வெறும் ரூ.10-க்கு YouTube Premium சந்தா! அதுவும் 3 மாதங்களுக்கு! பெறுவது எப்படி?

|

யூட்யூப் வழியாக வீடியோக்களை பார்க்கும் வழக்கம் / பழக்கம் கொண்ட எவருக்குமே யூட்யூப் பிரீமியமத்தை (YouTube Premium) பற்றிய பெரிய அறிமுகம் தேவைப்படாது.

யூட்யூப் பிரீமியம் என்பது, யூட்யூப் தளத்தில் அணுக கிடைக்கும் ஒரு கட்டணச் சேவையாகும். இந்த சேவையை பெறும்.

நோ விளம்பரம்.. ஒன்லி வீடியோ!

நோ விளம்பரம்.. ஒன்லி வீடியோ!

அறியாதோர்களுக்கு யூட்யூப் பிரீமியம் என்பது தன் வாடிக்கையாளர்களுக்கு விளம்பரமில்லாத அனுபவத்தை வழங்கும் ஒரு கட்டண சேவை ஆகும்

அதுமட்டுமின்றி, இந்த வீடியோ ஸ்ட்ரீமிங் இணையதளமானது யூட்யூப் பிரீமியம் வழியாக சில பிரத்யேக அம்சங்களையும் சோதிக்கிறது.

உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!உஷார்! வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி! தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!

அசல் விலையும்.. ஆபர் விலையும்!

அசல் விலையும்.. ஆபர் விலையும்!

இந்தியாவில், யூட்யூப் பிரீமியம் சேவை ஆனது மாதத்திற்கு ரூ.129 முதல் என்கிற விலைக்கு தொடங்குகிறது. இந்த சாந்தாவின் கீழ் வாடிக்கையாளர்கள் யூட்யூப் மியூசிக் சந்தாவையும் பெறுவார்கள்.

இதற்கிடையில், கூகுளுக்கு சொந்தமான இந்த வீடியோ ஷேரிங் பிளாட்பார்ம் ஆனது 3 மாத யூட்யூப் பிரீமியம் சந்தாவை வரும் ரூ.10 க்கு வழங்குகிறது. இருப்பினும், இந்த சலுகை அனைவருக்குமானது இல்லை!

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

2 வழிகளின் கீழ் இந்த சலுகையை, அதாவது ரூ.10 செலவில் 3 மாதங்களுக்கான யூட்யூப் பிரீமியம் சந்தாவை பெறலாம்.

ஒன்று - நேரடியாக யூட்யூப் வழியாக உங்களுக்கு நோட்டிபிக்கேஷன் வரும். இன்னொன்று - மற்றவரின் பரிந்துரை வழியாகவும் பெறலாம்!

மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?மொபைல் ஸ்விட்ச் ஆஃப் ஆன நேரத்தில் வந்த போன் கால்களை கண்டுபிடிப்பது எப்படி?

யூட்யூப் நோட்டிபிக்கேஷன் வழியாக!

யூட்யூப் நோட்டிபிக்கேஷன் வழியாக!

யூட்யூப் தளமானது அதன் சில பயனர்களுக்கு, 3 மாதத்திற்கான யூட்யூப் பிரீமியத்தை ரூ.10 க்கு பயன்படுத்தலாம் என்கிற நோட்டிபிக்கேஷன்களை அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

குறிப்பிட்ட நோட்டிபிக்கேஷன்களை பெற்ற பயனர்களுக்கு இந்த சலுகை வேலையும் செய்துள்ளது. சிலர் அது தொடர்பான ஸ்கிரீன் ஷாட்களை ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.

பரிந்துரை வழியாக!

பரிந்துரை வழியாக!

குறிப்பிட்ட சலுகை தொடர்பான யூட்யூப் நோட்டிபிக்கேஷன் எதுவும் உங்களுக்கு கிடைக்கவில்லையா? இருந்தாலும் ரூ.10-க்கு யூட்யூப் பிரீமியம் சந்தாவை பெற விரும்புகிறீர்களா?

ஆம் என்றால் பின்வரும் எளிய வழிமுறைகளை அப்படியே ஃபாலோ செய்யவும்!

- முதலில் உங்களின் நண்பர் ஒருவரிடம் இருந்து YouTube Premium-ஐ பயன்படுத்த கோரும் இன்விடேஷனை நீங்கள் பெற வேண்டும்.

இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!இந்த 4 பிரச்சனையில் 1 இருந்தால் கூட.. உங்க போனில் சிக்கல் இருக்குனு அர்த்தம்!

பாதி வேலை முடிந்தது!

பாதி வேலை முடிந்தது!

கிடைக்கப்பெற்ற இன்விடேஷனை கொண்டு ரூ.10 க்கு யூட்யூப் ப்ரீமியம் சந்தாவை அணுகலாம்.

நினைவில் வைத்து கொள்ளவும். இதற்கு முன் எந்த வகையான சந்தாவையும் (இலவசமாகவோ அல்லது தள்ளுபடியாகவோ) வாங்காத பயனர்களால் மட்டுமே இந்த சலுகையைப் பெற முடியும்.

இந்த சலுகை முடிந்த பிறகு..?

இந்த சலுகை முடிந்த பிறகு..?

குறிப்பிட்ட சலுகை காலத்திற்கு பிறகு, அதாவது 3 மாதங்களுக்கு பின்னர், இந்த சேவையை தொடர விரும்பினால், நீங்கள் மாதம் ரூ.129 கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.

மேலும் இந்த சலுகை முடிவடைவதற்கு ஏழு நாட்களுக்கு முன்பு, அதுதொடர்பான அறிவிப்புகளை நீங்கள் பெறுவீர்கள். மேலும் எப்போது வேண்டுமானாலும் இந்த சந்தாவை நீங்கள் ரத்து செய்யலாம்.

உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?உங்க போன் 5G-ஐ ஆதரிக்குமா? மொபைல் செட்டிங்ஸ் வழியாக கண்டுபிடிப்பது எப்படி?

ரூ.99-க்கு தனியாகவும் வாங்கலாம்!

ரூ.99-க்கு தனியாகவும் வாங்கலாம்!

யூட்யூப் பிரீமியம் சேவையானது விளம்பரமில்லா வீடியோக்களுக்கான அணுகலையும், யூட்யூப் மியூசிக் சந்தாவையும் ரூ.129 என்கிற ஆரம்ப விலையில் வழங்குகிறது.

ஒருவேளை உங்களுக்கு யூட்யூப் மியூசிக் சந்தா மட்டுமே வேண்டுமென்றால், மாதம் ரூ.99 செலுத்தி, அந்த சந்தாவை தனியாகவும் வாங்கலாம்.

வருடாந்திர சந்தாவின் விலை என்ன?

வருடாந்திர சந்தாவின் விலை என்ன?

யூட்யூப் பிரீமியம் சேவையின் வருடாந்திர சந்தாவானது ரூ.1,290 க்கு அணுக கிடைக்கிறது.

இதுதவிர்த்து மாதத்திற்கு ரூ.189 செலவாகும் பேமிலி பிளான் ஒன்றும் உள்ளது மற்றும் ஸ்டூடெண்ட் பிளான் ஒன்றும் உள்ளது; அதன் விலை மாதம் ரூ.79 ஆகும்.

Best Mobiles in India

English summary
3 Month Subscription of YouTube Premium at Just Rs 10 How to Avail this New 2022 Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X