கேஜெட்கள் : சாகடிக்காதீங்க பாஸ்.!!

By Aruna Saravanan
|

அதிக பணம் கொடுத்து வாங்கும் கருவிகளை எப்படி பார்த்து கொள்வது என்று பலருக்கும் தெரிவதில்லை. கருவிகள் அடிக்கடி பழுதானால் அதற்கு நீங்களே பல வகையில் காரணமாக இருப்பீர்கள். உங்களுக்கே தெரியாமல் பல தவறுகளை செய்வதால் அடிக்கடி கருவி பாழாகி விடும். வாங்கும்போது காட்டும் அக்கரையை அவற்றை பாதுகாப்பதிலும் காட்ட வேண்டும். அதை பற்றி இங்கு காண்போம்.

மெத்தை

மெத்தை

இதை உங்கள் வசதிகாக அடிக்கடி செய்வீர்கள். இது உங்கள் கருவியை பெரிய அளவில் பழுதாக்கக் கூடும். உங்கள் கருவியை ஒரு வருடத்திற்கு மெத்தையில் கிடத்தினால் பல பிரசனைகள் வரும். இப்படி செய்வதால் லேப்டாப்புக்கு அதிக அளவில் வெப்பம் தாக்கி அதன் உபகரணங்கள் வீணாகி விடும்.

கருவியை மூடிவைப்பது

கருவியை மூடிவைப்பது

உங்கள் டேப்ளெட் அல்லது போனை எல்லா பொருட்களும் எடுத்து செல்லும் பையில் வைப்பது மிகவும் ஆபத்து. இப்படி செய்வதால் அவற்றின் மீது கீரல்கள் ஏற்பட்டு மேலும் பல தீங்கு நிகழ கூடும். சில சமயங்களில் கீறல் விழுந்த திரைகள் தோன்றலாம். ஆகவே கவனம் தேவை.

முறுக்குதல்

முறுக்குதல்

உங்கள் எலக்ட்ரானிக் கேபில் மற்றும் வயர்களை முறுக்கி வைக்கும் பழக்கம் இருந்தால் மாற்றி கொள்ளுங்கள். ஏனென்றால் அவை மிகவும் குறைந்த வாழ்நாளை கொண்டவைகள். அவற்றை முறுக்கி வைப்பதால் விரைவில் பாழாகிவிடும்.

நீண்டநேர சார்ஜ்

நீண்டநேர சார்ஜ்

உங்கள் கருவியை சார்ஜ் செய்வதில் கவனமாக இருக்க வேண்டும். அவற்றை நீண்ட நேரம் சார்ஜ் செய்தால் பழுதாகக்கூடும். சில நேரத்தில் எரியும் அபாயமும் உள்ளது. அதை பல முறை நீங்களே கேள்வி பட்டிருப்பீர்கள். எனவே தேவையான சார்ஜ் ஏறியவுடன் அணைத்து விடவும்.

கெமிக்கல்

கெமிக்கல்

உங்கள் கருவி மற்றும் அதன் கவரை துடைக்க நீங்கள் அதிகமாக கெமிக்கல் இருக்கும் டிடர்ஜண்டை பயன்படுத்தினால் அவை கருவியின் கவரை பாழாக்கிவிடும். துடைப்பதற்கு ஈரப்பதம் கொண்ட துணியே போதும். அதுவும் அதிகமாக அழுக்கு இருந்தால் மட்டுமே துடைக்கவும். அல்லது நல்ல துணியை கொண்டு துடைத்தாலே போதுமானது.

பேக்கப்

பேக்கப்

உங்கள் கருவியை எப்பொழுதும் உங்களுக்கு பிரச்சனை ஏற்படுத்தாது என்று நினைக்க வேண்டாம். சில நேரங்களில் அதன் மென்பொருள் மற்றும் வன்பொருள் பழுதாகக் கூடும். ஆகவே எப்பொழுதும் பென்டிரைவ் போன்ற உபகரணம் கொண்டு பேக்கப் செய்தல் அவசியம்.

மற்ற கருவியை பாதுகாப்பாக நீக்கவும்

மற்ற கருவியை பாதுகாப்பாக நீக்கவும்

நீங்கள் உங்கள் கருவியில் பென்டிரைவ் போன்ற வெளி உபகரணங்கள் பயன்படுத்தினால் கவனம் தேவை. அவற்றை திரும்ப நீக்குதல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் தரவுகள் நீங்கும் அபாயம் உள்ளது மேலும் பல ஆபத்துக்களும் உள்ளது. ஆகவே கவனம் தேவை.

கருவியை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்

கருவியை அதிகமாக பயன்படுத்த வேண்டாம்

உங்கள் லேப்டாப் மற்றும் கணினியை அதிக நேரம் பயன்படுத்தினால் நிறுத்தவும். சிலர் அதில் அதிக நேரம் படம் பார்ப்பது, விளையாடுவது என்று இருப்பார்கள். இதனால் உங்கள் கருவி விரைவில் பழுதாகும் ஆகவே எதற்கும் ஒரு கால அளவு இருந்தால் பொருள் பாழாகாமல் பார்த்து கொள்ள முடியும்.

நிதானம் தேவை

நிதானம் தேவை

சிலர் கருவியின் பொத்தானை இஷ்டப்படி அழுத்துவார்கள். இது முற்றிலும் தவறு. இதனால் உங்கள் கருவியின் பொத்தான் விரைவில் பழாகும். எனவே நிதானம் மிக மிக தேவை உங்கள் கருவியை காப்பாற்ற.

திரவங்கள் கருவியின் அருகில் வேண்டாம்

திரவங்கள் கருவியின் அருகில் வேண்டாம்

நீங்கள் கருவியில் பணி புரியும் போது அருகில் பால் மற்றும் டீ என்று எதையாவது வைத்து ருசிக்கும் பழக்கம் இருந்தால் கவனம் தேவை. அவை கருவியின் மீது சிந்தினால் அது பழுதாகும். நஷ்டம் உங்களுக்குதான்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Ways You're Unintentionally Killing Your Gadgets Tamil.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X