கூகுள் நௌ பயன்படுத்த உங்களுக்கு தெரியாத சிறப்பம்சங்களின் தொகுப்பு

Written By:

உங்க மொபைலில் கூகுள் நௌ பயன்படுத்துவது, உங்களுடன் உதவியாள் இருப்பதற்கு சமம், ஆமாங்க கூகுள் நௌ மூலம் உங்க வேலைகளை சிறப்பாக திட்டமிட முடியும். மேலும் பயனச்சீட்டுக்கள், முன்பதிவு மற்றும் உங்களுக்கு தெரியாத விலாசங்கள் என அனைத்தையும் விரல் நுனியில் செய்து விட முடியும். ஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்

இவை அல்லாமல் கூகுள் நொ மூலம் வேறு என்னென்ன செய்ய முடியும் என்பதை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க....

புதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஆய்வு பாடங்கள்

1

கூகுள் நௌ மூலம் உங்களின் அனைத்து தேடல்களும் ஆய்வு முறையில் பரிசீலிக்கப்பட்டு முகவும் துள்ளியமான தேடல்களை அளிக்கும்

நினைவூட்டல்

2

கூகுள் நௌ செயளியில் தொலைகாட்சி நிகழ்ச்சி, இசை என நீங்கள் தேடும் போது "Remind you about new episodes?" என்ற ஆப்ஷன் தெரியும் அதை செயல்படுத்தினால் நீங்க கண்டுகழித்த தொடர்களின் தொடர்ச்சியை நீங்கள் தவற விட்டால் கூகுள் நௌ உங்களுக்கு நினைவூட்டும்

கம்யூட் ஷேரிங்

3

கம்யூட் ஷேரிங் மூலம் நீங்க பயனம் செய்யும் இடத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் அதை உங்கள் நண்பர் மற்றும் குடும்பத்தார் அறிந்து கொள்ள முடியும்.

இதை செயல்படுத்த கூகுள் நௌவின் மெனு சென்று செட்டிங்ஸ் சென்று கூகுள் நௌ சென்று டிராபிக் ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும்

ஜிமெயில் கார்டு மற்றும் முன்பதிவுகள்

4

ஜிமெயில் அக்கவுன்ட் மூலம் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தால், இனி நீங்க கூகுள் நௌ பயன்படுத்தலாம், இது உங்க முன் பதிவு விவரங்களை தனித்தனி கார்டுகளாக பிரித்து காட்டும்.

இதை செயல்படுத்த கூகுள் நௌ மெனு சென்று செட்டிங்ஸ் - கூகுல் நௌ - ஜிமெயில் கார்ட்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்

கூகுள் குரல்

5

வாய்ஸ் ஸ்பீச் ஆப்ஷனை செயல்படுத்த கூகுள் நௌ - மெனு - செட்டிங்ஸ் - வாய்ஸ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யுங்கள்.

இப்போ உங்க குரல் மூலம் தேடல்களை மேற்கொள்ள கூகுள் என்று சொன்னாலே போதுமானது.

படங்கள்

6

கூகுள்+ தளத்தில் நீங்க பதிவேற்றம் செய்த படங்களை இனி கூகுளில் தேட முடியும், ஆனால் இந்த வசதி தற்சமயம் அமெரிக்காவில் மட்டும் தான் செயல்படுத்தப்பட்டுள்ளது

கூகுள் நௌ டிவி கார்டுகள்

7

ஸ்மார்ட் டிவி பயன்படுத்துபவர்கள் கூகுள் நௌ டிவி கார்டுகள் மூலம் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள முடியும்

க்ரோம்

8

டெஸ்டாப்பில் கூகுள் நௌ பயன்படுத்த வேண்டுமா, உங்க கணினியின் கூகுள் க்ரோம் ஓபன் செய்து chrome://flags/ டைப் செய்யுங்கள். இப்போ உங்களுக்கு கூகுள் நௌ, மற்றும் பல அப்ளிகேஷன்கள் தெரியும்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Tricks To Get The Most Out of Google Now. Check out the important tricks you must know to get the best use of Google Now.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot