Home
How to

கூகுள் க்ரோம் ப்ரவுஸர் : தெரிந்துகொள்ள வேண்டிய தந்திரங்கள்..!

By Aruna Saravanan

2008-ஆம் ஆண்டு முதல் இணைய சேவையை வழங்கி வரும் கூகுள் க்ரோம் ப்ரவுஸர் உலகெங்கும் வேகமாக வளர்ந்து வருகின்றது என்றே கூற வேண்டும். துவக்கத்தில் இருந்ததை விட பல அம்சங்களை கூடுதலாக வழங்கி வரும் க்ரோம் ப்ரவுஸரை மேலும் சிறப்பாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகளை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்.

01. சலுகைகளை வழங்கும் கூப்பன் :

01. சலுகைகளை வழங்கும் கூப்பன் :

ஆன்லைனில் நாம் செக் செய்யும் போது எல்லாம் கூப்பன் கோட்கள் மற்றும் சேல்ஸை ஹனி தானியங்கியாக தேடுகின்றது. இதற்கு ஹனி பொத்தானை கிலிக் செய்யவும். இது வெப் பக்கத்திற்கு சென்று உங்கள் ஷாப்பிங் கார்டில் கூப்பன் கோட்களை பொருத்தும். இதற்கு கட்டணம் தேவையில்லை.

02. படிக்க உதவும் பாக்கெட் :

02. படிக்க உதவும் பாக்கெட் :

பாக்கெட் உதவியுடன் படிப்பதற்கு என்று எதையும் சேமித்து வைக்க முடியும். நீங்கள் ஏதாவது ஒரு கட்டுரை அல்லது வெப்சைட்டில் உள்ள கருத்துக்களை படிக்க வேண்டும் என்று எண்ணி நேரம் இல்லாமல் தவிக்கின்றீர்களா. அதற்கு பாக்கெட் உங்களுக்கு உதவி புரியும். இதன் மூலம் பிறகு படிப்பதற்கென்று சேமித்து வைத்து கொள்ள முடியும். அதற்கு pocket extension என்ற வாக்கியத்தை கிலிக் செய்தாலே போதுமானது.

03. லாங்குவேஜ் இம்மெர்ஷன் :

03. லாங்குவேஜ் இம்மெர்ஷன் :

Language immersion மூலம் நீங்கள் புதிய மொழியை பயில முடியும். இதன் மூலம் ஆங்கிலத்தில் இருந்து பிற மொழிகளுக்கு வார்த்தை மற்றும் வாக்கியத்தை மொழி மாற்ற முடியும். இதன் மூலம் பிற மொழியையும் அனுபவித்து மகிழலாம். மற்ற செயல்களை செய்யும் பொழுது புதிய மொழியை பயிற்சி செய்ய இது உதவுகின்றது.

04. பேனிக் :

04. பேனிக் :

ஒரு பொத்தானை கிலிக் செய்வதால் எல்லா டேப்களையும் மறைக்க முடியும். இதற்கு பேனிக் பொத்தான் உதவியாக இருக்கின்றது. நீங்கள் பார்க்கும் சைட்களை திடீரென யாராவது பார்க்க நேர்ந்தால் அவர்களிடம் இருந்து அவற்றை உடனே மறைக்க பேனிக் பொத்தானை பயன்படுத்தவும். இது இரண்டு காரணங்களுக்காக பயன்படுகின்றது. முதலில் யாரும் அறியாத படி பிரவுஸரை மூட இரண்டாவது நீங்கள் பார்த்து கொண்டிருந்த சைட்களை குறுகிய இடத்தில் சேமிப்பது என்று இரண்டு செயல்களை செய்கின்றது.

05. ஜிமெயில் செக்கர் :

05. ஜிமெயில் செக்கர் :

கூகுள் மெயில் செக்கர் உண்மையில் மிக உதவியாக இருக்கின்றது. இது யாருக்கு நீங்கள் என்ன மெசேஜ் அனுப்புகின்றீர்கள் மற்றும் மற்றவர் உங்களுக்கு அனுப்பும் மெசேஜ் போன்றவற்றை சேமித்து வைக்கின்றது. இதற்கென நீங்கள் தனியாக எதையும் கிலிக் செய்யாமல் கூகுள் மெயில் செக்கர் உதவியோடு மெசேஜ் பற்றிய தகவலை அறிந்து கொள்ள முடியும்.

06. ஆட் பிளாக் பிளஸ் :

06. ஆட் பிளாக் பிளஸ் :

இதன் மூலம் Ad நிறுத்த முடியும். பேனர் விளம்பரம், பாப் அப்ஸ் போன்றாவற்றை நிறுத்த இது உதவுகின்றது. விளம்பரத்தின் மூலம் பணம் சம்பாதிக்க நினைக்கும் சைட்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க இது ஒரு சிறந்த வழியாகும். AdBlock சபாரி, ஓப்ரா மற்றும் firefox என அனைத்துக்கு உதவி புரியும்.

