீ-லைட் என்பார்கள். இதில் வெளிச்சத்தை சமமாக்க, ரிஃப்லெக்டரை மாடலின் மற்றொரு புறம் வைத்து நிழலை தவிர்க்க செய்ய முடியும். இவ்வகையான செட்டப் செய்யும் போது மாடல் முகத்தில் முக்கோண வடிவில் வெளிச்சம் காணப்பட வேண்டும்.

இதற்கு தேவையான உபகரணங்கள்:

- ஒரு ஃபிளாஷ் ஹெட்

- ஒரு ருஃப்லெக்டர்

- இரண்டு லைட் ஸ்டான்டுகள்

ஸ்டூடியோ லைட்டிங் 2 | கிளாம்ஷெல்

இவ்வகையான ஸ்டூடியோ லைட்டிங் புகைப்படங்களை மிகவும் துல்லியமாக படமாக்க உதவும்.

லைட்டிங் சீராக செய்யப்படுவதால் இதனை கொண்டு அழகிய புகைப்படங்களை எடுக்க முடியும். மிகவும் துல்லியமான புகைப்படங்களை எடுக்க இரண்டு சாஃப்ட்பாக்ஸ்களை மாடலின் இருபுறங்களில் சமமாக வைக்க வேண்டும்.

இரண்டு லைட்களிலும் ஒரே அளவு வெளிச்சம் பரவுமளவு பவர் செட் செய்யவேண்டும். இவ்வாறு செய்யும் போது முகத்திற்கு ரிஃப்லெக்டர் பயன்படுத்தலாம். இது முகத்திற்கு வெளிச்சத்தை கொண்டு சேர்க்கும்.

தேவையான உபகரணங்கள்:

தேவையான உபகரணங்கள்:

- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்

- இரண்டு 66 செ.மீ. சாஃப்ட்பாக்ஸ்கள்

- ஒரு ரிஃப்லெக்டர்

- இரண்டு லைட் ஸ்டான்டுகள்

ஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 3 | பேக்லைட்

ஸ்டூடியோ லைட்டிங் செட்டப் 3 | பேக்லைட்

இவ்வகை லைட்டிங் கொண்டு டெப்த் மற்றும் டிராமாவினை பின்புற லைட்களை கொண்டு சேர்க்க முடியும்.

புகைப்படத்தில் டிராமா சேர்க்க ஒரு லைட்களில் ஸ்நூட் உபகரணம் பயன்படுத்த வேண்டும். இது வெளிச்சத்தை ஒரு புள்ளியில் சேரும் படி பீய்ச்சியடிக்கும். இதனை மாடலின் பின்புறம் வைக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது வெளிச்சம் மாடலின் தலையில் பரவி, புகைப்படத்தில் டிராமா மற்றும் டெப்த் உருவாக்கும். இத்துடன் பேக்கிரவுண்டு தனியாக காட்சியளிக்கும், இத்துடன் பேக்லைட் புகைப்படத்தில் தெரியாதபடி பார்த்து கொள்ள வேண்டும்.

தேவையான உபகரணங்கள்:

- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்

- ஒரு 66செ.மீ. சாஃப்ட்பாக்ஸ்

- ஒரு ரிஃப்லெக்டர்

- ஒரு ஹனிகாம்ப்

ஸ்டூடியோ லைட்டிங் 4 | ரிம் லைட்டிங்

ஸ்டூடியோ லைட்டிங் 4 | ரிம் லைட்டிங்

ஏற்கனவே உள்ள ஸ்டைலினை அதிக துல்லியமாக வெளிப்படுத்த இந்த வழிமுறை பயனுள்ளதாக இருக்கும்.

இரண்டு லைட்களை மாடலுக்கு சற்றே பின்புறமாக கேமராவின் பின்புறம் இருக்கும் படி வைக்க வேண்டும். சற்றே சிரமமான வேலைப்பாடுகள் நிறைந்திருந்தாலும், உடற்கட்டுக்களை தெளிவாக வெளிப்படுத்த இவ்வகையான லைட்டிங் வழி செய்யும்.

பொதுவாக இவ்வாறான லைட்டிங் பிறந்த மேனியில் புகைப்படங்களை எடுக்க பயன்படுத்தப்படுகிறது. இத்துடன் லைட்கள் கேமராவின் பின் இருப்பதால் லென்ஸ் ஃபிளேர் சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு பார்ன் டோர்ஸ் அல்லது லென்ஸ் ஹூட் பயன்படுத்தலாம்.

தேவையான உபகரணங்கள்:

- இரண்டு ஃபிளாஷ் ஹெட்கள்

- ஒரு ரிஃப்லெக்டர்

Best Mobiles in India

Read more about:
English summary
4 simple and easy photography lighting tricks

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X