பழைய ஸ்மார்ட்போன் : கவனிக்க வேண்டியவை..!!
பழைய ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா, அப்ப சரியான தளத்தில் தான் இருக்கீங்க, எப்பவும் புதிய டாப் 10 பட்டியல் பதிவு செய்தாலும் எல்லாரும் எப்பவும் புதிய பொருளையே வாங்க மாட்டாங்க என்பதை கருத்தில் கொண்டு பழைய கருவிகளை விரும்புவோருக்காகவே இந்த பிரத்யேக பதிவு.
உங்களை பின்தொடரும் ஸ்மார்ட்போன், தடுப்பது எப்படி..??

பில்
பழைய ஸ்மார்ட்போன் வாங்கும் போது கட்டாயமாக பில், கருவியுடன் வழங்கப்பட்ட கூடுதல் கருவிகளையும் கேட்டு பெற வேண்டும். இதன் மூலம் நீங்கள் திருட்டு பொருளை வாங்க வில்லை என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.

ரேம்
ரூ.10,000 பட்ஜெட்டில் 2 ஜிபி ரேம் கொண்ட கருவிகள் மிகவும் சாதாரணமாகிவிட்டது, இதனால் பழைய கருவி வாங்கும் போது முடிந்த வரை அதில் 2 ஜிபி ரேம் உள்ளதாக தேர்வு செய்யுங்கள். மேலும் மீடியாடெக் சிப்செட் கொண்ட கருவிகளை வாங்க வேண்டாம், அவை சற்று பழையதாகிவிட்டது, மாற்றாக குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட கருவிகளை வாங்கலாம், இவை அதிக பேட்டரி பேக்கப் வழங்கும் திறன் கொண்டவை.

திருட்டு கருவி
முடிந்த வரை எந்த பொருளை வாங்கும் போதும் அவை திருட்டு பொருள் இல்லை என்பதை சரி பார்க்க வேண்டும். அந்த வகையில் பழைய ஸ்மார்ட்போனினை வாங்கும் போது கருவியில் *#06# என டைப் செய்து ஐஎம்ஈஐ நம்பரை குறித்து கொண்டு அதனினை IMEIdetective.com இணையதளத்தில் போட்டு அவை திருட்டு கருவி இல்லை என்பதை சரி பார்த்து கொள்ளலாம்.

ஹார்டு வேர்
நேரடியாக கருவியை வாங்கும் போது வாங்க இருக்கும் கருவியை லாப்டாப் அல்லது கணினியுடன் யுஎஸ்பி கேபிள் மூலம் இணைத்து சரியாக சார்ஜ் ஆகின்றதா, தகவல் பறிமாற்றம் சரியாக நடக்கின்றதா என்பனவற்றை சரி பார்த்து கொள்ளுங்கள்.

பேபால்
ஈபே போன்ற தளங்களில் பேபால் மூலம் பணம் செலுத்த முடியும், இவ்வாறு செய்யும் போது ஒரு வேளை கருவியை நீங்கள் திரும்ப கொடுத்தால் பணம் பெறுவது எளிதாக முடியும்.

ஃபேஸ்புக்
இன்று பழை கருவிகளை வாங்க ஃபேஸ்புக் சிறந்த இடமாக இருக்கின்றது. இங்கு கருவிகளை வாங்கும் போது ஏமாறாமல் இருக்கலாம்.

வாரண்டி
பழைய கருவிகளை வாங்கும் போது அந்த கருவிக்கு தகுந்த வாரண்டி இருக்கின்றதா என்பதை பார்த்து கொள்ளுங்கள், முடிந்த வரை வாரண்டி உள்ள கருவிகளை வாங்குவது நல்லது, இவ்வாறு வாங்கும் போது கருவியில் பிரச்சனை ஏற்பட்டால் அதனினை முறையாக சரி செய்து கொள்ளலாம்.

முகநூல்
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம்


Click it and Unblock the Notifications