ஆன்லைன் ஷாப்பிங்.! கவனமாக இருப்பது எப்படி.??

By Aruna Saravanan
|

ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது பிரபலமாகி வரும் நேரத்தில் அதன் ஆபத்தையும் அநைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அமர்ந்த இடத்தில் இருந்த படியே ஷாப்பிங் செய்வது சுலமபமான செயல்தான் என்றாலும் அதில் பல ஆபத்துக்கள் உள்ளன.

நீங்கள் ஷாப்பிங் செய்ய பயன்படுத்தும் இணையதளங்களில் உங்கள் ரகசியம் காப்பற்ற படுகின்றதா, உங்கள் க்ரெடிட் மற்றும் டெபிட் கார்டு பற்றிய தகவல் ரகசியமாக இருக்கின்றதா என்பதை நீங்கள் அறிந்து கொள்வது மிக மிக அவசியம். இதை பற்றி இங்கு காண்போமா.

போலி இணையம்

போலி இணையம்

போலியான இணையதளங்களை நீங்கள் எப்பொழுதும் அடையாளம் காண முடியாது. ஆனால் சிவப்பு கொடி இருந்தாலோ, வினோதமான அல்லது அர்த்தமற்ற வெப் முகவரி, இருந்தாலும்க குழப்பத்தை ஏற்படுத்தும் பாப்-அப் விண்டோக்கள் இருந்தால் நிச்சயம் குறிப்பிட்ட இணையம் போலியானதே.

ஹைப்பர்லிங்ஸ்

ஹைப்பர்லிங்ஸ்

நம்ப முடியாத சலுகைகள் வழங்குவதாக கூறும் இமெய்ல்கள் அனைத்தும் போலியானவையே. அவைகளின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டாம். இதனால் நீங்கள் போலியான இணையத்தை தவிர்க்க முடியும். இதை தவிர்க்க ஹைப்பர் லிங்கை கிலிக் செய்வதை தவிர்த்து வெப் முகவரியில் நீங்களே டைப் செய்யுங்கள்.

பாதுகாப்பான இணையங்களில் ஷாப்பிங் செய்யவும்

பாதுகாப்பான இணையங்களில் ஷாப்பிங் செய்யவும்

இணைய முகவரில் httpக்கு பதில் https என்று பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இருக்கும். அதோடு, கணினியின் ஆண்டி-வைரஸ் மென்பொருளை அடிக்கடி அப்டேட் செய்து கொள்ள வேண்டும். இதனால் ஆன்லைனில் வரும் தேவையில்லாத வைரஸ்களை தவிர்க்க முடியும்.

குறியீடு

குறியீடு

செக் அவுட் நிகழ்வின் போது உங்கள் பாதுகாப்பு குறியீட்டு எண்ணை யாராவது கேட்டால் தயவு செய்து பகிர வேண்டாம். அது முற்றிலும் போலியானதாகவே இருக்கும்.

க்ரெடிட் கார்டு

க்ரெடிட் கார்டு

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போது டெபிட் கார்டு வேண்டாம் க்ரெடிட் கார்டு போதும் என்பதற்கான ஒரே காரணம் இதுதான். உங்கள் க்ரெடிட் கார்டு கணக்கில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருந்தால் அந்த கம்பனிக்கு நீங்கள் கூறினால் போதும் அவர்களே பார்த்து கொள்வார்கள்.
உங்கள் தொலைந்து போன கார்டிற்கான சார்ஜை கூட கம்பனி பார்த்து கொள்ளும் வசதி க்ரெடிட் கார்டிஇல் உள்ளது. உங்கள் க்ரெடிட் கார்டு கணக்கு அறிக்கையை அடிக்கடி சரி பார்த்து கொள்ள வேண்டும்.

பாஸ்வேர்டு மாற்றவும்

பாஸ்வேர்டு மாற்றவும்

நீங்கள் வங்கி கணக்கு, வர்த்தகங்கள் என பலவற்றுக்கு வெவ்வேறு பாஸ்வேர்டினை பயன்படுத்த வேண்டும் என்பதால் எல்லா பாஸ்வேர்டுகளையும் நினைவில் வைத்து கொள்வது சிரமமான விஷயம். பாதுகாப்பான டாக்குமென்டில் அனைத்து பாஸ்வேர்டுகளையும் எழுதி வைக்கலாம். இதை விடுத்து சுலபமான பாஸ்வேர்டினை மாற்றாமல் வைத்திருந்தால் பிரச்சனை உங்களுக்கு தான்.

உரிமை

உரிமை

நீங்கள் ஆர்டர் செய்த பொருள் குறித்த நேரத்திற்கு வரவில்லை என்றால் நீங்கள் தாராலமாக அதை டெலீட் செய்து விடலாம். போலியான பொருட்களாக இருந்தாலும் பொருளை வாங்க தேவையில்லை.

மொபைல் ஷாப்பிங் ஜாக்கிரதை

மொபைல் ஷாப்பிங் ஜாக்கிரதை

மொபைல் போனில் ஷாப்பிங் செய்யும் போது அதிக கவனம் தேவை. மொபைல் போனில் அதற்காக செக்யூரிடியும் உள்ளது. பொது வை-பை உங்களுக்கு எப்பொழுதும் ஏற்றதாக இருக்கும். இதிலும் உங்கள் தனிப்பட்ட விஷயங்கள் பரவும் ஆபத்து உள்ளது. ஆகவே பொது தளங்களில் உங்கள் பாஸ்வேர்டு மற்றும் க்ரெடிட் கார்டு பற்றிய தகவல்களை பதிவு செய்ய வேண்டாம்.

சமூக வலைதளம்

சமூக வலைதளம்

வியாபாரத்தை பெருக்க சில நேரங்களில் பல வர்த்தகர்களும் சமூக வலைதளத்தை பயன்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்களின் கணக்கு ஊடுருவல் செய்யப்படலாம். அதன் மூலம் உங்களுக்கு ஆபத்தான குறுந்தகவல்கள் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகையால் முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பது நல்லது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil some simple Tips for staying safe while shopping online.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X