ஸ்மார்ட்போன் அடிக்கடி செயல் இழப்பதை தவிர்க்க பத்து டிப்ஸ்.!!

By Aruna Saravanan
|

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிக அளவில் காணப்படுகின்றது. இந்த நேரத்தில் வரும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை போன் ஹேங் (phone hang). அதாவது போன் அடிக்கடி செயல் இழந்து போவது. அவசரமாக ஒருவருக்கு தகவல் கொடுக்க நினைத்து போன் செய்ய எடுத்தால் போன் ஹேங் என்றால் எப்படி இருக்கும்.

இதற்கு நீங்கள் கோபப்பட தேவையில்லை. ஏனென்றால் இதற்கு நீங்களும் ஒரு காரணமாக இருக்கின்றீர்கள். ஸ்மார்ட்போன் தான் இருக்கின்றதே என்று அதை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதுதான் மிகப்பெரிய காரணம்.

ஸ்மார்ட்போன் என்றாலும் அதுவும் மெஷின் தானே. அதற்கென்று சில விதி முறைகள் இருப்பதை நாம் மறந்து விடுகின்றோம். எண்ணற்ற தரவுகளை டவுன்லோட் செய்தல். பாடல்கள், வீடியோக்கள் என்று பலவற்றை சேமித்து வைத்தல், போனின் மெமரியை நிரப்பி வைத்திருப்பது போன்ற பல தவறுகளை நாம் செய்கின்றோம். இதனால் நம்மையும் அறியாமல் போனுக்கு தீங்கு ஏற்படுத்துகின்றோம்.

ஒரு கட்டத்துக்கு மேல் ஸ்மார்ட்போன் தாக்கு பிடிக்க முடியாமல் செயல் இழந்து போகக் கூடும். வீட்டில் இருக்கும் பிசிஓ (PCO) எப்படியோ அப்படிதான் இதுவும். அதுவும் நுணுக்கமாக தயாரிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனை சரிவர பராமரிக்கா விட்டால் நஷ்டம் நமக்குதான். அதிக பணம் கொடுத்து வாங்கும் ஸ்மார்ட் போனை ஹேங் ஆகாமல் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

ரேம்'ஐ (RAM) காலி செய்தல் அவசியம்

ரேம்'ஐ (RAM) காலி செய்தல் அவசியம்

பல ஸ்மார்ட் போன்கள் அப்படியே ஹேங் ஆகி நின்று விடுகின்றது. இதற்கு காரணம் ரேம் (RAM) சுத்தமாக இல்லாததுதான். அவ்வபொழுது ரேம்'ஐ கிலியர் செய்ய வேண்டும். அதில் தேவையான இடம் இல்லையென்றால் இப்படிதான் போன் மக்கர் பண்ணும். ஆகையால் ரேமில் இடம் இருக்கின்றதா என்று பார்த்து பின் தரையிறக்கம் அதாவது டவுன்லோடு செய்தல் அவசியம். இடம் இல்லையென்றால் மற்ற அப்ளிகேஷன்களை நீக்கி தேவையான மெமரியை ரேமுக்கு கொடுத்தால் போன் அடிக்கடி ஸ்தம்பித்து நிற்பதை தவிர்க்கலாம்.

பின்னணி பயன்பாடுகளை (Background Application) மூடவும்

பின்னணி பயன்பாடுகளை (Background Application) மூடவும்

சில பின்னணி பயன்பாடுகள் தேவையில்லாமல் இடத்தை நிரப்பி கொண்டிருக்கும். இதனால் போனுக்கு கெடுதல் தான் அடிக்கடி நின்றும்விடும். இதை தவிர்க்க தேவையில்லாத பின்னணி பயன்பாடுகளை அவ்வபோது நீக்கிவிட வேண்டும். டாஸ்க் மேனஜர் பயன்பாட்டை விண்டோ பயன்பாட்டுக்கு தரவிரக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.

லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும்

லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும்

அனிமேஷன் செய்யப்பட்ட அல்லது லைவ் வால்பேப்பரை தவிர்க்கவும். இல்லையென்றால் இவை ரேம்'ஐ பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் போனின் சாதனத்தை எளிமையாக வைத்து கொள்ளுங்கள். இதனால் போன் அடிக்கடி செயல் இழந்து போய் நிற்பதை தவிர்க்க முடியும்.

