கூகுளில் பணம் சம்பாதிக்க 4 எளிய வழிமுறைகள்.!

மொபைல் அப்ளிகேஷன்ஸ் தயாரிப்பாளர்களுக்கான கனவுதான் Google App Engine. நீங்கள் இந்த இயங்குதளத்தில் எளிதில் மொபைல் App பயன்பாடுகள் உருவாக்க முடியும்.

|

கூகுள் நிறுவனம் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக மக்களுக்கு தகுந்தபடி இப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது, முதலில் மின்னஞ்சல், ஆன்லைன் விளம்பரம், கிளவுட் கம்ப்யூட்டிங், வன்பொருள் மற்றும் சிறு வியாபார மென்பொருட்கள் போன்ற இணைய தொடர்பான சேவைகளை கொண்டிருக்கும் இந்நிறுவனம், இப்போது பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை கொண்டுவந்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.

கூகுளில் பணம் சம்பாதிக்க 4 எளிய வழிமுறைகள்.!

உலகளாவிய வலை பொழுதுபோக்கிற்கும் தகவல்தொடர்புக்கும் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பல பயனர்கள் பொருள் பயன்களைப் பெறுவதைப் பற்றி சிந்திக்கிறார்கள் மற்றும் இணையத்தில் பணத்தை எப்படிச் சம்பாதிக்கலாம் என்பதை அறிந்து கொள்வது மற்றும் ஒரு புதிய உறவை முதலீடு செய்யாமல் உண்மையிலேயே அதைச் செய்ய முடியுமா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

கூகுள் பொறுத்தவரை 1998-இல் லாரி பேஜ், சேர்ஜி பிரின் ஆகியோரால் துவங்கப்பட்ட இந்நிறுவனத்தின் முதல் பொதுப்பங்கு வெளியீடு 2004இல் நடைபெற்றது. குறிப்பாக அனைவருக்கும் முழுமையாக பயன்படும் வகையில் உலகின் தகவல்களை ஒருகிணைப்பதே கூகுளின் நோக்கமாகும்.

 கூகுள் நியூஸ் :

கூகுள் நியூஸ் :

கூகுள் நியூஸ் ஒவ்வொரு மாதமும் 350 மில்லியன் பார்வையாளர்களை உலகம் முழுவதிலும் இருந்து பெறுகிறது. நீங்கள் கூகிள் நியூஸ் இணையத்தளத்தில் பட்டியலிடப்பட்டிருந்தால், இந்த பார்வையாளர்களின் ட்ராஃபிக்கின் சிறிய பங்கைப் பெறலாம். செய்தி வெளியீட்டாளர்கள் கூகுள் செய்திகளைப் பயன்படுத்தி மட்டுமே மில்லியனர்கள் ஆகிருக்கிறார்கள்.

யூடியூப் :

யூடியூப் :

யூடியூபில் நாம் உருவாக்கி, பதிவேற்றம் செய்யும் வீடியோக்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும். தனிநபர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் யூடியூப் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. யூடியூப் சேனலில் பணம் சம்பாதித்துக் கொடுக்கும் வசதியை இயக்கிக்கொள்ள வேண்டும். இதற்கு Monitize என்று பெயர். உங்கள் யூடியூப் சேனலில் லாகின் செய்துகொண்ட பிறகு, Creative Studio > Channel > Status and Features > Monitization என்பதில் உள்ள Enable பட்டனை க்ளிக் செய்யவேண்டும்.

யூடியூப் வீடியோ மேனேஜர் பகுதியில் எந்தெந்த வீடியோ மூலம் பணம் சம்பாதிக்க விரும்புகிறீர்களோ, அந்த வீடியோக்களில் உள்ள டாலர் ($) குறியீட்டை க்ளிக் செய்து Monitize செய்துகொள்ள வேண்டும். கூகுள் ஆட்சென்ஸ் உங்கள் வீடியோக்களின் கீழே எழுத்துகள், படங்கள், சிறிய வீடியோ காட்சிகள் மூலம் உங்கள் பதிவுகளுக்கு ஏற்ப விளம்பர லிங்க்குகளை அளிக்கும். பார்வையாளர்கள் அவற்றை க்ளிக் செய்து பார்க்கும்போது, ஆட்சென்ஸ் மூலம் வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு முறை அந்த விளம்பர வீடியோக்கள் க்ளிக் செய்யப்படும்போதும் உங்கள் அக்கவுண்ட்டில் பணம் சேரும்.

How to Make a Video Intro for YouTube Video for FREE! - Tamil
ஆட்சென்ஸ்

ஆட்சென்ஸ்

நமது blogger.com அல்லது wordpress.com போன்ற வலைத்தளங்களில் விளம்பரம் வைத்து பணம் சம்பாதிக்க கூகுள் நிறுவனம் ஆட்சென்ஸ் (Adsense) சேவையை வழங்குகிறது. பல மொழிகளுக்கு கொண்டுவரப்பட்ட இந்த வசதி தமிழ் மொழிக்கு நெடுங்காலமாக தரப்படவில்லை. ஒரு வழியாக தமிழ் மொழிக்கும் ஆட்சென்ஸ் வந்துவிட்டது. இனி தமிழ் தளங்களில் நாம் பணம் சம்பாதிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ்

மொபைல் அப்ளிகேஷன்ஸ் தயாரிப்பாளர்களுக்கான கனவுதான் Google App Engine. நீங்கள் இந்த இயங்குதளத்தில் எளிதில் மொபைல் App பயன்பாடுகள் உருவாக்க முடியும். இதன் மூலம் கூட மிக எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். பெரும்பாலும் நாம் அனைவரும் இன்று ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறோம்.ஸ்மார்ட் போனில் சில ஆன்லைன் அப்ப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்தும் கூட நாம் பணம் சம்பாதிக்க இயலும். முக்கியமாக சாம்ப்காஷ் என்ற அப் இப்பொழுது மிகவும் பிரபலமாக உள்ளது. இதை பயன்படுத்தி இன்று ஆயிரகணக்கில் சம்பாதிக்க கூடியவர்களும் இருக்கிறார்கள்.

ஆன்லைன் மைக்ரோ டாஸ்கிங் வேலைகள் ஆன்லைன் மைக்ரோ டாஸ்க் தளங்களில் வேலை செய்வதன் மூலம் நீங்கள் நல்ல வருமானம் ஈட்ட முடியும். இங்கு கொடுக்கப்படும் சிறிய வேலைகளை செய்வதன் மூலம் நீங்கள் இணையத்தில் சம்பாதிக்க இயலும். ஆன்லைனில் சம்பாரிக்க இது ஒரு மிக சிறந்த வழி ஆகும். இந்த தளங்களில் நீங்கள் எந்த வித கட்டணமும் இன்றி இலவசமாக இந்த தளங்களில் சேர்ந்து கொள்ளலாம். இங்கு கொடுக்கப்படும் டாஸ்குகள் எளிமையாகவே இருக்கும். பெரும்பாலும் கொடுக்கப்பட்ட விவரங்களை பதிவு செய்தல் அல்லது கூகிள் ரிசெர்ச் போன்ற சுலபமான வேலைகளாகவே இருக்கும். நிறைய மைக்ரோ டாஸ்க் தளங்கள் உள்ளன ஆனால் அவற்றில் சில நிறைய வருமானம் தருபவையாக இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
4 Easy Ways To Make Money With Google; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X