07. பல டேப்களை திறந்து வைக்க ஒரே டேப் போதும் :

07. பல டேப்களை திறந்து வைக்க ஒரே டேப் போதும் :

நீங்கள் ஒரே நேரத்தில் பல டேப்களை திறந்து வைக்கும் பழக்கம் உள்ளவரா. ஒரே டேப்பில் பல டேப்களை அடுக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா. ஆமாம் செய்ய முடியும். ஒரே டேப் உங்கள் அனைத்து டேப்களையும் வரிசை படுத்தி வைக்கும். இதன் மூலம் உங்கள் கணினியின் மெமரியை காக்க முடியும்.

08. சிம்பிள் பிளாக்கர் :

08. சிம்பிள் பிளாக்கர் :

நீங்கள் முக்கியமான அலுவலை செய்து கொண்டு இருக்கும் போது டிவிட்டர் முகநூல் போன்றவை உங்கள் கவனத்தை ஈர்க்கலாம். அதில் இருந்து தப்பித்து செயலில் கவனத்தை காட்ட இந்த பிளாக்கர் உதவி புரியும். சற்று நேரத்திற்கு எந்த தொல்லையும் இல்லாமல் உங்கள் செயலை நீங்கள் செய்ய முடியும். இது முக்கியமாக மாணவர்களை மனதில் கொண்டு நிறுவப்பட்டது.

09. க்ரோம் ரிமோட் மூலம் மற்ற கணினியில் தொடர்பு கொள்ள முடியும் :

09. க்ரோம் ரிமோட் மூலம் மற்ற கணினியில் தொடர்பு கொள்ள முடியும் :

இதன் மூலம் நீங்கள் மற்ற கணினியுடன் தொடர்பு கொள்ள முடியும். நீங்கள் ஒரு அலுவலை உங்கள் கணினியில் புரிந்து கொண்டு பின்பு அதே வேலையை மற்ற கணினியுடன் இணைத்து செய்ய முடியும். இதனால் உங்கள் கணினி திரையை மற்றவர்களுடன் ஷேர் செய்யவும் முடியும்.

10. புகைப்படம் :

10. புகைப்படம் :

நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் படங்களில் உள்ளவற்றை ஆராய இது உதவியாக இருக்கும். நீங்கள் இணையத்தில் பார்க்கும் படங்களை சர்ச் செய்து அவற்றை பற்றி அறிந்து கொள்ள உதவியாக இருக்கின்றது. இதன் மூலம் தெரியாத இடம் அல்லது லேன்ட்மார்க்கை பற்றி அறிந்து கொள்ளவும் உதவியாக இருக்கின்றது.

11. க்ரோம் டு மொபைல் :

11. க்ரோம் டு மொபைல் :

நீங்கள் அலுவலகத்தில் செய்யும் வேலையை முடிக்க முடியாமல் வீட்டுக்கு எடுத்து செல்லும் தேவை உள்ளதா. அப்படி என்றால் இந்த chrome to mobile உங்களுக்கு உதவும். இதன் மூலம் ஈசியாக வேலையை மொபைலுக்கு அனுப்பி வீட்டில் இருந்து செய்ய முடியும். இதன் மூலம் டெஸ்க் டாப் பிரவுஸர் அனுபவத்தை உங்கள் போனில் பெற முடியும்.

12. போன் இல்லாமல் mighty text மூலம் மெசேஜ் அனுப்ப முடியும் :

12. போன் இல்லாமல் mighty text மூலம் மெசேஜ் அனுப்ப முடியும் :

இதன் மூலம் கணினியில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப முடியும். இதற்காக இனி உங்கள் போனை தேட வேண்டாம். உங்களுக்கு வரும் மெசேஜ்களை பற்றிய அறிவிப்பையும் இது தரும். மற்ற ஆண்ட்ராய்ட் போன்களுக்கு கணினி மூலம் மெசேஜ் அனுப்ப இது மிகவும் சிறந்த வழியாகும்.

13. Grammarly மூலம் உங்கள் எழுத்து பிழைகளை தவிர்க்கலாம் :

13. Grammarly மூலம் உங்கள் எழுத்து பிழைகளை தவிர்க்கலாம் :

நீங்கள் பிழையுள்ள மெயிலை அனுப்பி பின்பு வருந்தியது உண்டா. இனி அவ்வாறு நடக்காமல் இது உதவி செய்யும். Grammarly உதவியுடன் எழுத்து பிழைகளை திருத்த முடியும். மெயிலுக்கு என்று இல்லாமல் மற்ற எல்லா எழுத்துக்களுக்கும் இது உதவும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஆண்ட்ராய்டு போன் இருந்தால் போதும், அஜித் மாதிரி போட்டோ எடுக்கலாம்.!!


போட்டோகிராஃபி ஆரம்பிக்கலாம் : டிப்ஸ் இல்லை, சின்னச்சின்ன அறிவுரைகள்..!

 தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
Useful Google Chrome hacks will change the way you use the internet. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X