புக்மார்க் செய்வதில் பிரச்ச்னையா? இதோ உங்களுக்கு உதவும் 4 ஆப்ஸ்கள்

புக்மார்க் செய்வதில் பிரச்ச்னையா? இதோ உங்களுக்கு உதவும் 4 ஆப்ஸ்கள்

By Siva
|

கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவருமே புக்மார்க்' என்ற ஒன்றை அறிந்து வைத்திருப்பீர்கள். நமக்கு பிடித்தமான இணையதள பக்கம், வீடியோ, ஆகியவற்றை நாம் நினைத்த போதெல்லாம் பார்ப்பதற்காக அவற்றை புக்மார்க் செய்து வைப்போம்.

இந்த 4 ஆப்ஸ்கள் உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும்

ஆனால் சில சமயம் புக்மார்க் செய்யும்போது சேமிக்கப்படாமல் பிரச்சனை செய்யும். புக்மார்க்கில் உள்ள சேமிப்பு காலியாகிவிட்டால் இந்த வகை பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதிக அளவில் புக்மார்க் செய்து சேமிக்கும் வழக்கம் உடையவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்றுதான் இந்த பிரச்சனை

புக்மார்க் என்பது நாம் விரும்பும் பக்கத்தை உடனே ஓப்பன் செய்து நேரத்தை சேமிக்கும் ஒரு வசதி. இந்த புக்மார்க்கில் சேமிப்பு குறித்த பிரச்சனை ஏற்பட்டால் அதை தீர்ப்பதற்காக ஆன்லைனில் சில டூல்ஸ்கள் உள்ளன. அந்த டூல்ஸ்கள் என்னென்ன? அவற்றை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்

வேர்ல்ட் பிரைன் (World Brain)

வேர்ல்ட் பிரைன் (World Brain)

கூகுள் குரோம் பிரெளசரில் உள்ள எக்ஸ்டென்ஷன்களில் ஒன்றுதான் இந்த வேர்ல்ட் பிரைன். இது நீங்கள் செய்த புக்மார்க் மற்றும் ஹிஸ்ட்ரியில் உள்ளவற்றை தேடி எடுத்து உங்களுக்கு தரும். இதற்கு முன்னர் நீங்கள் பயன்படுத்திய லிங்குகளை தேட இந்த வேர்ல்ட் பிரைன் உதவி செய்யும்

எனவே உங்களுக்கு எந்த இணையதள பக்கம் தேவையோ அந்த பக்கத்தை மிக எளிதில் கண்டுபிடிக்க உதவும் ஒரு டூல்ஸ்தான் இந்த வேர்ல்ட் பிரைன். இந்த வேர்ல்ட் பிரைன் தற்போது பீட்டா நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புக்கி (Booky)

புக்கி (Booky)

ஆன்லைனில் செயல்படும் அனைத்து பிரெளசர்களிலும் செயல்படும் வகையில் அமைந்தது தான் இந்த புக்கி. இது உங்களுக்கு என ஒரு தனி டேஷ்போர்டை உருவாக்கி எளிதில் குறிப்பிட்ட ஒரு பக்கத்தை தேடுவதற்கு உதவும்.

உங்களுக்கு தேவையென்றால் ஒவ்வொரு பணிக்கும் தனித்தனி டேஷ்போர்டு உருவாக்கி அதில் சம்பந்தப்பட்ட லிங்குகளை மட்டும் சேமித்து வைத்து கொள்ளலாம். இதனால் நேரம் மிச்சமாகும். உதாரணமாக சமூக வலைத்தளங்கள் என்று ஒரு டேஷ்போர்டை உருவாக்கி அதில் ஃபேஸ்புக், டுவிட்டர், இமெயில் ஆகியவற்றின் லிங்குகளை சேமித்து வைத்து கொள்ளலாம்.

ஆதார் உடன் பான்கார்டு இனைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!ஆதார் உடன் பான்கார்டு இனைப்பதற்க்கான கெடு நாளை விடுத்தது மத்திய அரசு..!

வூக்மார்க் (Vookmark)

வூக்மார்க் (Vookmark)

மற்ற புக்மார்க் டூல்ஸ்களில் இருந்து இந்த் வூக்மார்க் கொஞ்சம் வித்தியாசமானது. இந்த வூக்மார்க் உங்களது ஃபேவரேட் வீடியோக்களை சேமிக்க உதவி செய்யும்.

நாம் அடிக்கடி பார்க்கவிரும்பும் வீடியோக்களை சேமிக்க இது உதவும், ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், ஆப்பிள் டிவி போன்றவற்றில் இது செயல்படும். மேலும் குரோம் அல்லது சபாரி பிரெளசர்களின் எக்ஸ்டென்ஷன்களிலும் இதனை காணலாம்

இமெயில்திஸ் (EmailThis)

இமெயில்திஸ் (EmailThis)

ஆன்லைனில் காணப்படும் மற்றொரு புகழ்பெற்ற புக்மார்க் டூல் தான் இந்த இமெயில்திஸ். ஒரே ஒருமுறை இதில் சைன் - அப் செய்துவிட்டால் உங்களுடைய ஃபேவரேட் புக்மார்க்குகளை பாதுகாத்து கொள்வதோடு அதனை உங்களுடைய அல்லது பிறருடைய இமெயில்களிலும் இதனை ஷேர் செய்யலாம்.

மேலும் இந்த டூல்ஸ் நமக்கு தேவையில்லாத விளம்பரங்கள், கமெண்ட்கள், மற்றும் ஷேரிங் பட்டன்களை நீக்கி தருவதால் நமக்கு பிரச்சனை இல்லாத டூல்ஸ் ஆக உள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
There are few tools available online which lets you bookmark the interesting content on the web easily. Let us see in detail about few such apps.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X