ஆண்ட்ராய்டு கருவியில் சிறப்பான வை-பை பெறுவது எப்படி
வை-பை அதிக பேட்டரியை பயன்படுத்த ஆரம்பித்தால் உங்களது இண்டர்நெட் வேகம் மற்றும் வைபை கனெக்ஷனில் கோளாறு இருக்க கூடும். வைபை பிரச்சனை எங்கும் இருக்க தான் செய்கின்றது.
இங்கு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் சிறப்பான வை-பை சேவையை பெறுவது எப்படி என்பதை பாருங்கள்..

அப்ளிகேஷன்
வைபை சிக்னலை மேம்படுத்த அப்ளிகேஷன்கள் அதிகளவில் வேலை செய்யாது என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர். இருந்தும் இவைகளை முயற்சித்து பார்க்கலாம். ப்ளே ஸ்டடோரில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்ட செயலிகளான வைபை பூஸ்ட்டர் மற்றும் ஈசி அனலைசர் போன்றவைகளை பயன்படுத்தலாம்.

கனெக்ஷன்
ஆன்டிராய்டின் செட்டிங்ஸ் மெனுவில் இருக்கும் ஆப்ஷன் சீரான சிக்னல் இல்லாத வைபை கனெக்ஷன்ளை தவிர்த்து விடும், இதன் மூலம் சிறப்பான வைபை நெட்வர்க்களுடன் இணைவதோடு அதிகளவிலான மின்சாரம் சேமிக்கப்படுகின்றது. இதை செயல்படுத்த செட்டிங்ஸ் -- வைபை -- மெனு பட்டனில் இருக்கும் அட்வான்ஸ்டு ஆப்ஷனில் avoid poor connections என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

பாத்திரம்
சிறப்பான வைபை சிக்னலை பெற பாத்திரங்களையும் பயன்படுத்தலாம். இதற்கு பெரும்பாலும் மெட்டல் பாத்திரங்களை பயன்படுத்துவது நல்ல பலன்களை தரும்.

அப்டேட்
கஸ்டம் ரோம் கொண்ட போன்களில் ரேடியோவினை சீராக அப்டேட் செய்வது நல்ல பலன்களை தரும்.

கனெக்ஷன்
முடிந்த வரை குறைந்த வேகத்தில் கிடைக்கும் வைபைகளை பயன்படுத்தாமல் இருக்கலாம். இதன் மூலம் உங்களது பேட்டரி அதிகளவில் சேமிக்கப்படும்.

ஆன்டெனா
அதிக படியான கேஸ்கள் வைபையின் சிக்னல்களை பாதிக்க கூடும். இதனை உறுதி செய்து கொள்ள Ookla ஸ்பீடு டெஸ்ட் செய்வது நல்ல பலன்களை தரும்.

வைபை அக்சஸ் பாயின்ட்
வைபை அனலைசர் அப்ளிகேஷன் மூலம் சிறந்த கனெக்ஷனை வழங்கும் நெட்வர்க் எதுவென்று அறிந்து கொள்ள முடியும்.

வயர்லெஸ் நெட்வர்க்
ரவுட்டர் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை மாற்றலாம். சிறந்த சிக்னல் கிடைக்கும் இடத்தில் பொருத்தினால் சீரான வேகம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications