ஐபோனில் 'இப்படி' செல்ஃபி எடுத்தால் 'எப்படி' இருப்பீர்கள் தெரியுமா?

செல்ஃபி எடுக்க பல்வேறு டிப்ஸ்கள் இருந்தாலும், ஐபோன்களில் செல்ஃபி எடுக்க தனி வழிமுறைகள் உள்ளன. ஐபோன்களில் வழங்கப்படும் கூடுதல் அம்சங்கள் செல்ஃபிக்களை அழகாக்கும்.

By GizBot Bureau
|

ஸ்மார்ட்போன்களில் செல்ஃபி எடுக்க பல்வேறு யுனிவர்சல் டிப்ஸ் உண்டு. செல்பி எடுக்கும் போது கேமராவை கண்களில் இருந்து சற்று உயரத்தில் வைத்து எடுப்பது, புகைப்படத்தின் அழகை கூட்டும். எனினும் நீண்ட உயரம் செல்லாமல் இருப்பது செல்ஃபிக்கு சிறப்பு.

ஐபோன் இருந்தால் இப்படியும் செல்ஃபி எடுக்கலாம்.!

உங்களால் முடிந்தால் சிரிக்கலாம், அதெல்லாம் வராது செல்ஃபி அழகாய் இருக்கனும் என்பவர்கள் கேமராவில் முகத்தை யதார்த்தமாக வைத்து கொள்ளலாம். கண்களை நேராக கேமரா முன் காண்பித்து முறைக்காமல் இருப்பது அவசியமாகும்.

செல்ஃபி எடுக்க பல்வேறு டிப்ஸ்கள் இருந்தாலும், ஐபோன்களில் செல்ஃபி எடுக்க தனி வழிமுறைகள் உள்ளன. ஐபோன்களில் வழங்கப்படும் கூடுதல் அம்சங்கள் செல்ஃபிக்களை அழகாக்கும். இங்கு ஐபோனில் செல்ஃபி எடுக்க பத்து பயனுள்ள தந்திரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

  1. வெளிச்சம் மிக முக்கியம்

1. வெளிச்சம் மிக முக்கியம்

சில சமயங்களில் போனின் கேமரா அதிகப்படியான வெளிச்சத்தை எடுத்துக் கொண்டு புகைப்படத்தை ஓவர் எக்ஸ்போஸ் (Overexpose) செய்து விடும். செல்ஃபிக்களை எடுக்கும் போது உங்களின் முகம் தெளிவாக காட்சியளிக்க ஷட்டரை க்ளிக் செய்யும் முன் உங்களது முகத்தை தொட்டு சரியாக ஃபோக்கஸ் செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு செய்யும் போது செல்ஃபி மிக யதார்த்தமாகவும், அழகாகவும் காட்சியளிக்கும்.

புகைப்படம் எடுக்கும் முன் எக்ஸ்போஷர் அளவுகளை மாற்றியமைக்க கைவிரல் கொண்டு திரையில் மேல்புறமாகவும், கீழ்புறமாகவும் ஸ்வைப் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு புகைப்படமும் அழகாக காட்சியளிக்க மிகமுக்கிய அம்சங்களில் ஒன்று வெளிச்சம் தான். நேரடி சூரிய வெளிச்சத்திலும் சற்று சரியான கோணத்தில் நின்று புகைப்படம் எடுத்தால் அழகாக காட்சியளிக்கும்.

2. ஃபோக்கஸ் செய்யவும்

2. ஃபோக்கஸ் செய்யவும்

செல்ஃபி எடுக்கும் போது ஐபோனினை அசைத்தால், அதுவே தானாக ஃபோக்கஸ் செய்யும். இது எல்லா சூழல்களிலும் சிறப்பாக அமையாது.

இதனால் எக்ஸ்போஷர் லாக் செய்ய, நீங்கள் இருக்கும் பகுதியில் திரையை அழுத்திப்பிடிக்க வேண்டும். திரையில் AE/AF லாக் தெரியும் வரை இவ்வாறு செய்யுங்கள்.

இனி ஐபோனை நீங்கள் விரும்பும் படியான ஃபிரேம் கிடைக்கும் வரை மாற்றலாம். நீங்கள் மீண்டும் திரையை டேப் செய்யும் வரை ஃபோக்கஸ் மற்றும் எக்ஸ்போஷர் அளவு மாறாமல் இருக்கும். 2010-ம் ஆண்டு முதல் இந்த அம்சம் வழங்கப்பட்டிருக்கிறது.

