உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தும் எளிமையான கீபோர்ட் ஷார்ட்கட்ஸ்.!
இப்போது வந்துள்ள பல்வேறு கணினி மற்றும் லேப்டாப் சாதனங்களை இயக்க பல்வேறு ஷார்ட்கட் வழிகளை வழங்கி வருகிறது விண்டோஸ் நிறுவனம்.
இப்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பம் நமக்கு பல்வேறு வகையில் உதவியாக உள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன், லேப்டாப், ஐபேட் போன்ற பல்வேறு சாதனங்கள் அனைத்து இடங்களிலும் நமக்கு பயனுள்ள வகையில் இருக்கிறது. இப்போது வந்துள்ள பல்வேறு கணினி மற்றும் லேப்டாப் சாதனங்களை இயக்க பல்வேறு ஷார்ட்கட் வழிகளை வழங்கி வருகிறது விண்டோஸ் நிறுவனம், குறிப்பாக
இந்தப் பயன்பாடு பல்வேறு மக்களுக்கு உபயோகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அலுவலகம் மற்றும் கல்லூரி போன்ற பல்வேறு இடங்களில் இந்த கீபோர்டு ஷார்ட் முறை கண்டிப்பாக உதவும், மேலும் சிறயவர்கள் முதல் பெரியவர்கள் வரை கம்ப்யூட்டரை விட அதிகளவு ஸ்மார்ட்போன்கள் தான் உபயோகம் செய்கின்றனர், ஆனால் கம்ப்யூட்டரில் தான் குறிப்பிட்ட நன்மைகள் உள்ளது. மேலும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் அனைவரும் கீபோர்டு ஷார்ட்க்ட்களை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

F2:
உங்கள் கணினியில் உள்ள கோப்புகளின் பெயர்களை மாற்றியமைக்க கண்டிப்பாக 'F2" ஷார்ட்கட் உதவும்.

F5:
கணினியில் இண்டர்நெட் மற்றும் பல்வேறு கோப்புகளை இயக்கும் போது F5-கிளிக் செய்தால் உடனே Refresh ஆகும்.மேலும் எளிமையாக கணினியில் பல்வேறு பணிகளை செய்ய முடியும்.

Win+L:
Win+L-பயன்படுத்த உங்கள் கணனியை எளிமையாக லாக் செய்ய முடியும்.

Win+I:
Win+I- பயன்படுத்தி உங்கள் கணினியில் உள்ள செட்டிங்ஸ் பகுதியை திறக்க முடியும்.

Win+S:
உங்கள் கணினியில் உள்ள வீடியோ, போட்டோ, கோப்புகள் போன்றவற்றை தேட இந்த Win+S ஷார்ட்கட் உதவும்.

Win+PrtScn:
Win+PrtScn-பயன்படுத்தி உங்கள் கணினியில் ஸ்கிரீன்ஷாட் சேமிக்க முடியும்.

Ctrl+Shift+Esc:
உங்கள் கணினியில் டாஸ்க் மேனேஜர் திறக்க கண்டிப்பாக Ctrl+Shift+Esc உதவும்.

Win+C:
டிஜிட்டல் உதவியாளர் கார்ட்டானா-வை பயன்படுத்த Win+C-கிளக் செய்ய வேண்டும்.

Ctrl + o
கணினியில் பயன்படுத்தும் மென்பொருளை ப்ரோகிராம்களை ஓபன் செய்யும்


Win+X:
உங்கள் கணனியில் மறைக்கப்பட்ட மெனுவைத் திறக்க கண்டிப்பாக Win+X பயன்படும்.


Click it and Unblock the Notifications