ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் அழித்த தகவல்களை மீட்க ஏழு வழிகள்.!!

By Aruna Saravanan
|

முக்கியமான செய்தியை உங்கள் போனில் இருந்து தெரியாமல் அழித்து விட்டீர்களா. கவலை வேண்டாம். அழித்த செய்தியை எப்படி திரும்ப பெறுவது என்பதை பற்றி எங்களிடம் வழி உள்ளது. நீங்கள் ஆன்லைனில் தேடினால் இவ்வாறு அழிக்கப்பட்ட தகவலை திரும்ப பெருவதற்கு உதவி புரியும் பல பயன்பாடுகள் (Apps) கிடைக்கும். அத்தகைய கருவிகளை கொண்டு பயன் அடைந்து கொள்ள முடியும்.

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் அழிக்கப்பட்ட தகவலை திரும்ப பெறுவதற்கான வழிகளை நாங்கள் கொடுக்கின்றோம். ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள் நாங்கள் கொடுக்கும் வழிகள் நீங்கள் சமீபத்தில் அழித்த செய்திகளை பெறுவதற்கு மட்டுமே உதவும்.

டெவலப்பர் ஆப்ஷன்

டெவலப்பர் ஆப்ஷன்

முதலில் உங்கள் ஆண்ட்ராய்ட் போனின் செட்டிங் செல்லவும், அதில் அபவுட் போன் (About Phone) என்று இருக்கும் அதில் பில்டு நம்பர் (Build Number) செல்லவும். பின் பில்டு நம்பர் என்ற இடத்தின் மீது டெவலப்பர் ஆப்ஷன் (developer option) செயல் படுத்தபடுகின்றது (enable) என்ற அறிவிப்பு கிடைக்கும் வரை தட்டவும்.

செட்டிங்ஸ்

செட்டிங்ஸ்

இப்பொழுது, மறுபடியும் செட்டிங் செல்லவும். இதன் பின் உங்களுக்கு மெனுவில் டெவலப்பர் ஆப்ஷன் கிடைக்கும். அதன் மீது க்ளிக் செய்து யுஎஸ்பி டீபக்கிங் (USB debugging) என்பதை தேர்வு செய்யவும்.

கணினி

கணினி

உங்கள் ஆண்ட்ராய்ட் போனில் நீங்கள் யுஎஸ்பி டீபக்கிங் ஆப்ஷனை செயல்படுத்திய உடன் அதாவது எனேபிள் (enable) செய்தவுடன் கணினியுடன் இணைத்து விடவும்.

வன்டர்ஷேர்

வன்டர்ஷேர்

வன்டர்ஷேர் ட்ரையல் (Wondershare trial) பயன்பாட்டின் இலவச பதிப்பை நீங்கள் முன்பே தரையிரக்கம் (download) செய்யாமல் விட்டிருந்தால் இப்பொழுது நிறுவி கொள்ளுங்கள். குறிப்பு: தரவு மீட்பு கருவியை நீங்களே தேர்வு செய்து கொள்ள முடியும்.

மீட்பு

மீட்பு

ஆண்ட்ராய்டு போனை உங்கள் கணினியுடன் இணைத்த பின் டீபக்கிங் ஆப்ஷன் (debugging option) செயல்படுத்தப் பட்டுவிட்டதா என்பதை கவணித்து கொள்ளுங்கள். இப்பொழுது வன்டர்ஷேர் ட்ரையல் பேக் கிடைக்கும் அதை ரன் செய்யவும்.

ரிக்கவரி

ரிக்கவரி

இப்பொழுது ரிக்கவரி ப்ரோகிராமில் (recovery programe) உள்ள வழிகளை பின்பற்றி உங்கள் போனை அடையாளம் காணுங்கள். பின்பு உங்கள் போனின் மெமரியை ஸ்கேன் செய்ய கருவியை அனுமதியுங்கள்.

ஸ்கேன்

ஸ்கேன்

ஸ்கேன் செய்யும் செயல் முடிவடைந்ததும் உங்கள் போனில் உள்ள அழிக்கப்பட்ட மற்றும் நீக்கப்படாத கோப்புகளை பார்வையிடவும். இப்பொழுது அழிக்கப்பட்ட செய்திகளை தேர்வு செய்து கீழே உள்ள மறுபடியும் செய்தியை மீட்கும் தேர்வான ரிக்கவர் (recover) என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

English summary
Read here in Tamil how to recover deleted SMSes on Android smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X