3. கேமரா ஃபிளாஷ்

3. கேமரா ஃபிளாஷ்

குறைந்த வெளிச்சம் உள்ள பகுதிகளில் செல்ஃபி எடுக்கும் போது ஸ்கிரீனினை ஃபிளாஷ் போன்று பயன்படுத்தலாம். இந்த அம்சம் ஐபோன் 6எஸ் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டது. திரையில் தோன்றும் ஃபிளாஷ் ஐகானை க்ளிக் செய்தால் வேலை முடிந்தது.

வழக்கமான மற்ற ஸ்மார்ட்போன்களில் ஃபிளாஷ் பயன்படுத்தினால் ஏற்படும் ஓவர்எக்ஸ்போஷர் ஐபோன் மாடல்களில் ஏற்படாது. ஐபோன் கேமரா குறிப்பிட்ட சூழலில் இருக்கும் வெளிச்சத்தை அறிந்து கொண்டு தேவையான அளவு ஃபிளாஷ் வழங்கும். எனினும் மிகவும் குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்யும்.

என்னதான் ஸ்கிரீன் ஃபிளாஷ் இருந்தாலும், குறைந்த வெளிச்சம் உள்ள இடங்களில் சற்றே பிரகாசமான பகுதியில் செல்ஃபி எடுப்பது நீங்கள் எதிர்பார்க்கும் வகையிலான செல்ஃபிக்களை வழங்கும்.

4. நிறம் மாற்றலாம்

4. நிறம் மாற்றலாம்

செல்ஃபி எடுப்பவரின் தோல் சில சமயங்களில் செல்ஃபி அழகை பாதிக்கும் காரணியாக அமையலாம். இவ்வாறான சூழலில், உங்களது முகம் வழக்கத்தை விட மோசமாக பிரதிபலிக்கப்படலாம்.

இதனால் இவ்வாறான சூழல்களில் புகைப்படம் எடுக்கும் முன் ஃபில்ட்டர்களை மாற்றி, செல்ஃபி அழகை மேம்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது ஐபோன் முன்பை விட நிறங்களை சிறப்பாக பிரதிபலிக்கும்.

செல்ஃபி எடுக்கும் முன் ஃபில்ட்டர்களை தேர்வு செய்வது சிறப்பானதாக இருக்கும். ஒருவேளை செல்ஃபி எடுக்கப்பட்டு விட்டால், போட்டோ எடிட்டிங் செயலிகளை வைத்து அழகை சேர்க்கலாம்.

5. போர்டிரெயிட் மோட்

5. போர்டிரெயிட் மோட்

ஐபோன் எக்ஸ் ஸ்மார்ட்போன் வைத்திருப்போர் ஸ்மார்ட் போர்டிரெயிட் மோட் பயன்படுத்தலாம். இந்த அம்சம் ட்ரூடெப்த் கேமரா மூலம் ஸ்டூடியோ போன்ற லைட்டிங் எஃபெக்ட் வழங்குகிறது.

பிரைமரி கேமரா போன்று இந்த அம்சம் அனைத்து சூழல்களிலும் சிறப்பாக வேலை செய்யும். குறைவான வெளிச்சம் உள்ள பகுதிகளில் அதிக சிறப்பான செல்ஃபிக்களை எடுக்காது என்பதோடு, புகைப்படங்களில் அதிக கிரெயின் மற்றும் ஃபோக்கஸ் சரியாக அமையாது.

சரியான சூழலில் செல்ஃபி எடுக்கப்பட்டால், அதன் தரம் சிறப்பானதாக இருக்கும். மிக நேர்த்தியாக ஒரு செல்ஃபி எடுக்கப்பட்டு விட்டால், அது ஸ்டூடியோ அல்லது மேடைகளில் எடுக்கப்பட்டது போன்று இருக்கும்.

6. லைவ் பயன்படுத்தலாம்

6. லைவ் பயன்படுத்தலாம்

ஐபோன் 6எஸ் அல்லது அதற்கும் புதிய மாடல் வைத்திருப்போர் செல்ஃபி கேமராவில் இருக்கும் லைவ் போட்டோஸ் அம்சக்கை பயன்படுத்தலாம். இந்த அம்சம் நீங்கள் ஷட்டரை க்ளிக் செய்யும் முன்பும், பின்பும் குறிப்பிட்டஎண்ணிக்கையில் புகைப்படங்களை எடுத்து விடும்.

