ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திராத பத்து தந்திரங்கள்.!

ஜெஸ்ட்யூர் நேவிகேஷனுடன் குழம்பி கொள்ள வேண்டாம். ஒன்பிளஸ் செட்டிங்ஸ் மெனுவில் ஜெஸ்ட்யூர்களை செட் செய்து கொள்ள ஒன்பிளஸ் செட்டிங்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது.

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 6 விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு தகுந்த அம்சங்கள், அதிநவீன மென்பொருள் உள்ளிட்டவை ஸ்மார்ட்போனினை வாங்க தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் நீங்கள் அறிந்திராத பத்து தந்திரங்கள்.!

2018 ஒன்பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் வாங்கியிருப்போர், அதில் அவசியம் பயன்படுத்த வேண்டிய சில சுவாரஸ்ய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பேட்டரி மீட்டர் மாற்றலாம்

பேட்டரி மீட்டர் மாற்றலாம்

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனில் உள்ள வட்ட வடிவம் கொண்ட பேட்டரி மீட்டரை தேர்வு செய்வதோடு, ஐகான்களை சேர்க்கவோ அல்லது அழிக்கவோ முடியும். இதற்கு ஸ்டேட்டஸ் பாரை ஃப்ளிப் செய்தாலே போதுமானது.

செட்டிங்ஸ் -- ஸ்டேட்டஸ் பார் -- பேட்டரி ஸ்டைல் ஆப்ஷன்களுக்கு செல்ல வேண்டும். இங்கு ஸ்டேட்டஸ் பாரில் உங்களுக்கு தேவையான அம்சங்களை தேர்வு செய்து வைத்துக் கொள்ளவோ அல்லது அழிக்கவோ முடியும்.

நேவிகேஷன் பட்டன் வேண்டாம்

நேவிகேஷன் பட்டன் வேண்டாம்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களில் அந்நிறுவனம் ஜெஸ்ட்யூர் சார்ந்த நேவிகேஷன் அம்சங்களை ஏற்கனவே வழங்கி வரும் நிலையில், புதிய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனிலும் இந்த அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஸ்மார்ட்போனின் நேவிகேஷன் பட்டன்களை மட்டும் பயன்படுத்தாமல் ஜெஸ்ட்யூர்களை பயன்படுத்தலாம். இதை எனேபிள் செய்ய செட்டிங்ஸ் -- பட்டன்ஸ் -- நேவிகேஷன் பார் & ஜெஸ்ட்யூர்ஸ் ஆப்ஷனின் கடைசி அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.

மறைக்கப்பட்ட பட்டன் அம்சங்கள்

மறைக்கப்பட்ட பட்டன் அம்சங்கள்

வழக்கமான நேவிகேஷன் பட்டன்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளை செட் செய்ய ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் செட்டிங்ஸ் -- பட்டன்ஸ் ஆப்ஷனில் உள்ள அம்சங்களில் உங்களுக்கு பிடித்தவற்றை தேர்வு செய்து கொள்ள முடியும்.

மறைக்கப்பட்ட ஜெஸ்ட்யூர்கள்

மறைக்கப்பட்ட ஜெஸ்ட்யூர்கள்

ஜெஸ்ட்யூர் நேவிகேஷனுடன் குழம்பி கொள்ள வேண்டாம். ஒன்பிளஸ் செட்டிங்ஸ் மெனுவில் ஜெஸ்ட்யூர்களை செட் செய்து கொள்ள ஒன்பிளஸ் செட்டிங்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது. ஜெஸ்ட்யூர் செட்டிங்களில், இருமுறை டேப் செய்தால் போனினை வேக் செய்ய வைப்பது, மூன்று விரல்களை கொண்டு திரையில் ஸ்வைப் செய்தால் ஸ்கிரீன்ஷாட் எடுப்பது போன்றவற்றை எனேபிள் செய்து கொள்ளலாம். இதனை செட்டிங்ஸ் -- ஜெஸ்ட்யூர்ஸ் ஆப்ஷன்களில் இயக்க முடியும்.

ஸ்லைடரை கஸ்டமைஸ் செய்யலாம்

ஸ்லைடரை கஸ்டமைஸ் செய்யலாம்

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் அலெர்ட் ஸ்லைடர் பட்டனில் மூன்று வித ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. சைலன்ட், வைப்ரேஷன் மற்றும் ரிங்.

செட்டிங்ஸ் -- அலெர்ட் ஸ்லைடர் ஆப்ஷன் சென்றால் இந்த பட்டனில் கூடுதலாக சில வசதிகளை செட் செய்து கொள்ள முடியும்.