தரவுகளை எஸ்டி கார்டுக்கு மாற்றவும்

தரவுகளை எஸ்டி கார்டுக்கு மாற்றவும்

போனின் மெமரியில் (memory) பல தரவுகளை சேமித்து வைத்தாலும் போன் செயல் இழந்து போகக் கூடும். உங்கள் அண்ட்ராய்டு போனில் இந்த பிரச்சனையை தவிர்க்க போனில் உள்ள பாடல், வீடியோ போன்ற சேமித்து வைத்திருக்கும் எல்லா தரவுகளையும் எஸ்டி கார்டுக்கு மாற்றவும்.

எண்ணற்ற டேப்ஸ் (Tabs) வேண்டாம்

எண்ணற்ற டேப்ஸ் (Tabs) வேண்டாம்

நீங்கள் உங்கள் போனை பயன்படுத்தி நெட்டை பயன்படுகின்றீர்கள் என்றால் அதில் எண்ணற்ற டேப்ஸை திறக்க வேண்டாம். இதனால் உங்கள் போனின் ரேம் பாதிப்படையும். பின் போன் அடிக்கடி செயல் இழந்து போகும். எனவே ஒரு நேரத்தில் ஒரு டேப் போதுமே.

பலவித பயன்பாடுகள் (apps) வேண்டாம்

பலவித பயன்பாடுகள் (apps) வேண்டாம்

விலை கம்மியான மற்றும் குறைவாக சேமிக்கும் திறன் கொண்ட ஸ்மார்ட்போனை பயன்படுத்தினால் மிகுந்த கவனத்துடன் இருத்தல் அவசியம். அதன் பயன்பாடுகள் (apps) பற்றிய அறிவு இருக்க வேண்டும். அதில் அதிக அளவில் ஆப்ஸ் பயன்பாடு வேண்டாம். இதனால் போனை நீண்ட நாளுக்கு காப்பற்ற முடியும்.

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தேவை

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் தேவை

உங்கள் ஸ்மார்ட்போனில் எது இருக்கின்றதோ இல்லையோ ஆண்டி வைரஸ் அதாவது வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் பொருத்தப்பட வேண்டும். இதனால் வைரஸ் பாதிப்பில் இருந்து உங்கள் போனை காப்பற்ற முடியும்.

கேச் காலியாக இருத்தல் அவசியம்

கேச் காலியாக இருத்தல் அவசியம்

நாம் போனில் பயன்படுத்தும் ஆப்ஸ்க்கு என்று தனியாக கேச் உறுவாகும். இந்த கேச் நிரம்பி வழிந்தால் போன் அடிக்கடி செயல் இழந்து போகக் கூடும். இதை தவிர்க்க கேச்சை அடிக்கடி சுத்தம் செய்து வைத்தல் அவசியம்.

உங்கள் டிவைஸை அப்டேட் செய்யவும்

உங்கள் டிவைஸை அப்டேட் செய்யவும்

போனில் அடிக்கடி செயல் இழக்கும் பிரச்சனை தோன்றினால் உங்கள் டிவைஸை அப்டேட் செய்ய வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள். இதனால் போனுக்கு மென்பொருள் பிரச்சனை வந்து விட்டது என்று அர்த்தம். ஆகையால் உங்கள் போனின் மென்பொருளை ஆராய்ந்து அப்டேட் செய்து கொள்ளுங்கள் இதனால் போனின் ஆயுளை நீடிக்க வைக்க முடியும். இதை அபவுட் போன் (About phone) என்ற பகுதியில் ஆராய்ந்து கொள்ள முடியும்.

தேவையில்லாத தரவுகளை நீக்கவும்

தேவையில்லாத தரவுகளை நீக்கவும்

உங்கள் போனில் நீங்கள் தேவையில்லாத தரவுகளை சேமிக்கக் கூடும். இதனால் போனின் பயன்பாடு குறைய வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க தேவையில்லத தரவுகளை அவ்வபோது நீக்கி போனின் மெமரியை சுத்தமாக வைத்தாலே பாதி பிரச்சனை தீர்ந்தது.

 முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

Best Mobiles in India

Read more about:
English summary
Read here in Tamil some Simple Ways to Solve Hanging Problem in your Smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X