லைவ் போட்டோ எடுக்கப்பட்டதும், அதனை போட்டோஸ் செயலியில் ஓபன் செய்தால் சிறப்பான புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். இவ்வாறு செய்யும் போது சரியாக ஃபோக்கஸ் செய்யப்பட்டு இறுக்கும் புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

லைவ் போட்டோஸ் அம்சம் இல்லாதவர்கள் ஷட்டர் பட்டனை அழுத்தி பிடித்தால் பர்ஸ்ட் மோட் எனேபிள் செய்யப்படும், இது குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிக புகைப்படங்களை எடுத்து விடும்.

7. திரையை தொட வேண்டாம்

7. திரையை தொட வேண்டாம்

செல்ஃபி எடுக்கும் போது ஆன்-ஸ்கிரீன் ஷட்டரை தொடுவது செல்ஃபிக்களை பிளர் செய்யும். இதனால் போனின் வால்யூம் ராக்கர் அல்லது இயர்பாட்களை ஷட்டர் கன்ட்ரோல் செய்ய பயன்படுத்தலாம்.

இயர்பாட்ஸ் மற்றும் ஐபோன் 6 அல்லது அதற்கும் புதிய மாடல்களை பயன்படுத்துவோர் கேமரா ஆப் அல்லது ஆப்பிள் வாட்ச் போன்றவற்றை ரிமோட் ஷட்டர் போன்று பயன்படுத்த முடியும்.

செல்ஃபி டைமர் அம்சத்தையும் பயன்படுத்தலாம், இதன் மூலம் நிதானமாகவும், ஃபிரேம் சரியாக இருக்கும் படி செல்ஃபி எடுக்கலாம். புகைப்படம் எடுக்கப்படும் போது ஐபோன் ஆடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

செல்ஃபி எடுக்கும் போது போன் ஆடினால், புகைப்படம் பிளர் ஆக அதிக வாய்ப்புகள் உண்டு. ஐபோன் ஆடாமல் சிறப்பான செல்ஃபி எடுக்க ஐபோனினை இரண்டு கைகளில் பிடித்துக் கொள்ளலாம்.

8. க்ராப் செய்யலாம்

8. க்ராப் செய்யலாம்

செல்ஃபிக்களை எடுத்து முடித்ததும், போட்டோஸ் ஆப் மூலம் அவற்றை ஓபன் செய்து எடிட் ஆப்ஷனில் உள்ள க்ராப் அம்சத்தை க்ளிக் செய்து புகைப்படத்தை சரியான கோணத்தில், சிறப்பான ஃபிரேமில் தேர்வு செய்து தேவையற்றதை க்ராப் செய்திட முடியும்.

தினசரி எடுக்கப்படும் புகைப்படங்களில் பேக்கிரவுன்டு தெரிவது நல்லது தான், எனினும் செல்ஃபிக்களை வேறு இடங்களில் பயன்படுத்த இவை தேவையற்றதாகும். சிறிய அளவில் செல்ஃபி எடுக்கும் போது பேக்கிரவுன்டு இருப்பது அவசியமற்றது.

இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களுக்கு என செல்ஃபி எடுக்கும் போது ஸ்கொயர் மோடில் செல்ஃபி எடுக்கலாம். இந்த அம்சம் பயன்படுத்தும் போது செல்ஃபிக்களை க்ராப் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படாது.

9. நிறம் மாற்றவும்

9. நிறம் மாற்றவும்

முந்தைய ஆப்ஷன்களில் குறிப்பிடப்பட்டதை போன்று புகைப்படங்களை எடிட் செய்து அவற்றை மேலும் சிறப்பானதாக மாற்ற முடியும்.

போட்டோஸ் செயலியில் புகைப்படம் எடிட் செய்யும் போது ஏற்கனவே வழங்கப்பட்டு இருக்கும் ஃபில்ட்டர்களை தேர்வு செய்யலாம். இங்கு பிரைட்னஸ் மற்றும் எக்ஸ்போஷர் உள்ளிட்டவற்றை மாற்றியமைத்து புகைப்படங்களை மேலும் அழகாக்கலாம்.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
10. எக்ஸ்பிரஸ் பயன்படுத்தவும்

10. எக்ஸ்பிரஸ் பயன்படுத்தவும்

போட்டோஷாப் எக்ஸ்பிரஸ் செயலி கொண்டு செல்ஃபிக்களை அழகாக்க முடியும். இதை கொண்டு செல்ஃபிக்களில் ஃபில்ட்டர்களை சேர்க்க முடியும். சில க்ளிக் மற்றும் ஆப்ஷன்களில் புகைப்படத்தின் ஒட்டுமொத்த தோற்றத்தை மேம்படுத்தி விட முடியும்.

Best Mobiles in India

English summary
10 top tips to take better iPhone selfies : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X