ஷெல்ஃப்-ஐ மாற்றவோ அழிக்கவோ முடியும்

ஷெல்ஃப்-ஐ மாற்றவோ அழிக்கவோ முடியும்

ஒன்பிளஸ் ஷெல்ஃப் ஸ்மார்ட்போன் ஹோம் ஸ்கிரீனின் இடது புறத்தில் வெப்பநிலை, சமீபத்தில் பயன்படுத்திய செயலிகள் மற்றும் பல்வேறு இதர தகவல்களை கொண்டிருக்கிறது.

அவற்றில் உங்களுக்கு பயன்தராத ஏதேனும் அம்சத்தை நீக்க வேண்டுமெனில், குறிப்பிட்ட அம்சத்தை அழுத்திப்பிடித்து திரையில் சிவப்பு நிற எக்ஸ் (X) ஐகான் வந்ததும் அதனை க்ளிக் செய்யலாம். இந்த ஷெல்ஃப் அம்சம் செயலியின் விட்ஜெட் பயன்படுத்தி அனைத்து தகவல்களை ஒருங்கிணைக்கிறது.

ஒருவேளை ஷெல்ஃப் அம்சமே வேண்டாம் என்போர், ஹோம் ஸ்கிரீனை அழுத்தி பிடித்து, ஹோம் செட்டிங்ஸ் -- ஷெல்ஃப் ஆஃப் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்

நாட்ச் அவசியம் வேண்டுமா?

நாட்ச் அவசியம் வேண்டுமா?

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் நாட்ச் அம்சத்தை சிறிது காலத்துக்கு மறைக்க வேண்டுமா?

செட்டிங்ஸ் -- டிஸ்ப்ளே -- நாட்ச் டிஸ்ப்ளே ஆப்ஷன்களுக்கு சென்று அதனை மறைக்க முடியும். எல்ஜி ஜி7 தின்க் போன்று ஒன்பிளஸ் 6 நாட்ச் பகுதியில் புதிய நிறம் அல்லது இதர மாற்றங்களை மேற்கொள்ள முடியாது.

ஐகான் பேக் பயன்படுத்தலாம்

ஐகான் பேக் பயன்படுத்தலாம்

ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனின் டீஃபால்ட் ஆப் லான்ச்சர் பிளே ஸ்டோர்களில் உள்ள கஸ்டம் ஐகான் பேக்களை பயன்படுத்த வழி செய்கிறது. இதனால் நோவா போன்ற மூன்றாம் தரப்பு சேவைகளை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

ஐகான் பேக்களை மாற்றியமைக்க, ஹோம் ஸ்கிரீனினை அழுத்தி பிடித்து, ஹோம் செட்டிங்ஸ் -- ஐகான் பேக் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.

கேமரா செட்டிங்

கேமரா செட்டிங்

கேமரா ஆப் செட்டிங்களை கண்டறிவது முதலில் சற்றே கடினமானதாக இருக்கும். செயலியில் கரன்ட் மோட் டைட்டிளை ஸ்வைப் செய்து வலது புற ஓரத்தில் காணப்படும் செட்டிங்ஸ் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

கேமரா செட்டிங்ஸ் ஆப்ஷனில் ஷட்டர் சவுன்ட், லொகேஷன் டேட்டா மற்றும் போர்டிரெயிட் மோட் புகைப்படங்களின் உண்மை புகைப்படத்தை சேவ் செய்வது போன்றவற்றை மாற்றியமைக்க முடியும்.

வேக்-அப் ஆப்ஷன்

வேக்-அப் ஆப்ஷன்

ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே இல்லாமல், ஒன்பிளஸ் 6 ஸ்மார்ட்போனை கையில் எடுத்ததும், ஏதேனும் பட்டனை க்ளிக் செய்து நோட்டிஃபிகேஷன் அல்லது மெசேஜ்களை பார்ப்பது காலப்போக்கில் கடுப்பானதாக மாறிவிடும்.

அந்த வகையில் உங்களுக்கு உதவ வழங்கப்பட்டு இருக்கும் புதிய அம்சமாக லிஃப்ட் டு வேக் இருக்கிறது. இதனை இயக்க செட்டிங்ஸ் --டிஸ்ப்ளே -- ஆம்பியன்ட் டிஸ்ப்ளே போன்ற ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இதில் லிஃப்ட் அப் டிஸ்ப்ளே ஆன் ஆப்ஷனை செயல்படுத்தி கொண்டு கடிகாரம் மற்றும் தனிப்பட்ட மெசேஜ்கள் எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பது போன்ற அம்சங்களை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
10 tips and tricks to get the most out of your OnePlus 6 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X