உங்கள் நேரத்தை மிச்சம்பிடிக்கும் பத்து பயனுள்ள கீபோர்டு ஷார்ட்கட்கள்

ஏற்கனவே தரவுகளை காப்பி, பேஸ்ட் மற்றும் அனைத்தையும் செலக்ட் செய்வதற்கான ஷார்ட்கட்களை தெரிந்து வைத்திருப்பீர்கள்.

|

கம்ப்யூட்டர் சார்ந்த பணி செய்வோர், சிலபல கீபோர்டு ஷார்ட்கட்களை மட்டும் தெரிந்து கொண்டால், பல மணி நேரங்களை சேமிக்க முடியும். ஏற்கனவே தரவுகளை காப்பி, பேஸ்ட் மற்றும் அனைத்தையும் செலக்ட் செய்வதற்கான ஷார்ட்கட்களை தெரிந்து வைத்திருப்பீர்கள். எனினும், விண்டோஸ் இயங்குதளத்தில் பல்வேறு இதர கீபோர்டு ஷார்ட்கட்கள் நம் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.

1. Alt+Tab

1. Alt+Tab

கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர் பெரும்பாலும் ஒரே சமயத்தில் பல்வேறு செயலிகளை இயக்குவர். இவ்வாறு செய்யும் போது செயலிகளிடையே மாறுவதற்கு Alt+Tab க்ளிக் செய்யலாம்.

2. Ctrl+Backspace

2. Ctrl+Backspace

ஒரு எழுத்தை backspace மூலம் அழிப்பதற்கு மாற்றாக, Ctrl மற்றும் backspace பட்டனை க்ளிக் செய்து முழு வார்த்தையையும் அழிக்கலாம். இவ்வாறு செய்யும் போது பத்திகள் மற்றும் வாக்கியங்களை மவுஸ் உதவியின்றி மிக வேகமாக அழிக்க முடியும்.

3. Ctrl+S

3. Ctrl+S

அடிக்கடி ஃபைல்களை சேமிக்கும் போது, கம்ப்யூட்டர் திடீரென ஹேங் ஆனாலும் தரவுகளை இழக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. இவ்வாறு செய்ய டைப் செய்யும் போது இடையிடையே Ctrl+S பட்டன்களை அடிக்கடி பயனஅபடுத்தலாம். இதனை பழக்கப்படுத்திக் கொள்ளும் போது கம்ப்யூட்டர் திடீரென ஹேங் ஆனாலும் தரவுகள் அப்படியே இருக்கும்.

4. Ctrl+Home or Ctrl+End

4. Ctrl+Home or Ctrl+End

தரவுகளை இயக்கும் போது அதன் மேல் பகுதி அல்லது கீழ் பகுதிக்கு செல்ல வேண்டுமா? மவுஸ் கொண்ட ஸ்கிரால் செய்யாமல் Ctrl+Home க்ளிக் செய்து டாக்யூமென்ட் இன் மேல்பகுதியை அடையலாம். இதேபோன்று Ctrl+End க்ளிக் செய்தால் டாக்யூமென்ட் கீழ் பகுதிக்கு சென்றிட முடியும்.

5. Ctrl+Esc

5. Ctrl+Esc

விண்டோஸ் ஸ்டார்ட் பட்டனை மிக வேகமாக இயக்க Ctrl+Esc பட்டன்களை பயன்படுத்தலாம். இவ்வாறு க்ளிக் செய்யும் போது விண்டோஸ் ஸ்டார்ட் மெனு திறக்கும். இனி அம்பு குறிகளை மேலும் கீழுமாக க்ளிக் செய்து தேவையான ஆப்ஷனை தேர்வு செய்யலாம். இவ்வாறு செய்யும்போது வலதுபுற அம்புகுறியை க்ளிக் செய்தால் குறிப்பிட்ட மெனுவின் சப்-மெனு திறக்கும்.

6. Win+Home

6. Win+Home

விண்டோஸ் கம்ப்யூட்டரில் Win+Home பட்டனை க்ளிக் செய்யும் போது அனைத்து செயலிகளும் மினிமைஸ் செய்யப்படும். இந்த ஷார்ட்கட் கொண்டு மிக எளிமையாக டெஸ்க்டாப்பிற்கு சென்றிட முடியும்.

7. Ctrl+Shift+T

7. Ctrl+Shift+T

இணையத்தில் பிரவுஸ் செய்யும் போது தெரியாத்தனமாக டேப் ஒன்றை க்ளோஸ் செய்துவிட்டீர்களா> கவலை வேண்டாம் உடனே Ctrl+Shift+T பட்டன்களை க்ளிக் செய்தால் சமீபத்தில் க்ளோஸ் ஆன டேப் தானாக திறக்கும். இந்த ஷார்ட்கட் உங்களது நேரத்தை மிச்சப்படுத்தாமல், வீண் பதற்றத்தையும் குறைக்கும்.

8. Ctrl+D

8. Ctrl+D

புக்மார்க் ஒன்றை உருவாக்க வேண்டுமா? Ctrl+D பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட இணைய முகவரி புக்மார்க் செய்யப்பட்டு விடும்.

அல்டிமா டுலே - மனித இனம் கடந்த மாபெரும் தூரமும், 7 சுவாரசியமும்!அல்டிமா டுலே - மனித இனம் கடந்த மாபெரும் தூரமும், 7 சுவாரசியமும்!

9. Shift+Del

9. Shift+Del

விண்டோஸ் தளத்தின் ரீ-சைக்கிள் பின் பற்றி பலரும் நன்கு அறிவர். ஒரு தரவினை அழிக்கும் போது அது உண்மையில் அழிக்கப்பட்டிருக்காது. அது தானாக ரீ-சைக்கிள் பின் சென்றுவிடும். பின் நீங்கள் அழித்த தரவினை திரும்பப் பெற ரீ-சைக்கிள் பின் சென்று அதனை ரீஸ்டோர் செய்து விட முடியும். சில சமயங்களில் ரீஸ்டோர் செய்ய வேண்டாம் என கருதும் தரவுகளை நிரந்தரமாக அழிக்க Shift+Del பட்டனை பயன்படுத்தலாம்.

இந்த ஆப் மூலம் ஆண் குரலைப் பெண்ணாக மாற்றி உங்கள் நண்பரைக் கேலி செய்யலாம்.!இந்த ஆப் மூலம் ஆண் குரலைப் பெண்ணாக மாற்றி உங்கள் நண்பரைக் கேலி செய்யலாம்.!

10. F2

10. F2

ஏதேனும் தரவின் பெயரை மாற்ற விரும்பினால் அதில் ஒருமுறை க்ளிக் செய்து பின் மீண்டும் ஒருமுறை க்ளிக் செய்ய வேண்டும். இதனை வேகமாக செயல்படுத்த ஒரு க்ளிக் செய்து F2 பட்டனை தேர்வு செய்ய வேண்டும்.

இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?இந்தியாவில் ரூ.8000 விலையில் கிடைக்கும் சிறந்த மொபைல்கள் யாவை?

இவை தான் விண்டோஸ் தளத்தில் நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஷார்ட்கட்கள் ஆகும். ஷார்ட்கட்களை அறிந்துகொள்ள சில காலம் ஆகும் என்ற போதும், இவை உங்களின் நேரத்தை அதிகளவு மிச்சப்படுத்தும்.

Best Mobiles in India

English summary
10 Keyboard Shortcuts That Can Save You Time: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X