உங்க அளவுக்கு உங்களோட கம்ப்யூட்டரும் வேகமாக இயங்கனுமா, அப்படியானால் இதையெல்லாம் செய்தால் போதும்
உங்க கம்ப்யூட்டர் வாங்கும் போது இருந்த வேகம் இப்போ இல்லையா, உடனே கவலை படாமல் இதை செய்யுங்கள். அதன் பின் உங்க கணினியின் வேகம் அதிகரிக்குதா இல்லையா என்று பாருங்க..

மென்பொருள்
கணினி வாங்கும் போது ஆர்வ கோளாறுல பல மென்பொருள்களை இன்ஸ்டால் செய்திருப்பீர்கள், அவ்வாறு இன்ஸ்டால் செய்ததில் நீங்கள் பயன்படுத்தாத பெரிய மென்பொருள்களை அன் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

ஸ்டார்ட்அப் ப்ரோகிராம்ஸ்
உங்க கம்ப்யூட்டரில் ஸ்டார்ட் பட்டனை க்ளிக் செய்து msconfig என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்து ஸ்டார்ட்அப் லிஸ்டில் இருக்கும் தேவை இல்லாத மென்பொருள்களை எடுத்து விடுங்கள்.

டிஸ்க் க்ளீன் அப்
இம்முறை விண்டோஸ் கணினியில் இருக்கும் தேவையில்லாத பெரிய ஃபைல்களை ஸ்கேன் செய்யும். இதன் மூலம் கணினியில் தேவையில்லாத ஃபைல்களை அழித்து விடலாம்.

க்ளீன் அப் மென்பொருள்
இன்டர்நெட்டில் கிடைக்கும் சில மென்பொருள்களை கொண்டும் கணினியை க்ளீன் செய்யலாம்.

ட்ரபுள் ஷூட்டர்
கணினியில் இருக்கும் ஆக்ஷன் சென்டரை பயன்படுத்தி உங்கள் கணினியில் இருக்கும் ஆபத்தான மென்பொருள் மற்றும் செயலிகளை எடுத்து விடலாம்.

மால்வேர்
இன்டர்நெட்டில் தெரியாத மென்பொருள்களை இன்ஸ்டால் செய்து அதன் மூலம் கணினியில் மால்வேர் வந்து விட்டதா, அப்படியானால் ஆன்டி மால்வேர் மென்பொருள்களை கொண்டு அதை எடுத்து விடுங்கள்.

ரேம்
சில சமயங்களில் தேவையான அளவு ரேம் இல்லாததும் கணினியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம், அதனால் ரேமை அதிகரிப்பது நல்ல தீர்வாக அமையும்.

ஹார்டு டிரைவ்
ரேம் போன்றே ஹார்டு டிரைவில் போதுமான ஸ்பேஸ் இல்லாத சமயங்களில் கணினியின் வேகம் குறையும், அதனால் ஹார்டு டிரைவினை மாற்றலாம்.

அப்கிரேடு
பழைய விண்டோஸ் பயன்படுத்தினால் அதனினை அப்கிரேடு செய்வது நல்ல பலன்களை தரும்.


Click it and Unblock the Notifications