ஸ்மார்ட்போனினை டேஷ்போர்டு மவுன்ட் செய்ய மூன்று சூப்பர் டிப்ஸ்.!

இவ்வாறான சூழல்களில் ரிஸ்க் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில், மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது.

|

வாகனம் ஓட்டும் போது மொபைல்போன் பயன்படுத்துவது நம் உயிருக்கு நாமே உலை வைப்பதற்கு சமம். எனினும் கார் ஓட்டும் போது விரும்பிய பாடல்களை கேட்டு தூக்கத்தை விரட்டவும், மேப்களை பார்க்கவும் ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

ஸ்மார்ட்போனினை டேஷ்போர்டு மவுன்ட் செய்ய மூன்று சூப்பர் டிப்ஸ்.!

இவ்வாறான சூழல்களில் ரிஸ்க் எடுத்தாக வேண்டும் என்ற நிலையில், மொபைல் போன் பயன்படுத்தாமல் இருக்கவும் முடியாது. இந்த சிக்கலை சரிக்கட்ட சூப்பர் ட்ரிக் உங்களது மொபைலை டேஷ்போர்டு அல்லது வின்ட்ஷீல்டில் மவுன்ட் செய்து தான். இவ்வாறு செய்யும் போது மொபைல் போனில் அதிக கவனம் செலுத்தாமல், சாலையில் கவனமாக இருந்து கொண்டு மொபைல் செட்டிங்களை அசால்டாக செய்து முடிக்கலாம்.
ஸ்மார்ட்போனினை டேஷ்போர்டு மவுன்ட் செய்ய மூன்று சூப்பர் டிப்ஸ்.!

சர்வதேச வின்ட்ஷீல்டு மற்றும் டேஷ்போர்டு மவுன்ட்கள்:
இதுபோன்ற பயன்பாடுகளை வழங்கும் பல்வேறு சாதனங்களை நீங்கள் கடந்து வந்திருப்பீர்கள்: சக்ஷன்-கப் அல்லது அட்ஹசிவ் மவுன்ட்கள் போன்றவை உங்களது மொபைலை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். இனி உங்களுக்கு தேவையான வின்ட்ஷீல்டை தேர்வு செய்வதில் கவனமாக இருக்க வேண்டும்.

சக்ஷன்-கப் போன்றவற்றை பயன்படுத்தும் போது, திடீரென வளைவுகளில் திரும்பும் போதோ அல்லது, கூர்மையான வளைவுகளில் திரும்பும் போது மொபைல் டேஷ்போர்டில் இடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.

இத்துடன் நீண்ட கழுத்து கொண்டிருக்கும் வின்ட்ஷீல்டு மவுன்ட்கள் பயன்படுத்த வசதியானதாக இருக்காது. அதுவும் பெரிய திரை கொண்ட மொபைல் போன்களை வைத்திருக்கும் போது, இதை ஏன் வாங்கினோம் என்ற எண்ணத்தில் ஆழ்த்திவிடும். இதனால் டேஷ்போர்டு மவுன்ட் வாங்கும் முன் இதுபோன்ற அம்சங்களை நன்கு ஆராய வேண்டும்.

ஸ்ப்ரிங் போன்ற கிரேடிள் கொண்ட மவுன்ட்கள் எவ்வித மொபைல் போன்களையும் தாங்கும், இத்துடன் க்விக்-ரிலீஸ் பட்டன் அடிக்கடி கழற்றி மாற்ற வசதியானதாக இருக்கும்.

ஸ்மார்ட்போனினை டேஷ்போர்டு மவுன்ட் செய்ய மூன்று சூப்பர் டிப்ஸ்.!

சிடி-ஸ்லாட் மவுன்ட்கள்:
உங்களது காரில் சிடி பிளேயர் இருப்பின், அதன் ஸ்லாட்-ஐ மவுன்ட்டிங் பாயின்ட் போன்று மாற்ற முடியும். எனினும் இது உங்களின் சிடி பிளேயிர் இருக்கும் இடத்தை சார்ந்தது ஆகும். உதாரணத்திற்கு சிடி பிளேயர் டேஷ்போர்டின் கீழ் பொருத்தப்பட்டிருந்தால், அதனை அடிக்கடி பயன்படுத்தவோ, அல்லது எளிமையாகவோ பயன்படுத்த முடியாது. இத்துடன் இவ்வாறு செய்யும் போது காரின் ரேடியோ கன்ட்ரோல்களை தடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

சிடி மவுன்ட் சிறப்பான வழிமுறையாக இருக்கும் என நினைத்தால், தொட்டில் மற்றும் காந்தம் என இரண்டு ஆப்ஷன்கள் இருக்கின்றன. ஐபௌ மவுன்ட் ஸ்ப்ரிங்-லோடு செய்யப்பட்ட தொட்டில் மூலம் மொபைல் போனினை மிக சிறப்பாக பயன்படுத்த முடியும். குறிப்பாக இவ்வாறு செய்யும் போது சிடி-க்கள் தொடர்ந்து இயங்கும். ஐபௌ சாதனத்தின் விலை 12.89 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போனினை டேஷ்போர்டு மவுன்ட் செய்ய மூன்று சூப்பர் டிப்ஸ்.!

காந்தம் மவுன்ட்கள்:
உங்களது மொபைல் போனில் கேஸ் போடப்பட்டிருப்பின், அதில் ஒரு மெல்லிய இருப்பு தகடை செருகி வைக்கலாம். இது காந்தம் மூலம் ஒட்டிக்கொள்ள வழி செய்யும் படி சக்திவாய்ந்ததாக இருக்கும். இது வேகமாக செய்யக்கூடியதாகவும், மொபைலை மிக எளிமையாக எடுத்து பயன்படுத்த வழி செய்யும்.

காற்றோட்டத்திற்கு வழி செய்யும் வென்ட்களில் இவ்வாறு செய்யும் போது காற்றோட்டம் தடைப்படும். இவ்வாறு செய்ய முடியாத சூழலில் உங்களது மொபைல் போனிற்கும் ஆபத்தாக இருக்கும்.

காந்தம் மூலம் ஏற்படக்கூடிய மற்றொரு பாதிப்பு இது. காந்தம் உங்களது மொபைலின் ஜிபிஎஸ் நேவிகேஷனில் எவ்வித குறுக்கீடும் செய்யாது என்றாலும், மொபைல் கேசில் உள்ள மெட்டல் பிளேட் உங்களின் வயர்லெஸ் சார்ஜிங்-இல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த வழிமுறையை பயன்படுத்த அனைத்து கார்களும் ஏதுவானதாக இருக்காது. சில சமயங்களில் மொபைல் போன் மாடல் மற்றும் கார் மாடல்களுக்கு ஏற்ப இவை மாறுபடும்.

Best Mobiles in India

English summary
3 ways to dashboard mount your smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X